⃠ பெப்ரவரி
21 – உலக
தாய்மொழி
தினம் ⃠
ஆண்டுதோறும் பெப்ரவரி
21-ஆம் நாள் ‘தாய்மொழி நாளாக’ உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. 1952 ஆம் ஆண்டு தங்கள்
தாய்மொழியைக் காப்பதற்கான போராட்டத்தில் உயிர் நீத்த வங்கதேச மொழியுரிமை போராளிகளின்
நினைவாக 2000ம் ஆண்டு முதல் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.
⃠ உலகளாவியரீதியில் 6500 இற்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன. இந்த மொழிகளில் அண்ணளவாக 2000 மொழிகள் 1000 இற்கும் குறைவான மக்கள் தொகையினராலேயே பேசப்படுகின்றது.
⃠ உலகில் 100 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் தொகையினாரல் பேசப்படும் மொழிகள் 13 மாத்திரேமே ஆகும். அவையாவன; மண்டேரியன் சீனம், ஆங்கிலம்,ஹிந்தி,ஸ்பெயின் மொழி,ரஷ்ய மொழி,அரபு,வங்காள மொழி, போர்த்துகேய மொழி,மலாய் இந்தோனேசியா, பிரெஞ்சு மொழி,ஜப்பானிய மொழி, ஜேர்மனிய மொழி மற்றும் உருது ஆகியனவாகும்.
⃠ உலகில் அதிக மக்கள் தொகையினரால் பேசப்படுகின்ற மண்டேரியன் சீன மொழியானது 6000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும்.
⃠ உலகில்
ஆறு மொழிகளே பழமையான மொழிகளாகும். அவையாவன ; தமிழ் மொழி , அரபு மொழி ,
சீன மொழி , சமஸ்கிருத மொழி , கிரேக்க மொழி, இலத்தீன் மொழி
⃠ உலகில் இலத்தீன் மொழியினை உத்தியோகபூர்வ மொழியாகக் கொண்ட ஒரே நாடு வத்திக்கான் ஆகும்.
⃠ உலகில் நெடுங்கணக்கில் அதிக எழுத்துக்களைக் கொண்ட மொழி கம்போடிய கெமர் மொழியாகும். 74 எழுத்துக்களை கெமர் மொழி கொண்டிருக்கின்றது.
⃠ உலகில் அதிக மொழிகள் பேசப்படுகின்ற நாடு பவுவா நியூ கினியா ஆகும்.
பசுபிக் சமுத்திரத்தின் தென்மேற்கே அமைந்துள்ள இந்த நாட்டில் 850 இற்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன.
பசுபிக் சமுத்திரத்தின் தென்மேற்கே அமைந்துள்ள இந்த நாட்டில் 850 இற்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன.
⃠ ஆபிரிக்காவில் 2000 இற்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன.
இதில் 80% ஆன மொழிகளுக்கு எழுத்து வடிவம் இல்லை.
இதில் 80% ஆன மொழிகளுக்கு எழுத்து வடிவம் இல்லை.
⃠ உலகில் பேசப்படுகின்ற மொழிகளில் அரைவாசிக்கும் மேற்பட்ட மொழிகள்
ஆசியாவிலும், பசுபிக் தீவுகளிலும் பேசப்படுகின்றதாம்.
****
3 comments:
நல்லதொரு தொகுப்பிற்கு நன்றி நண்பா...
அருமையான பதிவு நன்றி நண்பரே ...
சிவாவின் கற்றதும் பெற்றதும்
நன்றிகள் சகோ ....
Post a Comment