Thursday, October 1, 2015

உலகில் நீண்ட காலமாக அரசாட்சி புரிந்து வரும் ஆட்சியாளர்கள்...!

ஐக்கிய இராச்சியத்தின் அரசியான இரண்டாம் எலிசபெத், அந்நாட்டு அரியணையில் அதிக காலம் ஆட்சிபுரிந்தவர் என்ற சாதனையினை ஏற்படுத்தியுள்ளார். கடந்த செப்டெம்பர் 09, 2015 அன்று இச்சாதனையினை அவர் புரிந்தார்.

செப்டெம்பர் 09, 2015 மாலை 5.30 (இங்கிலாந்து நேரப்படி) மணியளவில் அவர் 63 வருடங்கள், 7 மாதங்கள், 2 நாட்கள், 16 மணித்தியாலங்கள், 23 நிமிடங்களை அரியணையில் கழித்த அவரது முப்பாட்டியான அரசி விக்டோரியாவின் சாதனையே அவர் முறியடித்தார்.
1926 ஆம் ஆண்டு பிறந்த அரசி  எலிசபெத், 1952ஆம் ஆண்டு  முதல் இன்றுவரை அரசியாகக் காணப்படுகிறார்.

உலகிலேயே நீண்ட காலமாக அரசாட்சி புரிந்து வரும் ஆட்சியாளர்களின் விபரம் வருமாறு;

1) தாய்லாந்து மன்னர் பூமிபோல் அதுல்யடேஜ் 


பிறப்பு : 1927
முடி சூட்டப்பட்ட ஆண்டு : ஜூன் 9, 1946
அரசாட்சி ஆண்டுகள் : 69

2) அரசி இரண்டாம் எலிசபெத்


பிறப்பு : 1926
முடி சூட்டப்பட்ட ஆண்டு : பெப்ரவரி 6, 1952
அரசாட்சி ஆண்டுகள் : 63

3) புரூணை சுல்தான் ஹாஜி ஹஸ்ஸனல் போல்கியா 


பிறப்பு : 1946
முடி சூட்டப்பட்ட ஆண்டு : அக்டோபர் 5, 1967
அரசாட்சி ஆண்டுகள் : 47

4) ஓமான் சுல்தான் கபூஸ் பின் சயிட் அல் சயிட்


பிறப்பு : 1940
முடி சூட்டப்பட்ட ஆண்டு : ஜூலை 23, 1970
அரசாட்சி ஆண்டுகள் : 45

5) டென்மார்க் அரசி மார்கெரெத்தே


பிறப்பு : 1940
முடி சூட்டப்பட்ட ஆண்டு : ஜனவரி 14, 1972
அரசாட்சி ஆண்டுகள் : 43

6) சுவீடன் மன்னர் கார்ல் பதினாறாம் கஸ்டாவ்


பிறப்பு : 1946
முடி சூட்டப்பட்ட ஆண்டு : செப்டெம்பர் 15, 1973
அரசாட்சி ஆண்டுகள் : 41

7) சுவாசிலாந்து மன்னர் மூன்றாம் மஸ்வாதி


பிறப்பு : 1933
முடி சூட்டப்பட்ட ஆண்டு : ஏப்ரல் 25, 1986
அரசாட்சி ஆண்டுகள் : 29

8) ஜப்பான் பேரரசர் அகிஹிடோ


பிறப்பு : 1938
முடி சூட்டப்பட்ட ஆண்டு : ஜனவரி 7, 1989
அரசாட்சி ஆண்டுகள் : 26

9) லெசோதோ மன்னர் மூன்றாம் லெட்சிய்


பிறப்பு : 1933
முடி சூட்டப்பட்ட ஆண்டு :  நவம்பர் 12, 1990
அரசாட்சி ஆண்டுகள் : 24

10) நோர்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட்


பிறப்பு : 1933
முடி சூட்டப்பட்ட ஆண்டு :  ஜனவரி 17, 1991
அரசாட்சி ஆண்டுகள் : 24

***

Blog Widget by LinkWithin