Thursday, July 15, 2021

ஒலிம்பிக்கில் இந்தியா

தனி ஒருவராக மைக்கல் பெல்ப்ஸ் வென்ற பதக்கங்கள் 28  (23 golds, 3 silvers, 2 bronzes) . ஒரு நாடாக இந்தியா பெற்ற பதக்கங்களும் 28.


தடகள போட்டியில் இந்தியாவுக்காக பதக்கம் வென்ற ஒரே வீரர் நார்மன் பிரிட்சர்ட். 1900-ம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக்கில் இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்றார். பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த பெற்றோருக்கு மகனாக இருந்தாலும், இந்தியாவில் வளர்ந்து பணி புரிந்தவர்.


1928-1980 முதல் ஹாக்கியில் இந்திய ஆண்கள் அணி அசைக்க முடியாத பலமாக இருந்துள்ளது. 8 முறை தங்கப்பதக்கமும், ஒருமுறை வெள்ளியும், 2 வெண்கலப் பதக்கங்களையும் இந்தியா வென்றுள்ளது.

சுதந்திர இந்தியாவில் பதக்கம் வென்ற முதல் தனி நபர் கஷாபா ஜாதவ். 1952 ஹெல்சின்க்கி (ஃபின்லாந்து) ஒலிம்பிக்கின் மல்யுத்த போட்டியில் வெண்கலம் வென்றார். இந்தியா வென்ற வெண்கலப் பதக்கங்கள் மொத்தம் 9.

5 இந்திய வீராங்கனைகள் பதக்கம் வென்றுள்ளனர். முதல் பதக்கம் வென்ற பெருமை பளுதூக்குதல் வீராங்கனை கர்ணம் மல்லேஸ்வரியைச் சேரும்.


மொத்தமாக இந்தியா இதுவரை 22 விளையாட்டுகளில் மட்டுமே பங்கேற்றுள்ளது.

இந்தியா பங்கேற்ற 24 ஒலிம்பிக்குகளில், பதக்கமின்றி நாடு திரும்பிய ஒலிம்பிக்குகள் 6. (1920,1924,1976,1984,1988,1992)

                                                                        (@Vikatan)

Thursday, July 11, 2019

உலக மக்கள் தொகை தினம்

1986-ஆம் ஆண்டு ஜூலை 11-ம் தேதி உலக மக்கள்தொகை 500 கோடியை எட்டியது.

மக்கள்தொகை பெருக்கத்தின் அபாயத்தை உணர்ந்த ஐ.நா சபை 1987-ஆம் ஆண்டு முதல் ஜூலை 11-ஆம் தேதியை உலக மக்கள் தொகை தினமாக அறிவித்தது. மக்கள் தொகை பெருக்கத்தினால் ஏற்படும் தீய விளைவுகளை எடுத்துரைத்து, சிறுகுடும்ப நெறியின் நன்மைகளை எடுத்துரைப்பது இந்த நாளின் முக்கிய நோக்கமாகும். 


Sunday, June 9, 2019

இந்தியப் பிரதமர் மோடி இலங்கை வருகை


 பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (9ஆம் திகதி) நாட்டிற்கு வருகை.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பின் பேரிலேயே இந்திய பிரதமர் நாட்டிற்கு  முற்பகல் வருகை .
இரண்டாவது தடவையாக பிரதமராக பதவியேற்றதன் பின்னர் அவர், உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளும்
இரண்டாவது நாடு இலங்கையாகும்.
நேற்றைய தினம் தனது முதலாவது உத்தியோகபூர்வ விஜயமாக மாலைதீவிற்கு பயணித்திருந்தார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி
இன்று பிற்பகல் 04.15க்கு இந்தியா நோக்கி பயணமாகியமை குறிப்பிடத்தக்கது
Blog Widget by LinkWithin