Monday, January 11, 2010

சிங்கங்களைப் பாதுகாப்போம்............

ஆபிரிக்காவில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்னர் அரை மில்லியன் அளவில் அதாவது 450,000 ஆக காணப்பட்ட சிங்கங்கள் இன்று 16000-23000க்கு இடைப்பட்ட எண்ணிக்கையிலேயே மிஞ்சியுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதேவேளை யானைகள், சிங்கங்கள் உட்பட அதிகளவான உயிரினங்கள் சர்வதேச ரீதியாக குறிப்பிட்ட சில காரணங்களினால் பாதுகாப்பின்மைகளை எதிர் நோக்கியுள்ளன.



புலிகளும் பிரச்சினைகளை எதிர் நோக்கியுள்ளன. புலிகளின் எண்ணிக்கை 3000க்கும் குறைவாகவே காணப்படுகின்றனவாம். புலிகள் மிகவும் அருகிவருகின்றன. புலிகளின் எலும்புகள் கிழக்குலகில் மருத்துவ தேவைகளுக்காகவும், ஆயுர்வேத முறையில் வியாதிகளினைக் குணமாக்குவதற்கும் பயன்படுத்துவதனலால் இதற்கான கேள்வி அதிகமாகக் காணப்படுகின்றதாம். வளர்ச்சியடைந்த கேள்வி, அத்துடன் சுருங்குகின்ற விநியோகம் இந்த அபாயத்துக்கான சூத்திரமாகும்.

இதன் காரணமாக புலிகளின் எலும்புகளிலிருந்து, சிங்கங்களின் என்புகளுக்கு மாற்றீடு பெற்றுள்ளது. இவை புலிகளின் எலும்புகளுக்குப் பதிலாக இலகுவாக விற்கப்படுகின்றதாம்.
சிங்கங்கள் ஆபிரிக்காவில் மிகவும் பிரபலமான விலங்காகும். அதேவேளை உலகிலும் பிரபலமானது எனலாம். கடந்த 20ஆண்டுகளில் இவற்றின் எண்ணிக்கை 50 சதவீதமாகக் குறைவடைந்துள்ளனவாம்.



இவை பெரியளவிலான அச்சுறுத்தல்களை வேட்டைக்காரர்களிடமிருந்தும், சட்டவிரோத கும்பல்களிடமிருந்தும் எதிர் நோக்குகின்றன. கொலைகாரர்கள் மிருகங்களினைக் கொல்ல பூச்சிகொல்லிகளையும் பயன்படுத்துகின்றார்களாம்.

அழிவு அல்லது கொலை அச்சுறுத்தல்கள் காரணமாக 2020ம் ஆண்டுக்குப் பின்னர் வேட்டையாடுவதற்கோ அல்லது பாதுகாப்பதற்காகவோ சிங்கங்களே காணப்படமாட்டாதாம் என அபாய எச்சரிக்கைகள் விடப்பட்டுள்ளன.

மேலும் கடந்த 15 வருடங்களில் காண்டா மிருகங்கள் வேட்டையாடப்படும் வேகம் தற்போது அதிகரித்துள்ளதாக எச்சரிக்கைகள் விடப்பட்டுள்ளன. ஆபிரிக்கா மற்றும் ஆசியாவில் காண்டா மிருகங்களின் வேட்டை அதிகரித்துள்ளனவாம். இதற்கான காரணம் காண்டா மிருகக் கொம்புகளுக்கு நிலவும் அதிகரித்த கேள்வியாகும். ஏனெனில் இவை அதிகமான மருத்துவக் குணங்கள் பொருந்தியதாகக் காணப்படுவதேயாகும். முழு ஆபிரிக்காவிலும் 18000 காண்டா மிருகங்கள் உள்ளதாகக் கணிப்பிடப்பட்டுள்ள நிலையில் அதிகரித்த வேகத்தில் இவை கொல்லப்படுவதன் காரணமாக இவற்றின் குடித்தொகை வெகுவாகக் குறைய காரணியாகி விடும் என அபாய எச்சரிக்கைகள் விடப்பட்டுள்ளன.



வேட்டைக்காரர்களிடமிருந்தும், சட்டவிரோத கும்பல்களிடமிருந்தும் உயிரினங்களினை பாதுகாக்க நாம் தவறிவிட்டோம் அத்துடன் அதிக காலம் தாமதித்துவிட்டோம்.
விஞ்ஞானிகள், சுற்றாடல் பாதுகாவலர்கள் உட்பட அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டியதன் அவசியம் தற்சமயம் உணரப்படுகின்றமை நாம் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டிய விடயமாகும்.



***

Saturday, January 9, 2010

கிரிக்கெட்டில் "100" விக்கட் தொடர்பான சுவையான தகவல்கள்



சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 100 விக்கட்தொடர்பான சுவையான தகவல்கள்

# சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 100 விக்கட்களை வீழ்த்திய முதல் பந்துவீச்சாளர் அவுஸ்ரேலிய அணியின் டென்னிஸ் லில்லி (60வது ODI)
# சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 100 விக்கட்களை வீழ்த்த குறைந்த போட்டிகளை எடுத்துக்கொண்ட பந்துவீச்சாளர் பாகிஸ்தான் அணியின் சக்லைன் முஷ்டாக் (53 ODI)
# சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 100 விக்கட்களை வீழ்த்த குறைந்த நாட்களை எடுத்துக்கொண்ட பந்துவீச்சாளர் பாகிஸ்தான் அணியின் சக்லைன் முஷ்டாக் (592 நாட்கள்) 22 செப்டம்பர் 1995 - 12 மே 1997
# சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 100 விக்கட்களை வீழ்த்த குறைந்த சராசரியினை எடுத்துக்கொண்ட பந்துவீச்சாளர் பாகிஸ்தான் அணியின் சக்லைன் முஷ்டாக் (19.25)
# சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 100 விக்கட்களை வீழ்த்திய குறைந்த வயது கொண்ட பந்துவீச்சாளர் பாகிஸ்தான் அணியின் சக்லைன் முஷ்டாக் (20வயது 134 நாட்கள்)





டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 விக்கட்தொடர்பான சுவையான தகவல்கள்

# டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 விக்கட்களை வீழ்த்திய முதல் பந்துவீச்சாளர் அவுஸ்ரேலிய அணியின் CTB ரேனர் (17டெஸ்ட்)
# டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 விக்கட்களை வீழ்த்த குறைந்த போட்டிகளை எடுத்துக்கொண்ட பந்துவீச்சாளர் இங்கிலாந்து அணியின் ஜோர்ஜ் லொஹ்மன் (16 டெஸ்ட்)
# டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 விக்கட்களை வீழ்த்த குறைந்த நாட்களை எடுத்துக்கொண்ட பந்துவீச்சாளர் இந்திய அணியின் கபில் தேவ் (1வருடம் 105 நாட்கள்) 29ஜனவரி 1980 - 16 ஒக்டோபர் 1978
# டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 விக்கட்களை வீழ்த்த குறைந்த சராசரியினை எடுத்துக்கொண்ட பந்துவீச்சாளர் இங்கிலாந்து அணியின் ஜோர்ஜ் லொஹ்மன் (10.75)
# டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 விக்கட்களை வீழ்த்திய குறைந்த வயது கொண்ட பந்துவீச்சாளர் கபில் தேவ் (21வயது 23நாட்கள்)




***

Friday, January 8, 2010

ஊனத்தினை வென்ற பெண்மணி...................

• பச்சோந்திகளின் நாக்கின் நீளமானது அதனது உடம்பின் நீளத்தினை விட இரண்டு மடங்காகுமாம்.
• 1066ம் ஆண்டு தொடக்கம் 1362ம் ஆண்டு வரையான 300 ஆண்டு காலப்பகுதியில் இங்கிலாந்தின் உத்தியோகபூர்வ மொழியாக பிரெஞ்சு மொழி விளங்கியதாம்.
• ஆண்களின் இருதயத்தினை விட பெண்களின் இருதயமானது வேகமாக துடிக்கின்றதாம்
• சுதந்திரதேவி சிலையின் சுட்டு விரலானது 8 அடி நீளமுடையதாம்.
• துருவக் கரடிகள் ஒரு அமர்வில் 86க்கும் அதிகமான பென்குவின்களை சாப்பிடக் கூடிய இயலுமை கொண்டதாம்.



• டொல்பின்கள் மணித்தியாலத்துக்கு 37மைல்(60 கிலோ மீற்றர்) வேகத்தில் நீந்தக்கூடியதாம்.
• நண்டு ஒரே நேரத்தில் 150,000 முட்டைகள் இடக் கூடியதாம்.
• ஜேர்மனியில் முகமூடி அணிவது சட்ட விரோதமாம்.
• அமெரிக்காவைச் சேர்ந்த பெண்மணி வில்மா ருடோல்ப் போலியா உட்பட ஏராளமான நோய்களின் பாதிப்பினை எதிர்கொண்டவர். ஆனாலும் இவர் மனம் தளரவில்லை, 1960ம் ஆண்டு ரோம் ஒலிம்பிக் தடகளப் போட்டிகளில் உலக சாதனைகளை முறியடித்து 3 தங்கப் பதக்கங்களை வென்றெடுத்தார்.




***
Blog Widget by LinkWithin