Showing posts with label பிறந்தநாள். Show all posts
Showing posts with label பிறந்தநாள். Show all posts

Saturday, September 8, 2012

உலகளாவியரீதியிலான சில பிறந்தநாள் சம்பிரதாயங்கள்....



ஒவ்வொருவரின் வாழ்விலும் பிறந்தநாள் முக்கியமானதானதொன்றாகும்.  தமது கடந்த காலத்தினை மீட்டு எதிர்காலத்திற்கு காலடி எடுத்து வைப்பதற்கு பிறந்தநாள் என்பது விசேடத்துவமானதொன்று எனலாம்.
அந்தவகையில் உலகளாவியரீதியிலான சில பிறந்தநாள் சம்பிரதாயங்கள் வருமாறு;

நண்பர்களுக்கான என் பிறந்தநாள் பரிசாக இந்தப் பதிவு...

Ø  இங்கிலாந்து  நாட்டில் ஒருவர் 80, 90 அல்லது 100 வயதினைக் அடைகின்றபோது அவர் மகாராணியாரிடமிருந்து பிறந்தநாள் வாழ்த்து தந்தியினை பெற்றுக்கொள்வார்.



Ø  கொரிய நாட்டில் இரண்டு பிறந்தநாட்கள் முக்கியமானதாகும். 100வது நாள் மற்றும் 60வது வருடப் பிறந்தநாள் ஆகியவையாகும்.

Ø  சீனாவில் பிறந்தநாள் அன்பளிப்பாக கடிகாரத்தினை வழங்குவதனை தவிர்த்துவிடுகின்றனர். சீன மண்டேரியன் மொழியில் "கடிகாரம்" என்ற பதமானது இறப்பு என்ற பதத்தினை ஒத்தவொன்றாக கருதுகின்றனர். மேலும் சீன நாட்டினர் பரிசுப்பொருட்களினைப் சுற்றுவதற்கு வெள்ளை, கறுப்பு, நீல  நிறங்களினை உபயோகிப்பதில்லை.

Ø  இஸ்லாமிய உலகில், பரிசுப்பொருட்களினைப் சுற்றுவதற்கு பச்சை நிறம் நல்லதென கருதுகின்றனர்.

Ø  வியட்னாம் நாட்டினர் தமது பிறந்தநாளினை தமது "டெட் புத்தாண்டு(Tet)" ஆரம்பத்திலேயே கொண்டாடுகின்றனர்.

Ø  உலகில் அதிகமானோர் ஏனைய மாதங்களினைவிடவும் ஆகஸ்ட் மாதத்திலேயே தமது பிறந்தநாளினைக் கொண்டாடுகின்றனராம். (உலக மக்களில் 9%) இந்த வரிசையில் அடுத்த இடத்தினைப் பெறுவது ஜூலை, செப்டெம்பர் மாதங்களாகும்.

Ø  உலகில் மிக செலவான பிறந்தநாள் கொண்டாட்டமாக 1996 ஜூலை 13ம் திகதி புருணை சுல்தானின் 50வது பிறந்தநாள் விளங்குகின்றது. இந்தக் கொண்டாட்டத்திற்கு 27.2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவு ஏற்பட்டதாம். இச்செலவில் 16 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பொப் இசைப் பாடகர் மைக்கல் ஜாக்சனின் 3 இசை நிகழ்ச்சிகளுக்கு வழங்கப்பட்டதாம்.

Ø  பிரித்தானிய மகாராணியாரின் பிறந்தநாளானது பொதுநலவாய அங்கத்துவ நாடுகளான இங்கிலாந்தில் ஜூன் முதலாவது சனிக்கிழமையும், நியூசிலாந்தில் ஜூன் முதலாவது திங்கட்கிழமையும், கனடாவில் மே மாத மத்தியிலும் கொண்டாடப்படுகின்றது. எலிசபெத் மகாராணி பிறந்தது 1926ம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதியாகும்.

Ø  ஒவ்வொரு நாளும் உலகில் சராசரியாக 19 மில்லியன் மக்கள் தமது பிறந்தநாளினைக் கொண்டாடுகின்றனராம்.

Ø  ஜப்பான் நாட்டில், வழமையாக 60, 70, 79, 88 மற்றும் 99 வது பிறந்த நாளுக்கே பரிசில்களினை வழங்குகின்றனர். அவ்வாறு வழங்கப்படுகின்ற பிறந்தநாள் பரிசுப்பொருட் தொகுதியில் 10இலும் குறைந்த ஒற்றை எண்களில் பரிசுப்பொருட்கள் இருக்குமாம். வழமையாகவே ஜப்பான் நாட்டினர் 4 மற்றும் 9ம் இலக்கங்களை தவிர்ப்பதுடன் வெள்ளை நிறத்தால் சுற்றப்பட்ட பரிசுப்பொருட்களை இறப்புடன் தொடர்புடையதாக கருதுகின்றனர்.

Ø  ஜேர்மன் நாட்டினர், தமது பிறந்தநாளினை கருத்தூன்றிய ஒன்றாக எடுத்துக்கொள்கின்றனர். இதனால் சில சந்தர்ப்பங்களில் அவர்கள் அரை நாள் விடுமுறையினைக்கூட எடுத்துக்கொள்கின்றனர்.  பூக்கள் மற்றும் வைன் ஆகியவை நண்பர்களிடையேயான பொதுவான பரிசுப்பொருட்களாக உள்ளது.

Ø  "ஹெப்பி பேர்த் டே" பாடல் முதன்முதலில் விண்வெளியில் 1969ம் ஆண்டு மார்ச் 8ம் திகதி அப்பலோ9 விண்வெளி வீரர்கள் பாடப்பட்டது.
                
***

Thursday, December 9, 2010

அம்மாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்........




இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் அன்பின் அம்மாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.




அதேவேளை மனதிற்கு கவலையான தகவலொன்றினை உங்களுடன் பகிர்கின்றேன்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர், எதிர்பாராத விபத்துச் சம்பவமொன்றின் காரணமாக அம்மா பாதிப்புக்குள்ளானார். இதன் காரணமாக சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

எங்கள் வாழ்வின் முன்னேற்றத்துக்கு ஆதாரமாக விளங்கும் அன்பின் அம்மா விரைவில் நலமடைய பிரார்த்திக்கின்றேன்.

***

Wednesday, September 8, 2010

"Happy Birthday to You" பிறந்தநாள் பாடல் தோன்றிய வரலாறு....!!!

உலகம் முழுவதும் பலரால் பாடப்படும் பாடல் எது என்று தெரியுமா?... "Happy Birthday to You" என்ற பிறந்தநாள் பாடல்தான். இந்தப் பாடலினை 1893ம் ஆண்டு அமெரிக்க ஆசிரியைகள் இருவர் தங்களது மாணவிகளுக்காக இயற்றினார்கள்.

இந்தப் பாடலினை இயற்றியது சகோதரிகளான மில்ட்ரெட் ஜே.ஹில்[Mildred J. Hill] மற்றும் பட்ரி ஸ்மித் ஹில்[Patty Smith Hill]ஆகியோராவர். இவர்கள் அமெரிக்காவின் கென்டெக்கி மாநிலத்தில் லூயிஸ்விள்ளே நகரில் பிறந்தவர்களாவர்.

"Happy Birthday to You" என்ற பிறந்தநாள் பாடலுக்கான இராகமானது மில்ட்ரெட் ஜே.ஹில்லினால் இயற்றப்பட்டதுடன், பல்லவியானது பட்ரி ஸ்மித் ஹில்லினால் எழுதப்பட்டதாகும்.

"Happy Birthday to You" என்ற பிறந்தநாள் பாடல் 1893ம் ஆண்டு முதன்முதலில் வெளியிடப்பட்டிருந்தாலும், இந்தப் பாடலுக்கு 1935ம் ஆண்டுதான் காப்புரிமை பெறப்பட்டு, 1963ம் ஆண்டு இந்த காப்புரிமை புதுப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

1988ம் ஆண்டு Birch Tree Group,Ltd என்கின்ற நிறுவனமானது இந்தப் பாடலின் உரிமையினை Warner Communications என்கின்ற நிறுவனத்துக்கு 25மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு[ஏனைய எல்லா சொத்துக்களும் உள்ளடங்களாக]விற்பனை செய்தது.

==========================================

பிறந்தநாள் கேக்....!!!






பிறந்தநாளைக் "கேக்" வெட்டிக் கொண்டாடும் முறை பல நூற்றாண்டுகளுக்கு முன் ஜேர்மனியிலேயே முதன்முதலில் அறிமுகமாகியது.


***
Blog Widget by LinkWithin