Monday, February 15, 2010

பெண் “பிரட்மன்” காலமானார்


கிரிக்கெட்டில் பெண் பிரட்மன் என செல்லமாக அழைக்கப்பட்ட அவுஸ்ரேலியாவின் மகளிர் கிரிக்கெட் அணியில் விளையாடிய வெட்ரி வில்சன், தனது 88 வது வயதில் ஜனவரி மாதம் காலமானதாக அறிவிக்கப்படுகின்றது.

1947/48 தொடக்கம் 1957/58 பருவகாலத்தில் அவுஸ்ரேலிய அணிக்காக 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். வில்சணின் சராசரி 57.46 அத்துடன் 68 விக்கட்களை 11.80 என்ற சராசரியில் வீழ்த்தியமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

வில்சன் 1948ம் ஆண்டு, தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணிக்கெதிராக 90 ஓட்டங்களினைப் பெற்றதுடன் 10 விக்கட்களை வீழ்த்தியமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

ஒரு தசாப்தற்குப் பின் 1957-58 பருவகாலத்தில் சென்.கில்டாவில், இங்கிலாந்து அணிக்கெதிராக டெஸ்ட் போட்டி ஒன்றில் 100 ஓட்டங்களினைப் பெற்றதுடன் 10 விக்கட்களினையும் வீழ்த்தி சாதனை படைத்தமை குறிப்பிடத்தக்கதாகும். 1வது இன்னிங்ஸ்சில் 7 ஓட்டங்களுக்கு 7 விக்கட்களினை வில்சன் வீழ்த்தினார். இதில் பெண்கள் டெஸ்ட் போட்டி ஒன்றில் முதலாவது ஹெட் ரிக் சாதனையும் வில்சனால் படைக்கப்பட்டது.

ஆண்கள்/பெண்கள் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் டெஸ்ட் போட்டி ஒன்றில் 100 ஓட்டங்களினைப் பெற்றதுடன் 10 விக்கட்களினையும் வீழ்த்திய முதல் நபர் வில்சன் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

குறைந்த ஓட்டத்தினை 1வது இன்னிங்ஸ்சில் பெற்ற அவுஸ்ரேலிய அணியின் சார்பில் வில்சன் 12 ஓட்டங்களினையும், 2வது இன்னிங்ஸ்சில் 100 ஓட்டங்களினையும் பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும். 2வது இன்னிங்ஸ்சில், வில்சன் 19 ஓவர்கள் பந்துவீசி 9 ஓட்டங்களுக்கு 4 விக்கட்களினை வீழ்த்தி மொத்தமாக அந்த டெஸ்ட்டில் 16 ஓட்டங்களுக்கு 11 விக்கட்களை வீழ்த்தினார். இது 2004ம் ஆண்டு வரை சாதனையாக இருந்தது.

அவுஸ்ரேலியாவில் 21 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான தேசிய கிரிக்கெட் போட்டிகள் வில்சனின் பெயரிலேயே நடைபெறுகின்றன.

பெண்கள் கிரிக்கெட்டின் முன்னோடியாகவும், அபாரமான திறமைகளைக் கொண்ட வீராங்கனையாகவும் வில்சன் விளங்கினார் என கிரிக்கெட் அவுஸ்ரேலியா தெரிவித்துள்ளது.

***

Blog Widget by LinkWithin