Monday, February 15, 2010

பெண் “பிரட்மன்” காலமானார்


கிரிக்கெட்டில் பெண் பிரட்மன் என செல்லமாக அழைக்கப்பட்ட அவுஸ்ரேலியாவின் மகளிர் கிரிக்கெட் அணியில் விளையாடிய வெட்ரி வில்சன், தனது 88 வது வயதில் ஜனவரி மாதம் காலமானதாக அறிவிக்கப்படுகின்றது.

1947/48 தொடக்கம் 1957/58 பருவகாலத்தில் அவுஸ்ரேலிய அணிக்காக 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். வில்சணின் சராசரி 57.46 அத்துடன் 68 விக்கட்களை 11.80 என்ற சராசரியில் வீழ்த்தியமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

வில்சன் 1948ம் ஆண்டு, தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணிக்கெதிராக 90 ஓட்டங்களினைப் பெற்றதுடன் 10 விக்கட்களை வீழ்த்தியமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

ஒரு தசாப்தற்குப் பின் 1957-58 பருவகாலத்தில் சென்.கில்டாவில், இங்கிலாந்து அணிக்கெதிராக டெஸ்ட் போட்டி ஒன்றில் 100 ஓட்டங்களினைப் பெற்றதுடன் 10 விக்கட்களினையும் வீழ்த்தி சாதனை படைத்தமை குறிப்பிடத்தக்கதாகும். 1வது இன்னிங்ஸ்சில் 7 ஓட்டங்களுக்கு 7 விக்கட்களினை வில்சன் வீழ்த்தினார். இதில் பெண்கள் டெஸ்ட் போட்டி ஒன்றில் முதலாவது ஹெட் ரிக் சாதனையும் வில்சனால் படைக்கப்பட்டது.

ஆண்கள்/பெண்கள் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் டெஸ்ட் போட்டி ஒன்றில் 100 ஓட்டங்களினைப் பெற்றதுடன் 10 விக்கட்களினையும் வீழ்த்திய முதல் நபர் வில்சன் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

குறைந்த ஓட்டத்தினை 1வது இன்னிங்ஸ்சில் பெற்ற அவுஸ்ரேலிய அணியின் சார்பில் வில்சன் 12 ஓட்டங்களினையும், 2வது இன்னிங்ஸ்சில் 100 ஓட்டங்களினையும் பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும். 2வது இன்னிங்ஸ்சில், வில்சன் 19 ஓவர்கள் பந்துவீசி 9 ஓட்டங்களுக்கு 4 விக்கட்களினை வீழ்த்தி மொத்தமாக அந்த டெஸ்ட்டில் 16 ஓட்டங்களுக்கு 11 விக்கட்களை வீழ்த்தினார். இது 2004ம் ஆண்டு வரை சாதனையாக இருந்தது.

அவுஸ்ரேலியாவில் 21 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான தேசிய கிரிக்கெட் போட்டிகள் வில்சனின் பெயரிலேயே நடைபெறுகின்றன.

பெண்கள் கிரிக்கெட்டின் முன்னோடியாகவும், அபாரமான திறமைகளைக் கொண்ட வீராங்கனையாகவும் வில்சன் விளங்கினார் என கிரிக்கெட் அவுஸ்ரேலியா தெரிவித்துள்ளது.

***

Friday, February 12, 2010

காதல் வந்துவிட்டால்..

இந்தப் திவானது ஒரு கலவைப் பதிவாக காதலர் தினம் & வெற்றி வானொலி ஆகிய விடயங்களினைப் பற்றியதாகும். நண்பர்களே ரசியுங்கள்..................................



************************************************

காதல் வந்துவிட்டால்................

ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி மாதம் 14ம் “சர்வதேச காதலர் தினம்” என்பது அனைவரும் அறிந்த தகவலாகும்.

அதேபோல் உலகளாவிய ரீ தியில் ஏராளமான மொழிகள் பாவனையில் உள்ளது.

அந்தவகையில் பின்வரும் மொழிகளினை பேசுபவர்களுக்கு காதல் வந்துவிட்டால் தமது காதலினை தத்தமது மொழிகளில் எவ்வாறு வெளிப்படுத்துவார்கள்...........

சீன மண்டேரியன் மொழியில் - Wo ai ni

டனிஷ் மொழியில் – Jeg elsker dig

டச்சு மொழியில் – Ik hou van jou

யப்பானிய மொழியில் – Aishite imasu

ரஷ்யன் மொழியில்- Ya vas liubliu

ஸ்பானிஷ் மொழியில்- Te amo

சுவீடிஷ் மொழியில்- Jag alskar dig

துருக்கிய மொழியில் – Seni seviyorum

ஜேர்மனிய மொழியில் - Ich liebe Dich

ரோமானியன் மொழியில்- Te iu besc

இத்தாலி மொழியில்- Ti amo

லத்தீன் மொழியில்- Te amo

பிரெஞ்சு மொழியில் – Je t'aime

இந்தோனேசியன் மொழியில் - Saya cinta kamu

அடடா இனி உங்கள் காதலினை சொல்வதற்கு மொழி தெரியாது என விழிவிதுங்கி நிற்காமல் சும்மா அள்ளிவிடுங்கோவன்...........


குறிப்பு - இல்லை!!! என் காதலினைபோமொழியில் தான் சொல்வேன் என்று நீங்கள் யாராவது அடம்பிடித்தால் அதற்கு நான் சொல்லும் பதில் யாதெனில்போமொழி கடந்த வாரம் உலகிலிருந்து முற்றாக அழிந்துவிட்டதாம். ஆம், இந்தியாவின் அந்தமான் தீவுகளி ல் வசித்தபோபழங்குடியினைச்போமொழி பேசி உயிர் வாழ்ந்த இறுதிப் பெண்மணி கடந்த வாரம் தனது 85 வயதில் காலமாகிவிட்டாராம். அந்தப் பெண்மணிக்கு வாரிசுகள் யாரும் இல்லையாம்...... அந்தப் பெண்மணியின் மரணத்துடன்போமொழியும் உலகிலிருந்து மறைந்துவிட்டது கவலை தரும் செய்தியாகும்.

*********************************************

வெற்றி வானொலிக்கு வயது இரண்டு



இலங்கையின் கொழும்பிலிருந்து நாடு பூராகவும், உலகளாவிய ரீதியில் இணையத்திலும் ஒலிக்கும் வெற்றி FM வானொலியானது எதிர்வரும் 14ம் திகதி தனது 2ம் ஆண்டு நிறைவினைக் கொண்டாடுகின்றது.



.ஆர்.வி.லோஷன் அவர்களின் தலைமையில் இயங்கும் வெற்றி வானொலியின் ரசிகன் என்ற வகையில் வெற்றி வானொலிக்கு என்னுடைய இதயபூர்வமான நல்வாழ்த்துக்களினை தெரிவித்துக் கொள்கின்றேன்.

நேயர்களின் ரசனையினை அறிந்து அதற்கேற்றாற் போல் நிகழ்ச்சிகளைப் படைத்துவரும் வெற்றி வானொலியானது எதிர்காலத்திலும் வானலையில் புதுமைகளினைப் படைக்க வேண்டும் என வேண்டிக்கொள்வதுடன் வாழ்த்துக்களினையும் தெரிவித்துக் கொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன்.


***

Wednesday, February 10, 2010

பத்திரிகையில் என் பதிவு

என்னுடைய வலைப்பதிவில் பதிவிட்ட கைத்தொலைபேசியும் நித்திரையும்

என்ற ஆக்கமானது கடந்த ஞாயிறு தினக்குரல் பத்திரிகையில் (31.01.2010) வெளியாகியது.

அதேதினம் வீரகேசரி வாரவெளியீட்டில் வெளியாகிய ஈர நிலங்களின் முக்கியத்துவம் என்ற என்னுடைய கட்டுரையினை என் பதிவில் வாசித்திருப்பீர்கள்.

வலைப்பதிவு ஆக்கங்களினை பத்திரிகைகள், சஞ்சிகைகள், இணையத்தளங்கள் பிரசுரிப்பது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.







(நன்றி-ஞாயிறு தினக்குரல் 31.01.2010)

***

Blog Widget by LinkWithin