Showing posts with label அவுஸ்திரேலியா. Show all posts
Showing posts with label அவுஸ்திரேலியா. Show all posts

Monday, January 7, 2013

அவுஸ்திரேலிய மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியையேனும் வெற்றிபெறாத இலங்கை அணி...!


அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுலா சென்றுள்ள இலங்கை அணிக்கும் ஆஸி அணிக்கும் இடையே நடைபெற்ற 3 டெஸ்ட் போட்டிகளினையும் வெற்றிகொண்டு இலங்கை அணியினை வெள்ளையடிப்புச் செய்து ஆஸி அணி இலங்கை அணிக்கெதிராக தமது தாயகத்தில் 11வது வெற்றியினைப் பதிவுசெய்துகொண்டது.


இலங்கை, ஆஸி அணிகள் தம்மிடையே இதுவரை மொத்தமாக 26 டெஸ்ட் போட்டிகளினை விளையாடியுள்ளன, இதில் இலங்கை அணி ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் மாத்திரமே வெற்றிகொண்டுள்ளதுடன் ஆஸி அணி  17 டெஸ்ட் போட்டிகளினை வெற்றிகொண்டுள்ளது. மேலும் 8 டெஸ்ட் போட்டிகள் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.



இலங்கை அணி ஆஸி மண்ணில் இதுவரை விளையாடியுள்ள டெஸ்ட் தொடர்கள் வருமாறு....!

◄► டெஸ்ட் போட்டித் தொடர் (1987/1988)
1வது டெஸ்ட் @ பேர்த் - பெப்ரவரி 12-15, 1988, ஆஸி அணி இன்னிங்ஸ் மற்றும் 108 ஓட்டங்களால் வெற்றி (அவுஸ்திரேலியா 455; இலங்கை 194 &
 153 f/o)

பெறுபேறு ஆஸி 1


◄► டெஸ்ட் போட்டித் தொடர்  (1989/1990)
1வது டெஸ்ட் @ பிறிஸ்பேன் - டிசம்பர் 8-12, 1989, வெற்றிதோல்வியின்மை (அவுஸ்திரேலியா 367 & 375/6; இலங்கை 418)

2
வது டெஸ்ட் @ ஹோவார்ட் - டிசம்பர் 16-20, 1989, ஆஸி அணி 173 ஓட்டங்களால் வெற்றி (அவுஸ்திரேலியா 224 & 513/5d; இலங்கை 216 & 348)

பெறுபேறு ஆஸி 1, வெற்றிதோல்வியின்மை 1

◄► டெஸ்ட் போட்டித் தொடர்  (1995/1996)
1வது டெஸ்ட் @ பேர்த் - டிசம்பர் 8-11, 1995, ஆஸி அணி இன்னிங்ஸ் மற்றும் 36 ஓட்டங்களால் வெற்றி (இலங்கை 251 & 330; அவுஸ்திரேலியா 617/5d)

2
வது டெஸ்ட் @ மெல்பேர்ன் - டிசம்பர் 26-30, 1995, ஆஸி அணி 10 விக்கட்களால் வெற்றி (அவுஸ்திரேலியா 500/6d & 41/0; இலங்கை 233 & 307 f/o)

3
வது டெஸ்ட் @ அடிலெய்ட் - ஜனவரி 25-29, 1996, ஆஸி அணி 148 ஓட்டங்களால் வெற்றி (அவுஸ்திரேலியா 502/9d & 215/6d; இலங்கை 317 & 252)

பெறுபேறு ஆஸி 3


◄► டெஸ்ட் போட்டித் தொடர்  (2004)
1வது டெஸ்ட் @ டார்வின் - ஜூலை 1-3, 2004, ஆஸி அணி 149 ஓட்டங்களால் வெற்றி (அவுஸ்திரேலியா 207 & 201; இலங்கை 97 & 162)

2
வது டெஸ்ட் @ கெயார்ன்ஸ் - ஜூலை 9-13, 2004, வெற்றிதோல்வியின்மை (அவுஸ்திரேலியா 517 & 292/9d; இலங்கை 455 & 183/8)

பெறுபேறு ஆஸி 1, வெற்றிதோல்வியின்மை 1

◄► வோர்ன் - முரளிதரன் டெஸ்ட் போட்டித் தொடர்  (2007/2008)
1வது டெஸ்ட் @ பிறிஸ்பேன் - நவம்பர் 8-12, 2007, ஆஸி அணி இன்னிங்ஸ் மற்றும் 40 ஓட்டங்களால் வெற்றி   (அவுஸ்திரேலியா 551/4d; இலங்கை 211 & 300 f/o)

2
வது டெஸ்ட் @ ஹோவார்ட் - நவம்பர் 16-20, 2007, ஆஸி அணி 96 ஓட்டங்களால் வெற்றி (அவுஸ்திரேலியா 542/5d & 210/2d; இலங்கை 246 &
 410)

பெறுபேறு ஆஸி 2

1வது டெஸ்ட் @ ஹோவார்ட் - டிசம்பர் 14-18, 2012 ஆஸி அணி 137 ஓட்டங்களால் வெற்றி (அவுஸ்திரேலியா 450/5 & 278; இலங்கை 336 & 255)


2
வது டெஸ்ட் @ மெல்பேர்ன் - டிசம்பர் 26-30, 2012
ஆஸி அணி இன்னிங்ஸ் மற்றும் 201 ஓட்டங்களால் வெற்றி   (அவுஸ்திரேலியா 551/4d; இலங்கை 103/9 & 156)


3
வது டெஸ்ட் @ சிட்னி - ஜனவரி 3-7, 2013
ஆஸி அணி 5 விக்கட்களால் வெற்றி (இலங்கை 294 & 278; அவுஸ்திரேலியா 432 & 141/5)

பெறுபேறு ஆஸி 3


***

Wednesday, April 13, 2011

ஒருநாள் கிரிக்கெட் போட்டியொன்றில் அதிக ஆறு ஓட்டங்களைப் பெற்றவர்…

கடந்த 11ம் திகதி மேர்பூரில் நடைபெற்ற பங்களாதேஷ் அணியுடனான 2வது சர்வதேச ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரர் சேன் வொட்சன் 185 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் குவித்து சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியொன்றில் அவுஸ்திரேலிய அணியின் சார்பில் தனிநபர் ஒருவர் பெற்ற அதிகூடிய ஓட்டங்கள் என்ற சாதனையைப் படைத்தார். இதற்கு முன்னர் இந்தச் சாதனை மத்தியூ ஹெய்டன்(181*) வசமிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


"சிக்ஸ்" மழை பொழிந்த சேன் வொட்சன்



அதிரடியாக துடுப்பெடுத்தாடிய சேன் வொட்சன் 96பந்துகளை எதிர்கொண்டு 15 நான்கு ஓட்டங்கள் , 15 ஆறு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 185 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் குவித்தார். இதன்மூலம் ஒருநாள் போட்டியொன்றில் அதிக ஆறு ஓட்டங்களைப் பெற்ற வீரராக சேன் வொட்சன் சாதனைபடைத்தார். இதற்கு முன்னர் இந்த சாதனை மே.தீவுகள் அணியினைச் சேர்ந்த சேவியர் மார்ஷல் வசமிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். மார்ஷல், 2008 ஆகஸ்ட் 22ம் திகதி கிங் சிட்டியில் கனடா அணிக்கெதிராக 12 ஆறு ஓட்டங்களைப் பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.



சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியொன்றில் தனிநபர் ஒருவர் பெற்ற ஓட்டங்களில் பெளண்டரிகள்(4’s & 6’s) மூலம் அதிகூடிய ஓட்டங்களைப் பெற்றவர்கள் தொடர்பான விபரங்கள்....

 சேன் வொட்சன் 185*(96), (150ஓட்டங்கள்; 15- 6’s & 15-4’s) , அவுஸ்திரேலியா v பங்களாதேஷ், மேர்பூர்,2011/12




 ஹேர்ஷல் கிப்ஸ் 175(111), (126ஓட்டங்கள்; 7- 6’s & 21-4’s) , தென்னாபிரிக்கா v அவுஸ்திரேலியா, ஜொகன்னஸ்பேர்க், 2006/07

 மஹேந்திரசிங் டோனி 183*(145), (120ஓட்டங்கள்; 10-6’s & 15- 4’s), இந்தியா v இலங்கை, ஜெய்பூர் 2005/06

 சச்சின் டெண்டுல்கர் 200*(147), (118ஓட்டங்கள்; 3-6’s & 25- 4’s) , இந்தியா v தென்னாபிரிக்கா, குவாலியூர், 2010

 சயீட் அன்வர் 194(146), (118ஓட்டங்கள்; 5- 6’s & 22- 4’s), பாகிஸ்தான் v இந்தியா,சென்னை, 1997/98

 லூ வின்சென்ட், 172(120), (118ஓட்டங்கள்; 9- 6’s & 16-4’s) , நியூசிலாந்து v சிம்பாப்வே, புலவாயோ, 2005/06


++++++++++++---------++++++++++++++++++++


"கர" சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.....!!!



***
Blog Widget by LinkWithin