Monday, December 14, 2009

தமது பிறந்த நாளன்று கலக்கியவர்கள்

கடந்த சனிக்கிழமை(12/12/2009) மொகாலியில் நடைபெற்ற இலங்கை அணியுடனான இரண்டாவது T20 போட்டியில் இந்திய அணி 207 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடி 6விக்கட்கள் வித்தியாசத்தில் வெற்றியை தனதாக்கிக்கொண்டது. இந்த வெற்றியின் மூலம் இரண்டாவதாக துடுப்பெடுத்தாடி அதிக ஓட்டங்களை பெற்ற அணியாக இந்தியா சாதனை படைத்தது.

இந்தப் போட்டியில் இந்திய அணியின் சார்பில் துடுப்பெடுத்தாடிய யுவராஜ் சிங் 20 பந்துகளினை எதிர்கொண்டு அரைச்சதத்தினை பூர்த்திசெய்தமை(60*) குறிப்பிடத்தக்கது. (கடந்த என்னுடைய பதிவாகிய "வீணாகிப் போன அதிரடிகள்" என்னும் பதிவில் யுவராஜ் சிங்கின் அரைச்சதம் ஒரு சிறு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது). இந்த இரண்டாவது T20 போட்டியன்று தனது 28வது பிறந்த நாளை யுவராஜ் சிங் கொண்டாடியதுடன் அவர் அன்றைய போட்டியின் ஆட்டநாயகன் விருதினையும் தனதாக்கிக் கொண்டார்.


கிரிக்கெட்டில் பொதுவாக தத்தமது பிறந்த நாளன்று போட்டியில் சதம் பெறுவதென்பது அடிக்கடி நிகழ்கின்றதொரு விடயமல்ல. ஏனெனில் தத்தமது பிறந்த நாளன்று தாம் விளையாடுகின்ற அணிக்கு போட்டி கிடைப்பதென்பது அவ்வவ் வீரர்களின் அதிர்ஸ்டம் எனலாம்.

அந்த வகையில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளைப் பொறுத்தவரையில் தமது பிறந்த நாளன்று சதம் பெற்ற கிரிக்கெட் வீரர்களாக மூன்று வீரர்கள் காணப்படுகின்றனர்.






24ஏப்ரல்1998 அன்று தனது 25வது பிறந்த நாளன்று நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர், சார்ஜாவில் அவுஸ்ரேலிய அணிக்கெதிராக 134 ஓட்டங்களைப் பெற்றார். மேலும் சச்சினின் பள்ளிப் பருவ நண்பனாகிய வினோத் காம்ளி 18ஜனவரி1993 அன்று தனது 21 பிறந்த நாளன்று, ஜெய்ப்பூரில் இங்கிலாந்து அணிக்கெதிராக ஆட்டமிழக்காது 100 ஓட்டங்களைப் பெற்றார். அத்துடன் இலங்கை அணியின் அதிரடி ஆட்டநாயகன் சனத் ஜயசூரிய 30 ஜூன் 2008 அன்று தனது 39வது பிறந்த நாளன்று , கராச்சியில் பங்களாதேஸ் அணிக்கெதிராக ஆசிய கிண்ணப் போட்டியில் 130 ஓட்டங்களைப் பெற்றமை நினைவில் நீங்காமல் நிலைத்திருக்கின்றது.

டெஸ்ட் கிரிக்கெட்டினைப் பொறுத்தவரை தமது பிறந்த நாளன்று சதம் பெற்ற கிரிக்கெட் வீரர்களாக ஒன்பது வீரர்கள் காணப்படுகின்றனர். அது தொடர்பான விபரங்கள் கீழே...

· RG.பொல்லக்(23வது பிறந்த நாள்), 105,தென்னாபிரிக்கா Vs அவுஸ்ரேலியா, 27-2-1967,போர்ட் எலிசபெத்

· CC. லெவிஸ்(25), 117,இங்கிலாந்து Vs இந்தியா, 14-2-1993,சேப்பாக்கம்

· RR.சர்வான்(26), 116,மே.தீவுகள் Vs இந்தியா, 23-6-2006,வெஸ்ரியர்

· BL.இர்வின்(26), 102,தென்னாபிரிக்கா Vs அவுஸ்ரேலியா, 9-3-1970,போர்ட் எலிசபெத்

· PE. ரிச்சர்ட்சன்(26), 126,இங்கிலாந்து Vs மே.தீவுகள்,4-7-1957,டென்பிறிட்ஜ்

· இம்ரான் கான்(28), 123,பாகிஸ்தான் Vs மே.தீவுகள்,25-11-1980,லாகூர்

· AC.ஹுட்சன்(29), 102,தென்னாபிரிக்கா Vs அவுஸ்ரேலியா, 17-3-1994,கேப்டவுன்

· RT.சிம்சன்(31), 156*,இங்கிலாந்து Vs அவுஸ்ரேலியா, 27-2-1951,மெல்பேர்ன்

· AJ.ஸ்டுவர்ட்(31), 118,இங்கிலாந்து Vs மே.தீவுகள், 8-4-1994,பிறிட்ஜ்டவுன்

நண்பர்களே உங்கள் பிறந்த நாளில் நீங்களும் நிறையவே சாதிக்க என்னுடைய வாழ்த்துக்கள்......


***

Sunday, December 13, 2009

விண்வெளியில் ஏவறை விடமுடியாதா?

  • 3மாதங்கள் உணவின்றி திமிங்கிலங்களால் தொடர்ந்து நீந்தமுடியுமாம்.
  • · விண்வெளி வீரர்களால் விண்வெளியில் ஏவறை விடமுடியாதாம். ஏனெனில் அவர்களின் வயிற்றிலுள்ள வாயுவினை திரவத்திலிருந்து வேறுபடுத்த புவியீர்ப்பு விசை இல்லாமையாலாகும்.
  • · மருத்துவர் கிறிஸ்ரியன் பேர்னாட் முதலாவது இருதய மாற்று அறுவைச் சிகிச்சையினை 1967ல் மேற்கொண்டார். அந்த இருதய மாற்றுச்சிகிச்சைக்கு ஆளாகிய நோயாளி சிகிச்சையின் பின்னர் 18 நாட்கள் உயிர்வாழ்ந்தார்.
  • · அமெரிக்க ஜனாதிபதியாக தற்போது பதவிவகிக்கும் பராக் ஒபாமா, 1980களில் மாணவனாக இருந்த சமயத்தில் லொஸ் ஏஞ்சலிலுள்ள மக்டொனால்ஸ்சில் சில மாதங்கள் வேலை பார்த்தாராம்.
  • · காம்பியா நாட்டில் நுகர்வோர் உரிமைகள் அமைப்புக்களுக்கு சட்டத்தில் இடமில்லையாம்.
  • · அமெரிக்க இந்தியானா பல்கலைக்கழகத்தின் பிரதான நூலகமானது வருடாந்தம் ஒரு அங்குலத்துக்கும் அதிகமாக புதைந்துவருகின்றதாம். ஏனெனில் இதனைக் கட்டும் போது இது கொள்ளக்கூடிய எல்லாப் புத்தகங்களின் நிறைகளையும் கணக்கிலெடுக்க பொறியிலாளர்கள் தவறிவிட்டார்களாம்.
  • · ஹம்மிங்பேர்ட் பறவைகளினால் நடக்கமுடியாதாம்.
  • · வெட்டுக்கிளிகளின் இரத்தமானது வெள்ளை நிறமாம்.
  • · நீங்கள் தபால் தலைகளினை நாக்கினால் தடவி ஓட்டுகின்றீர்களா? ஆம் எனில் நீங்கள் அதன் மூலம் 0.1 கலோரியினை பெறுகின்றீர்களாம்.

***

Friday, December 11, 2009

வீணாகிப் போன அதிரடிகள்

கடந்த புதன்கிழமை நாக்பூரில் நடைபெற்ற இலங்கை அணியுடனான முதலாவது T20 போட்டியில் இந்திய அணி 216 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடி 29 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவிக்கொண்டது. இந்தப் போட்டியில் இலங்கை அணியின் சார்பில் துடுப்பெடுத்தாடிய குமார் சங்ககார 21 பந்துகளினை எதிர்கொண்டு அரைச்சதத்தினை பூர்த்திசெய்து மிக அரைச்சதம் பெற்ற இலங்கை வீரராக மஹேல ஜயவர்த்தனவுடன் தனது பெயரை பதிவுசெய்து கொண்டார்.

மேலும் இந்தப் போட்டியில் இந்திய அணியின் சார்பில் துடுப்பெடுத்தாடிய கெளதம் காம்பீர் 19 பந்துகளினை எதிர்கொண்டு அரைச்சதத்தினை பூர்த்திசெய்தமை சுவாரஸ்சியமான விடயமாகும். ஆனாலும் தோல்வியடைந்த T20போட்டி ஒன்றில் மிகவேகமாக அரைச்சதத்தினை பூர்த்திசெய்த வீரர் என்ற சாதனையினை கெளதம் காம்பீர் படைத்தார். மேலும் இதற்கு முன்னர் துடுப்பாட்ட வீரர்கள் 23 பந்துகளுக்கும் குறைவான பந்துகளை எதிர்கொண்டு சதம் பெற்ற போட்டிகள்11இல்9போட்டிகள் வெற்றியிலேயே முடிவடைந்துள்ளன. இதில் தோல்வியடைந்த போட்டி கடந்த செப்டம்பர் 2ம் திகதி நியூசிலாந்து அணிக்கெதிராக கொழும்பில் நடைபெற்ற T20 போட்டியில் இலங்கை அணியின் திலகரத்ன டில்சான் 23 பந்துகளுக்கு அரைச்சதம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஆனாலும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இதுபோன்ற சம்பவங்கள் 4 தடவைகள் பதிவாகியுள்ளது. ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மிகவேகமான அரைச்சதம் பெற்ற சனத் ஜயசூரிய, 7ஏப்ரல் 1996ல் சிங்கப்பூரில் நடைபெற்ற போட்டியில் 17 பந்துகளில் அரைச்சதம் பெற்றார். இந்தப் போட்டியில் இலங்கை அணி 43 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியிடம் தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது. நியூசிலாந்து அணியின் லான்ஸ் கெயான்ஸ் (கிறிஸ் கெயான்ஸ்சின் தந்தையார்) 21 பந்துகளில் 50 ஓட்டங்கள் பெற்ற போட்டியில் அவுஸ்ரேலிய அணியும் , பங்களாதேஸின் முகமட் அஸ்ரப்புல் 21 பந்துகளில் 50 ஓட்டங்கள் பெற்ற போட்டியில் இங்கிலாந்து அணியும்,பாகிஸ்தான் அணியின் அப்துல் ரசாக் 23 பந்துகளில் 50 ஓட்டங்கள் பெற்ற போட்டியில் நியூசிலாந்து அணியும் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகவேகமாக நிமிடங்கள்(27) அடிப்படையில் பெறப்பட்ட பங்களாதேஸின் முகமட் அஸ்ரப்புல்லின் அரைச்சதமானது 2007ல் மிர்புரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்ஸ்சில் இந்திய அணிக்கெதிராகப் பெறப்பட்டதாகும். இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 239 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.


***
Blog Widget by LinkWithin