Showing posts with label 200. Show all posts
Showing posts with label 200. Show all posts

Saturday, September 4, 2010

தமது அறிமுக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இரட்டைச் சதம் அடித்தவர்கள்.....

தமது அறிமுக டெஸ்ட் போட்டியில் இரட்டைச் சதம் அடித்தவர்கள் என்ற பெருமையினை இதுவரை 05 வீரர்களே பெற்றுள்ளார்கள்.

ரிப் போஸ்ரெர் (இங்கிலாந்து எதிர் ஆஸி), 287, சிட்னி, 1903-04

லோரென்ஸ் ரோவ் (மே.தீவுகள் எதிர் நியூசிலாந்து), 214, கிங்ஸ்டன், 1971-72

பிரெண்டன் குருப்பு (இலங்கை எதிர் நியூசிலாந்து), 201, கொழும்பு, 1986-87

மத்திவ் சின்கிளெயர் (நியூசிலாந்து எதிர் மே.தீவுகள்), 214, வெலிங்டன், 1999-00

ஜக் ருடொல்ப் (தென்னாபிரிக்கா எதிர் பங்களாதேஷ்), 222*,சிட்டகொங், 2002-03



டெஸ்ட் கிரிக்கெட்டில் 4வது இன்னிங்ஸ்சில் இரட்டைச் சதம் அடித்தவர்கள்.....

டெஸ்ட் போட்டிகளில் 4வது இன்னிங்ஸ்சில் சதம் பெறுவது என்பது மிகவும் சவாலான விடயமாகும். டெஸ்ட் கிரிக்கெட்டில் 4வது இன்னிங்ஸ்சில் இரட்டைச் சதம் அடித்தவர்களாக இதுவரையும் 05 வீரர்களே சாதனை படைத்துள்ளனர்.

GA ஹெட்லி (மே.தீவுகள் எதிர் இங்கிலாந்து), 223, கிங்ஸ்டன், 1930

WJ எட்ரிச் (இங்கிலாந்து எதிர் தென்னாபிரிக்கா), 219, டேர்பன், 1939

சுனில் கவாஸ்கர் (இந்தியா எதிர் இங்கிலாந்து), 221, த ஓவல், 1979/80

கோர்டன் கிரினிட்ஜ் (மே.தீவுகள் எதிர் இங்கிலாந்து), 214*, லோட்ஸ், 1984/85

நாதன் அஸ்லே ( நியூசிலாந்து எதிர் இங்கிலாந்து), 222, கிறிச்சேர்ச், 2002



டெஸ்ட் கிரிக்கெட்டில் 4வது இன்னிங்ஸ்சில் இரட்டைச் சதம் அடித்தவர்களாக 05 வீரர்களே திகழ்ந்தாலும், 1984/85ல் லோட்ஸ்சில் நடைபெற்ற இங்கிலாந்துடனான டெஸ்ட் போட்டியில் மே.தீவுகளின் கோர்டன் கிரினிட்ஜ் 214 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்ற டெஸ்ட் போட்டியே வெற்றியில் நிறைவடைந்தமை நினைவில்கொள்ளத்தக்க விடயமாகும்.

***
Blog Widget by LinkWithin