Saturday, June 20, 2009

இணைய ஒஸ்கார் விருதுகள் (Oscars of the Internet)




கலை,இலக்கியம்,சினிமா என விரியும் அத்தனை துறைகளிலும் உருவாக்கப்படும் படைப்புக்கள், சேவைகள் என்பவற்றுக்கு வருடாந்தம் வெவ்வேறு நிறுவனங்களால் விருதுகள் வழங்கப்படுவது வழக்கம்.ஆனாலும்,மிக உன்னதமான விருதுகளாக ஒரு சில விருதுகளே கருதப்படுகின்றன இணையப்பரப்பில் இவ்வாறு வழங்கப்படும் விருதுகளில் மிக உன்னதமான விருதாகக் கருதப்படுவது Webby Awards என்பதாகும் .இது இணையத்தின் ஒஸ்கார் விருதுகள் என்றும் அழைக்கப்படுவதுண்டு .

வழமைபோலவே சர்வதேச தரத்தில் ஊடாடு நிலை உச்சளவில் கொண்ட மிகவும் உயர்தரத்தில் உருவாக்கப்பட்டுள்ள இணையத்தளங்களுக்கு இவ்வருடமும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன .

Webby Person of the Year எனும் விருதினை Jimmy Fallon பெற்றுக்கொண்டார்.மேலும் இவரைப்பற்றி அறிய http://www.latenightwithjimmyfallon.com/ செல்லவும்











அதே போன்று Webby Lifetime Achievement விருதை Sir Tim Berners-Lee பெற்றுக்கொண்டார். இணைய தொழில்நுட்ப மற்றும் தொடர்பாடல்களுக்கு என்னற்ற பங்களிப்பை வழங்கியதற்கான அங்கீகாரமாக இவ்விருது வழங்கப்பட்டது .WWW இனை கண்டுபிடித்தவர்களில் ஒருவராக இவர் பெருமளவில் அறியப்படுகின்றார் . இவர் Open-source Web முன்னோடியும் வார்.இவரைப்பற்றி அறிய www.w3.org/people/Berners-Lee செல்லவும்











550 உறுப்பினர்களையுடைய The International Academy of Digital Arts and Sciencesகுழுமத்தினாலேயே வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது .இக்குழுவில் உலகின் முன்னணி கலைஞர்கள் பலரும் இடம்பெறுகின்றனர்.

70 பிரிவுகளில் தெரிவுசெய்யப்பட்ட வெற்றியாளர்களுக்கு New York நகரில் ஜூன் 8ம் திகதி நடைபெற்ற 13 வது Webby Awards வைபவத்தில் விருதுகள் வழங்கப்பட்டன .

இணையம் ,தனிநபர் வாழ்க்கை என்ற இரண்டு விடயங்களையும் இரண்டற கலக்கும்முயற்சி கலையார்வலர்களும் சிந்தனையாளர்களும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது மட்டும் தெளிவான உண்மையாகும் இவ்வாறான முயற்சிகளே மக்களாலும் பெரிதளவில் விரும்பப்படுகின்றன .


1 comment:

RJ Dyena said...

Hi Loga

Its was a very interesting news to know..

thanks for sharing this with us...

keep up ur work...

En valaippoo pakkam ettippaarthamaikkum nandrihal

Priyamudan
Dyena

Blog Widget by LinkWithin