Thursday, August 20, 2009

சிறந்த விளையாட்டு வீரருக்கான லாறியஸ் விருது - 2009

உலக விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு விருது வழங்கும் விருதான லாறியஸ் விருது விழாவில் கனடாவில் நடைபெற்றது. இந்த வருடத்துக்கான சிறந்த விளையாட்டு வீரருக்கான விருதை உலகில் அதிவேக ஓட்ட வீரரான ஜமைக்கா நாட்டை சேர்ந்த உசைன் போல்ட் பெற்றுக் கொண்டார்.2008ம் வருடமும் இந்த விருதை உசைன் போல்ட் வென்றமையும் குறிப்பிடத்தக்கது.

விருது பெறும் உசைன் போல்ட்(ஜூன் 10,2009)


இந்த வருடம் சிறந்த வீரருக்கான விருதுக்காக மைக்கல் பெல்ப்ஸ் ( நீச்சல்) , ரபேல் நடால் (டென்னிஸ்) , கமில்டன் & வலன்ரினோ ரோசி (மோட்டார் பந்தய வீரர்கள்) , கிறிஸ்டியானோ ரொனால்டோ(கால்பந்து) ஆகியோரும் முன்மொழியப்பட்ட போதிலும் உலகளாவிய வாக்கெடுப்பில் உசைன் போல்ட் தெரிவு செய்யப்பட்டார்.

லோறியஸ் நிறுவனத்தின் இயக்குனரும் முன்னாள் ஒலிம்பிக் தடை தாண்டல் சம்பியனான எட்வின் மோசஸ் மற்றும் நிறுவனத்தின் உறுப்பினரான குறுந்தூர ஓட்ட வீரர் மைக்கல் ஜோன்சன் ஆகியோர் உசைன் போல்ட்டுக்கான விருதை வழங்கினர்.


அதேபோல் சிறந்த விளையாட்டு வீராங்கனைக்கான விருதை இத்தாலியில் நடைபெற்ற லாறியஸ் விருது விழாவில் ரஷ்யா நாட்டை சேர்ந்த கோலூன்றிப் பாய்தல் வீராங்கனை இசின் பெயேவா பெற்றுக் கொண்டார்.

விருது பெறும் இசின் பெயேவா(மே 27,2009)

இந்த வருடம் சிறந்த வீராங்கனைக்கான விருதுக்காக டிருனேஷ் டிபாபா (தடகளம்) , லோரினா ஒக்கோ (கோல்ப் ) , வீனஸ் வில்லியம்ஸ் (டென்னிஸ்) , ஷ்டீபனே ரைஸ் ( நீச்சல்) , லின்சே வொன் (பனி சறுக்கல்) ஆகியோரும் முன்மொழியப்பட்ட போதிலும் உலகளாவிய வாக்கெடுப்பில் இசின் பெயேவா தெரிவு செய்யப்பட்டார்.

***

No comments:

Blog Widget by LinkWithin