Tuesday, December 10, 2013

நோபல் பரிசு தொடர்பான சில சுவாரஷ்சியமான தகவல் துளிகள்…!

டைனமைட்டினை  கண்டுபிடிப்பின் அல்பிரட் நோபல் அவர்களின் 117வது நினைவு தினம் (டிசம்பர் 10, 2013) இன்றாகும்.



உலகில் மிக நீண்ட ஆண்டுகளாக வழங்கப்படுகின்ற உன்னத விருதாகிய நோபல் பரிசின் ஸ்தாபகர் அல்பிரட் நோபல் ஆவார். நோபல் பரிசானது 1901ம் ஆண்டு தொடக்கம் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

அந்தவகையில், நோபல் பரிசு தொடர்பான சில சுவாரஷ்சியமான தகவல் துளிகள்…!

Y இரண்டு வெவ்வேறான துறைகளில் நோபல் பரிசு பெற்ற பெருமைக்குரியவர்கள்;   லீனஸ் கார்ல் பெளலிங் (இரசாயனம் 1954 & ; சமாதானம் 1962)


 ⇨ மேரி கியூரி (இரசாயனம் 1903  & ; பெளதிகம் 1911) ஆகியோராவர்.

Y மிகக்குறைந்த வயதில் (25) நோபல் பரிசு பெற்ற பெருமைக்குரியவர் லோரன்ஸ் ப்ராக், இவர் பெளதிகவியல் துறைக்கான நோபல் பரிசினை 1915ம் ஆண்டு தனது தந்தையரான வில்லியம் ப்ராக் உடன் பகிர்ந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.


Y மிகக்கூடிய வயதில் (90) நோபல் பரிசு பெற்ற பெருமைக்குரியவர் லியோனிட் ஹுர்விக்ஸ், இவர் பொருளியல் துறைக்கான நோபல் பரிசினை 2007ம் ஆண்டு பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.


Y ஒரே துறையில் இரண்டு தடவைகள் நோபல் பரிசினைப் பெற்ற பெருமைக்குரியவர்கள்;
ஜொன் பார்டீன், இவர் பெளதிகவியல் துறைக்கான நோபல் பரிசினை 1956 மற்றும் 1972ம் ஆண்டுகளில் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

ப்ரெட்ரிக் சான்கர் இவர் இரசாயனவியல் துறைக்கான நோபல் பரிசினை 1958 மற்றும் 1980ம் ஆண்டுகளில் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

Y மூன்று தடவைகள் நோபல் பரிசினைப் பெற்ற ஒரேயொரு அமைப்பு, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஆகும். சமாதானத்திற்கான நோபல் பரிசினை 1917, 1944 மற்றும் 1963ம் ஆண்டுகளில் ICRC பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

Y "நோபல்" குடும்பம்…!
1903ம் ஆண்டு பெளதிகவியல் துறைக்கான நோபல் பரிசினை மேரி கியூரி தனது கணவரான பியூரி கியூரியுடன் இணைந்து பெற்றுக்கொண்டார்.


1935ம் ஆண்டு இரசாயனவியல் துறைக்கான நோபல் பரிசினை மேரி கியூரி, பியூரி கியூரி ஆகியோரின் புதல்வியான ஐரீன் ஜூலியட் கியூரி தனது கணவரான ப்ரெட்ரிக் ஜூலியட் கியூரியுடன் இணைந்து பெற்றுக்கொண்டார்.






***

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சிறப்பான தகவல்களுக்கு நன்றி நண்பரே...

கே.கே.லோகநாதன் - KK Loganathan [B.Com] said...

நன்றிகள் சகோ…

Anonymous said...

அரிய தகவல்கள் அழகான தொகுப்பு..

Blog Widget by LinkWithin