Sunday, November 17, 2013

ஆகக்குறைந்த நாட்டுத் தலைவர்கள் கலந்துகொண்ட CHOGM 2013

இலங்கை நாட்டில் மனித உரிமை மீறல்கள் நிலவுவதாகவும், அது பொறுப்புக் கூறும் தன்மையிலிருந்து விடுபட்டு நிற்பதாகவும்  காரணம் காட்டி இலங்கை கொழும்பில் நடைபெறும் பொதுநலவாய நாடுகள் மாநாட்டினை புறக்கணிப்பதுடன், 2015ம் ஆண்டு தமது நாட்டில் நடைபெறவிருந்த பொதுநலவாய நாடுகள் மாநாட்டினை தாம் கைவிடுவதாகவும் மொறீசியஸ் நாடானது அறிவித்தற்கமைவாக அந்த வாய்ப்பு மோல்டா நாட்டிற்கு கிடைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன


CHOGM  இதுவரை நடைபெற்ற நாடுகள்…!

1) 1971 - சிங்கப்பூர், சிங்கப்பூர்

2) 1973  - ஒட்டாவா, கனடா

3) 1975  கிங்ஸ்டன், ஜமைக்கா

4) 1977  - லண்டன் & கிளென்ஈகல், ஐக்கிய இராச்சியம்

5) 1979  - லுகாசா, ஸாம்பியா

6) 1981   - மெல்பேர்ன், அவுஸ்திரேலியா

7) 1983  - புது டில்லி, இந்தியா

8) 1985  - நஸ்சஸ், பஹாமஸ்

9) 1986 - லண்டன், ஐக்கிய இராச்சியம்  - CHOGM மீளாய்வுக் கூட்டம்

10) 1987- வான்கூவர், கனடா

11) 1989 - கோலாலம்பூர், மலேசியா

12) 1991 - ஹராரே, சிம்பாப்வே

13) 1993- லிமாஸ்செல், சைப்பிரஸ்

14) 1995- ஒக்லாண்ட், நியூசிலாந்து

15) 1997- எடின்பேர்க்ஐக்கிய இராச்சியம் 

16) 1998- டேர்பன், தென்னாபிரிக்கா

17) 2002- கூலும், அவுஸ்திரேலியா

18) 2003- அபுஜா, நைஜீரியா

19) 2005- வலெட்டா, மோல்டா

20) 2007- கம்பாலா, உகாண்டா

21) 2009- போர்ட் ஒப் ஸ்பெய்ன்  - ரிடிரினாட் அன்ட் டோபாக்கோ

22) 2011  - பேர்த், அவுஸ்திரேலியா

23) 2013 கொழும்பு, இலங்கை

24) 2015 - மோல்டா



ஆகக்குறைந்த நாட்டுத் தலைவர்கள் கலந்துகொண்ட CHOGM 2013

CHOGM வரலாற்றில் ஆகக்குறைந்த நாட்டுத் தலைவர்கள் கலந்துகொண்டது இலங்கை, கொழும்பில் நடைபெற்ற 23வது மாநாட்டில் ஆகும் . இதில் பிரதானமாக 24 நாட்டுத் தலைவர்களே (ஜனாதிபதி, பிரதமர்) கலந்துகொண்டதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.


அண்மைய ஆண்டுகளில் நடைபெற்ற CHOGM  மாநாடுகளில் கலந்துகொண்ட நாட்டுத் தலைவர்களின் எண்ணிக்கை வருமாறு

ü  1997- ஸ்கொட்லாந்து – 47
ü  1998- தென்னாபிரிக்கா - 47
ü  2003-  நைஜீரியா - 38
ü  2005-  மோல்டா - 38
ü  2007-  உகாண்டா - 36
ü  2009 - ரிடிரினாட் அன்ட் டோபாக்கோ – 34
ü  2011  -  அவுஸ்திரேலியா - 36



***

Saturday, November 16, 2013

சச்சின் 200 & லோகன் 400*

பதிவின் தலைப்பு வியப்பாக உள்ளதா?...! ஆம், இது எனது 400வது பதிவு.

தனது 24 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் பல்வேறு உலக சாதனைகளைப்  நிகழ்த்திய சச்சின் டெண்டுல்கரின் கிரிக்கெட் வாழ்க்கையின் பிரியாவிடை நாளாக இன்றைய நாள் விளங்கியது.

சுற்றுலா மே.தீவுகள் அணிக்கெதிராக மும்பாயில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டி மூன்றே நாட்களில் முடிவுக்கு வந்தது.  இப்போட்டியில்,  இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 126 ஓட்டங்களால் வெற்றி பெற்று சச்சினின் 200வது டெஸ்ட் போட்டிக்கு பிரியாவிடை பரிசினை அளித்தது கெளரவித்தது.

அந்தவகையில், சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட்டில் நிகழ்த்திய சில சாதனைகளின் தொகுப்பு உங்களுக்காக…!

1) 15,921 டெஸ்ட்  ஓட்டங்கள்
டெஸ்ட் போட்டிகளில் அதிகூடிய ஓட்டங்களைப் பெற்ற சாதனை வீரர்  சச்சின் டெண்டுல்கர் ஆவார். இவரை தொடர்ந்து 13,378 ஓட்டங்களுடன் ரிக்கி பொண்டிங் இடம்பெறுகின்றார்.
                                                   

2) 18, 426 ODIs ஓட்டங்கள்
ஒருநாள் சர்வதேச போட்டிகளில் அதிகூடிய ஓட்டங்களைப் பெற்ற சாதனை வீரர்  சச்சின் டெண்டுல்கர் ஆவார். இவரை தொடர்ந்து 13,704 ஓட்டங்களுடன் ரிக்கி பொண்டிங் இடம்பெறுகின்றார்.
                                      

3) 463 ODI போட்டிகள்
ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்  வரலாற்றில் அதிக கூடிய போட்டிகளில்(463) கலந்து கொண்ட சாதனை வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆவார்.
1வது ODI போட்டி – பாகிஸ்தான், குயரன்வாலா (1989 டிச.18)
463வது ODI போட்டி பாகிஸ்தான், டாக்கா (2012 மார்ச் 18)

சச்சினைத் தொடர்ந்து சனத் ஜயசூரிய 445 போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்.
                                      

4) 200 டெஸ்ட் போட்டிகள்
டெஸ்ட்  கிரிக்கெட்  வரலாற்றில் அதிக கூடிய டெஸ்ட் போட்டிகளில் கலந்து கொண்ட சாதனை வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆவார்.
1வது டெஸ்ட் போட்டிபாகிஸ்தான், கராச்சி (1989 நவ. 14-16)
200வது டெஸ்ட் போட்டிமே.தீவுகள், மும்பாய் (2013 நவ.15-20)

சச்சினைத் தொடர்ந்து ஸ்டீவ் வோ, ரிக்கி பொண்டிங் ஆகியோர் 168 டெஸ்ட் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளனர்.
                                               

5) 49 ODI சதங்கள்
ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்  வரலாற்றில் அதிக கூடிய சதங்களைப் (49) பெற்ற வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆவார்.
1வது சதம் - அவுஸ்திரேலியா,  கொழும்பு, 1994
49வது சதம் - பங்களாதேஷ்,  டாக்கா, 2012
                                               

6) 51 டெஸ்ட் சதங்கள்
டெஸ்ட்  கிரிக்கெட்  வரலாற்றில் அதிக கூடிய சதங்களைப் (51) பெற்ற வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆவார்.
1வது சதம் - இங்கிலாந்து,  மன்செஸ்டர், 1990
51வது சதம் - தென்னாபிரிக்காகேப்டவுன், 2011
                                                     

7) 15 தொடர் ஆட்ட நாயகன் விருதுகள் ODIs
ஒருநாள் சர்வதேச போட்டிகளில் அதிகூடிய தொடர் ஆட்ட நாயகன்  விருதுகளைப் பெற்ற சாதனை வீரர்   சச்சின் டெண்டுல்கர் ஆவார்.  இவரை தொடர்ந்து சனத் ஜயசூரிய உள்ளார்.
                                        

8) 62 ஆட்ட நாயகன் விருதுகள் ODIs
ஒருநாள் சர்வதேச போட்டிகளில் அதிகூடிய ஆட்ட நாயகன் விருதுகளைப் பெற்ற சாதனை வீரர்   சச்சின் டெண்டுல்கர் ஆவார். இவரை தொடர்ந்து சனத் ஜயசூரிய(48),  ஜக் கலிஸ்(32) ஆகியோர் உள்ளனர்.
                                         

9) 989 சர்வதேச வீரர்கள்
 சச்சின் டெண்டுல்கர் இதுவரை 989 சர்வதேச வீரர்களுடன் கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்இதில் 141 இந்திய வீரர்களும், 848 எதிரணி வீரர்களும் அடங்குவர்.

10) 2,560 உலகக் கிண்ண ஓட்டங்கள்
6 உலகக் கிண்ண கிரிக்கட் தொடர்களில் (1992 - 2011) தொடர்ச்சியாக கலந்து கொண்ட சச்சின் டெண்டுல்கர், 56.95 என்கின்ற சராசரியில் 2,560 ஓட்டங்களைப் பெற்று உலகக் கிண்ண வரலாற்றில் அதிக கூடிய மொத்த ஓட்டங்களைப் பெற்ற வீரர்    என்கின்ற சாதனையின் படைத்தார்.
                                     

11) 1894 ODI ஓட்டங்கள், 1998ம் ஆண்டு
ஒருநாள் சர்வதேச போட்டிகளில்கலண்டர் ஆண்டொன்றில் அதிக ஓட்டங்களைப் பெற்ற சாதனை சச்சின் டெண்டுல்கர் வசம் உள்ளது. சச்சின், 1998ம் ஆண்டு 9 சதங்கள் அடங்கலாக 1894 சர்வதேச ஒருநாள் போட்டி ஓட்டங்களைப் பெற்றார்.
                                     

12) 150 விக்கட்கள், 15,000 ஓட்டங்கள் ODIs
ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் 150 விக்கட்கள் (154 விக்கட்கள்மற்றும் 15,000 ஓட்டங்களை (18,426 ஓட்டங்கள்பெற்ற ஒரே வீரர் சச்சின் டெண்டுல்கர்.


13) 90 வெவ்வேறான மைதானங்கள்
தனது 24 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் சச்சின் டெண்டுல்கர்   90 இற்கும் அதிகமான மைதானங்களில் கிரிக்கெட் போட்டிகளில் கலந்துகொண்டு சாதனை படைத்துள்ளார்.
                                                   

⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨⇨

லோகன் 400*


ஆம்...! உங்களில் ஒருவனாக லோகநாதனின் பகிர்வுகளினூடாக பதிவுலகில் தடம் பதித்து 54 மாதங்களினை அண்மிக்கும் இந்தவேளையில் என் 400வது பதிவில் உங்களினை சந்திப்பதையிட்டு இரட்டிப்பு மகிழ்ச்சியடைகின்றேன்.


அந்தவகையில் என் வலைப்பூவின் வளர்ச்சிக்கு உறுதுணையாகவிருந்து ஆதரவளித்து உதவுகின்ற சக பதிவர்கள், வாசகர்கள், திரட்டிகள், சமூக வலைத்தள நண்பர்கள் மற்றும் லோகநாதனின் பகிர்வுகள் வலைத்தளத்தினை அறிமுகப்படுத்திய, இணையத்தளங்கள், இணையத்தள சஞ்சிகைகள், பத்திரிகைகள், சஞ்சிகைகள், வானொலி நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றிகளை தெரிவித்துக்கொள்வதில் பூரிப்படைகின்றேன்.


***

Blog Widget by LinkWithin