இத்தாலி நாட்டைச் சேர்ந்த வன ஆர்வலர் பிரான்சிஸ் அசிசி என்பவரின் நினைவு நாளை குறிப்பிடும் வகையில் அக்டோபர் 4ம் திகதி உலக விலங்குகள் தினமாக கொண்டாடப்படுகின்றது. 1931 ஆம் ஆண்டு இத்தாலியின் புளோரன்ஸ் நகரில் வனவிலங்குகள் தினம் முதன்முதலாக கொண்டாடப்பட்டது, பின்னர் இது உலகளவில் கொண்டாடப்பட்டு வருகிறது.
விலங்குகளை பாதுகாப்பது மற்றும் அவற்றுக்கு எதிரான கொடுமைகளை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வினை உலக மக்களிடையே ஏற்படுத்துவதே இத்தினத்தின் நோக்கமாகும்.
அந்தவகையில், விலங்குகள் தொடர்பான சுவாரஷ்சியமான சில தகவல்கள் உங்களுக்காக…!
Y ஆபிரிக்க யானைகளின் காதுகள், ஆசிய யானைகளின் காதுகளைவிடவும்
பெரிதானதாகும்.
Y இரவு நேரத்தில், மனிதர்களினை
விடவும் 6 மடங்கு சிறப்பான பார்வைத் திறன் புலிகளுக்கு
உண்டாம்.
Y சிங்கத்தின்
கர்ஜனை ஓசை 5 மைல்களுக்கு
அப்பாலும் கேட்கக்கூடியதாம்.
Y ஒட்டகச்சிவிங்கிகள்
நின்றுகொண்டே
குட்டிகளை பிரசவிக்கின்றன.
குட்டிகள் பிறந்த அரைமணி நேரத்திலேயே
நிற்கக் கற்றுக்கொள்வதுடன்,
பிறந்த பத்து மணி நேரத்திலேயே தனது தாயுடன் நடக்கக் கற்றுக்கொள்கின்றது.
Y உலகில் 210 வகையான ஆடு இனங்கள் உள்ளன.
Y 24 மணி நேரத்தில், நீர்யானை 250 லீற்றருக்கும்(56 கலன்கள்) அதிகமான நீரினை அருந்துகின்றனவாம். ஆபிரிக்காவில் பல பேரைக் கொல்லும் முதன்மை வனவிலங்காக நீர்யானை விளங்குகின்றது.
Y காண்டாமிருகங்களின்
கண்பார்வை சக்தி குறைவானதாயினும்
அவற்றின் மோப்ப சக்தி மற்றும் கேட்கும் சக்தி அபாரமானதாகும்.
Y ஒட்டகங்களின்
உடல் வெப்பநிலை பகல் வேளையில் அதிகரித்துச் சென்று, இரவு வேளையில் குளிர் நிலையினை
அடைகின்றது.
***
(குறிப்பு
è நேற்றைய தினமே இப்பதிவினை பதிவிட எண்ணியிருந்த போதிலும் முடியாமல்
போய்விட்டது)