Tuesday, June 30, 2009

சுவாரஸ்சியமான அறிவுத் தகவல்கள்

1) பிரான்சின் 14வது மன்னர்  லூயி XIV நீரால் நோய்கள் பரவலாம் என்ற அச்சத்தினால் அடிக்கடி குளிக்கவில்லை 
2)இந்திய கணித மேதை ராமானுஜர் கண்டுபிடித்த கணித உண்மைகள் 4000ஆகும்.
3)திபெத்தில் மீனை தெய்வமாக கருதுவதால் மீனை சாப்பிடமாட்டார்கள்.
4)நத்தையில் ஆண்,பெண் கிடையாது.
5)கணித சூத்திரங்களால் கண்டுபிடிக்கப்பட்ட கிரகம் நெப்டியூன்(Neptune).
6)வலதுகால் செருப்புக்கள் தான் அதிகம் தேயும்.
7ஜப்பானியர்கள் இரு கைகளாலும் எழுதுவார்கள்.
8மகளிர்க்கென காற்பந்து ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட்டது -1996 அட்லாண்டா (USA) ஒலிம்பிக்கில்
9) எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனை கண்கள் தெரியுமா?

விடையினை கண்டுபிடித்தால் Comments பண்ணவும் நண்பர்களே?

Saturday, June 27, 2009

உலகில் சில நாட்டு மக்களின் வித்தியாசமான சம்பிரதாயங்கள்

உலகில் சில நாட்டு மக்களின் வித்தியாசமான சம்பிரதாயங்கள்.அதாவது அவர்கள் அநாகரிகமாகக் கருதும் சில பழக்க வழக்கங்கள்.

1)ஆபிரிக்க நாடுகளுக்கு செல்லும் போது மேலே கையைத் தூக்கி அசைப்பது அநாகரிகமாகக் கருதப்படுகின்றது.

2)சீனாவில் கடிகாரத்தை பரிசாகக் கொடுத்தல் அநாகரிகமாகக் கருதப்படுகின்றது. ஏனெனில் அது அவர்களுக்கு மரணச்சின்னம் ஆகும்.

3)கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் கையுறை அணிந்து கொண்டு கைலாகு கொடுப்பதை அநாகரிகமாகக் கருதுகின்றார்கள்.

4)எகிப்து நாட்டில் வெங்காயத்தை கொடுப்பதை அநாகரிகமாகக் கருதுகின்றார்கள்.

5)என்ன வேலை செய்கின்றீர்கள்? என்று இத்தாலி நாட்டில் கேள்வி கேட்பது அநாகரிகமாகக் கருதப்படுகின்றது.

6) படுக்கை மெத்தையில் தொப்பியை வைப்பது அர்ஜென்டினாவில் அநாகரிகமாகக் கருதப்படுகின்ற்து.

7) ஜப்பான் நாட்டில் குனியாமல் வணக்கம் சொல்லுதல் அநாகரிகமாகக் கருதப்படுகின்றது.

8) சிவப்பு மையில் பெயர் எழுதுவதை கொரியாக்காரர்கள் அநாகரிகமாகக் கருதுகின்றார்கள்.

9)அறிமுகமாகாத பெண்களுக்கு உதவி செய்தலை பிலிப்பைன்சில் அநாகரிகமாகக் கருதுகின்றார்கள்.ஏனெனில் அது நம் ஆசையை வெளிப்படுத்துவதாக அங்கே எடுத்துக் கொள்ளப்படுகின்றது.

10)தாய்லாந்தில் தலையில் கைவைத்து வாழ்த்துவதை அநாகரிகமாகக் கருதுகின்றார்கள்.

Friday, June 26, 2009

உலக பிரபலங்கள் சிலரினை பற்றிய சில சுவையான தகவல்கள்.

விஞ்ஞானிகள், மாவீரர்கள்,அறிஞர்கள் ஆகியோரில் சிலரினை பற்றிய சில அரிய சுவையான தகவல்கள்.

1)தோமஸ் அல்வா எடிசன் பள்ளிக்கு சென்றது மூன்றே மாதங்கள் தான்.

2)தோமஸ் அல்வா எடிசனுக்கு இருட்டு என்றால் பயமாம்.

3) அறிஞர்கள் சோக்ரடிசும்,ஹோமரும் எழுதப்,படிக்கத் தெரியாதவர்கள்.

4) மாவீரன் நெப்போலியனுக்கு பூனைகள் என்றால் பயமாம்.

5) மாவீரன் அலெக்ஸ்சாண்டர் காக்கை வலிப்பு நோய் உள்ளவராக இருந்தவராம்.

6)அல்பேர்ட் ஐன்ஸ்டீன் தனது ஒன்பது வயது வரையும் தங்குதடையின்றி பேசவல்லவராக இருக்கவில்லையாம், இதனால் அவரை பெற்றோர் மூளை வளர்ச்சி குன்றியவராக கருதினார்கள்.

7) 1952 ஆம் ஆண்டு இஸ்ரேல் நாடு ஐன்ஸ்டீன்க்கு ஜனாதிபதி பதவியை வழங்க முன்வந்தது, ஆனால் அதனை ஐன்ஸ்டீன் நிராகரித்துவிட்டார்.

8) வோல்ட் டிஸ்னிக்கு(Walt Disney)எலிகளை கண்டால் பயமாம்.

Blog Widget by LinkWithin