Showing posts with label Phobia. Show all posts
Showing posts with label Phobia. Show all posts

Friday, April 16, 2010

உலகில் அதிகம் பேர் பயப்படும் முதல் 10 விடயங்கள்

இந்த உலகில் வாழும் மக்களில் ஒவ்வொருவருக்கும் ஏதாவதொன்று தொடர்பான பயம்[phobia] ஆட்டிப்படைத்துக் கொண்டேயிருக்கும். அந்தவகையில் உலகில் அதிகம் பேர் பயப்படும் முதல் 10 விடயங்கள் வருமாறு.......

# 10) Necrophobia- மரணத்துக்கான பயமே Necrophobia எனப்படுகின்றது. அதாவது மரணம்,மரணத்துடன் தொடர்பான விடயங்கள், சவப்பெட்டிகள், பிணங்கள் ஆகியவைகள் தொடர்பான பயங்களினைக் குறிப்பிடலாம்.

# 9) Brontophobia- இடி மற்றும் மின்னலுக்கான பயம். இதனை Astraphobia எனவும் குறிப்பிடலாம். இடி,மின்னல் ஏற்படும் போது மக்கள் தம்மையறியாமலே பாதுகாப்பினை தேடிக்கொள்கின்றனர்.



# 8) Carcinophobia- புற்று நோய்க்கான பயமே இதுவாகும். புற்று நோய் என்பது ஒரு தொற்று நோய் அல்ல என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனாலும் ஒரு புற்று நோயாளியை தொட்டதன் காரணமாக தனக்கும் நோய்வரும் என பயப்படுவதே இதுவாகும்.

# 7) Emetophobia- வாந்திக்கான பயமே இதுவாகும்.

# 6) Acrophobia - உயரங்களுக்கான பயமே இதுவாகும்.

# 5) Claustrophobia- மூடிய வெளிகளுக்கான பயமே இதுவாகும். அதாவது மிக குறுகலான இடங்கள் தொடர்பில் ஏற்படுகின்ற பயமே இதுவாகும். லிப்ட் பயணங்களிலினை தவிர்த்தல், சிறிய அறைகளிலிருந்து விலகியிருத்தல் etc…

# 4) Agoraphobia- திறந்த வெளிகளுக்கான பயமே இதுவாகும். ஏதாவதொரு இடத்தில் அல்லது சூழ்நிலையில் தவிர்க்கின்ற போது, வெளியேறுவதற்கு அல்லது உதவிகள் ஏதாவது கிடைக்காதவிடத்து அல்லது வெளியேறுவதற்கான பாதைகள் அல்லது முறைகள் சிக்கலாகின்ற போது ஏற்படுகிற பயமே இதுவாகும்.

# 3) Aeruophobia- பறப்பதற்கான பயமே Aeruophobia என அழைக்கப்படுகின்றது. விமானங்களில் பயணம் செய்வதற்கு பயப்படுவதனைக் இது குறிக்கின்றது. இந்த வகையான பயமானது அடிக்கடி Claustrophobia உடன் பொருந்துகின்றது.

# 2) Social Phobia - சமூகத்தில் எதிர்மறையாக மதிப்பிடுகின்ற பயமே Social Phobia என அழைக்கப்படுகின்றது. இது பல்வேறுபட்ட காரணங்களினால் ஏற்படுகின்றது. மற்றவர்களினால் ஆழ்ந்து பரிசோதனை செய்யப்படல் அல்லது சமூக சூழ்நிலைகளினால் எதிர்மறையான மதிப்பீட்டினைப் பெறல், ஒருவரின் சொந்த செயற்பாடுகளின் காரணமாக தாழ்த்தப்படுவதாக உணருதல் போன்றவையாகும்.

# 1) Arachnophobia - சிலந்திகளுக்கான பயமே Arachnophobia என அழைக்கப்படுகின்றது. இதேவேளை சிலந்திகளின் படங்களுக்கான பயம் Chronicarachnophobia என அழைக்கப்படுகின்றது.



***
Blog Widget by LinkWithin