தனி ஒருவராக மைக்கல் பெல்ப்ஸ் வென்ற பதக்கங்கள் 28 (23 golds, 3 silvers, 2 bronzes) . ஒரு நாடாக இந்தியா பெற்ற பதக்கங்களும் 28.
தடகள போட்டியில் இந்தியாவுக்காக பதக்கம் வென்ற ஒரே வீரர் நார்மன் பிரிட்சர்ட். 1900-ம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக்கில் இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்றார். பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த பெற்றோருக்கு மகனாக இருந்தாலும், இந்தியாவில் வளர்ந்து பணி புரிந்தவர்.
சுதந்திர இந்தியாவில் பதக்கம் வென்ற முதல் தனி நபர் கஷாபா ஜாதவ். 1952 ஹெல்சின்க்கி (ஃபின்லாந்து) ஒலிம்பிக்கின் மல்யுத்த போட்டியில் வெண்கலம் வென்றார். இந்தியா வென்ற வெண்கலப் பதக்கங்கள் மொத்தம் 9.
5 இந்திய வீராங்கனைகள் பதக்கம் வென்றுள்ளனர். முதல் பதக்கம் வென்ற பெருமை பளுதூக்குதல் வீராங்கனை கர்ணம் மல்லேஸ்வரியைச் சேரும்.
மொத்தமாக இந்தியா இதுவரை 22 விளையாட்டுகளில் மட்டுமே பங்கேற்றுள்ளது.
இந்தியா பங்கேற்ற 24 ஒலிம்பிக்குகளில், பதக்கமின்றி நாடு திரும்பிய ஒலிம்பிக்குகள் 6. (1920,1924,1976,1984,1988,1992)
(@Vikatan)