Saturday, June 21, 2014

இசையால் வசமாக இதயமுண்டோ…!

இசைத்துறையில் வளர்ந்துவரும் தலைமுறையினருக்கு ஆர்வத்தை அளிக்கவும், இசைத்துறையில் சாதனை படைத்தவர்களை பாரட்டும் விதத்திலும் ஜூன் 21ம் தேதி உலக இசை தினம் கொண்டாடப்படுகிறது. 





நமது எண்ணம், செயல்கள் மற்றும் நினைவுகள் ஆகியவை அடங்கிய உணர்வுபூர்வமானது. பெரும்பாலானோரின் கவலையை தீர்க்கும் மருந்தாகவும், சிறந்த பொழுதுபோக்கு அம்சமாகவும் இசை திகழ்கிறது.

இசை கேட்டால் புவி அசைந்தாடும்….!
இசையால் வசமாக இதயமுண்டோ….!

அந்தவகையில், இசை தொடர்பிலான சில சுவாரஷ்சியமான தகவல்கள்…!

v பியானோ இசைக்கருவியில் மொத்தமாக 88 விசைக்கருவிகள் உண்டு. இதில் 52 வெள்ளை விசைக்கருவிகளும், 36 கறுப்பு விசைக்கருவிகளும் அடங்கும்.



v உலகில் மிகப்பழமையான இசைக்கருவியாக கருதப்படுகின்ற கழுகின் எலும்பினால் தயாரிக்கப்பட்ட புல்லாங்குழல் தென்மேற்கு ஜேர்மனியில் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். இது 35,000 ஆண்டுகள் பழமைவாய்ந்தது என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

v இசை மீதான பயம் மெலோபோபியா (Melophobia) எனப்படுகின்றது.
v அயர்லாந்து நாட்டு குற்றி நாணயத்தில் உள்ள இசைக்கருவி யாழ் (Harp) ஆகும்.

v 1877ம் ஆண்டு ஜேர்மனி நாட்டினைச் சேர்ந்த இசையமைப்பாளர் ஜொகன்னஸ் பிராம்ஸ் அவர்களுக்கு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் கெளரவ பட்டமளிக்க முன்வந்தது, ஆனால் படகு பயண பயத்தின் காரணமாக தனக்கான கெளரவமளிப்பினை அவர் நிராகரித்தார்.

v   முதன்முதலாக தொலைபேசி இணைப்பினூடாக இசையானது 1876ம் ஆண்டுஅனுப்பப்பட்டது. 1876ம் ஆண்டு தொலைபேசி கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

v உலகில் அதிகளவில் விற்பனையாகும் இசைக்கருவி ஹார்மோனிகா ஆகும்.


vஅண்மைய நாட்களில் DJ (Disc Jockey)என்கின்ற வார்த்தை மிகப்பிரபலமானதொன்றாக விளங்குகின்றது. இவ்வார்த்தை முதன்முதலில் 1937ம் ஆண்டு பயன்படுத்தப்பட்டது.



¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯

உலக இசை தினம் என்றவுடன் என் நினைவில் வருகின்ற விடயம் எங்கள் அன்பு மருமகள் ஜயபிரதா குட்டியின் பிறந்தநாள் நிகழ்வுதான்.


இன்றைய தினம் (21.06.2014) தனது 6வது பிறந்தநாளை கொண்டாடும் எங்கள் அன்பு மருமகள் ஜயபிரதா குட்டியின் பிறந்தநாள் வாழ்த்து 18.06.2014ம் திகதி வெளிவந்த விஜய் சஞ்சிகையில் பிரசுரமாகியுள்ளது.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜயபிரதா குட்டி


***

கிரிக்கெட் சாதனைகள் புதுப்பித்த இந்தியா, பங்களாதேஷ் அணிகள் ...!

சுற்றுலா இந்திய அணிக்கும், பங்களாதேஷ் அணிக்குமிடையே கடந்த 17ம் திகதி மிர்பூரில் நடைபெற்ற சாதனைகள் படைக்கப்பட்ட 2வது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 53 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 25.3 ஓவர்களில் சகல விக்கட்களையும் இழந்து 105 ஓட்டங்களை மாத்திரே பெற்றது. தனது அறிமுகப் போட்டியில் விளையாடிய பங்களாதேஷ் அணியின் தஸ்கின் அஹ்மெட் 28 ஓட்டங்களுக்கு 5 விக்கட்களை வீழ்த்தினார்.

206 என்கின்ற வெற்றி இலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 17.4 ஓவர்களில் சகல விக்கட்களையும் இழந்து 58 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 53 ஓட்டங்களால் படுதோல்வியினை தழுவிக்கொண்டது. பந்துவீச்சில் இந்திய அணியின் ஸ்டூவட் பின்னி 4.4 ஓவர்களை வீசி 2 ஓட்டமற்ற ஓவர்களுடன் 4 ஓட்டங்களுக்கு 6 விக்கட்களை வீழ்த்தினார்.

இந்தப் போட்டியில் நிகழ்த்தப்பட்ட சில சாதனைகள் வருமாறு;

Ø  ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியொன்றில், இந்திய அணியின் பந்துவீச்சாளர் ஒருவர் பெற்ற மிகச்சிறந்த பந்துவீச்சுப் பெறுதி (6/4)  சாதனையினை ஸ்டூவட் பின்னி தனதாக்கினார்.  இதற்குமுன்னர், 1993ம் ஆண்டு மே.தீவுகள் அணிக்கெதிராக கொல்கத்தாவில் அனில் கும்ப்ளே 12 ஓட்டங்களுக்கு 6 விக்கட்களை வீழ்த்தியதே மிகச்சிறந்த பந்துவீச்சுப் பெறுதியாக விளங்கியது.


Ø  இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் ஸ்டூவட் பின்னி (6-4) மற்றும்  மோஹிட் ஷர்மா (4-22) ஆகியோர் பங்களாதேஷ் அணியின் வீழ்த்தப்பட்ட 10 விக்கட்களை தமக்கிடையே பகிர்ந்துகொண்டனர். ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில், இரண்டு பந்துவீச்சாளர் தமக்கிடையே 10 விக்கட்களையும் பகிர்ந்துகொண்ட 4வது சந்தர்ப்பம் இதுவாகும்.

Ø  ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியொன்றில், பந்துவீச்சாளர் ஒருவர் 5 இற்கும் குறைந்த ஓட்டங்களினை வழங்கி 5 அல்லது 5 இற்கும் மேற்பட்ட விக்கட்களை வீழ்த்திய 2வது சந்தர்ப்பம் இதுவாகும்.


v 4.4-2-4-6, ஸ்டூவர்ட் பின்னி, இந்தியா எதிர் பங்களாதேஷ், மிர்பூர், 2014
v 4.3-3-1-5, கொட்னி வோல்ஷ், மே.தீவுகள் எதிர் இலங்கை, சார்ஜா, 1986

Ø  ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில், 20 விக்கட்களும் வீழ்த்தப்பட்ட போட்டியொன்றில் இரண்டு அணிகளும் மிகக்குறைந்த மொத்த ஓட்டங்களைப் (163) பெற்ற சந்தர்ப்பம் இதுவேயாகும். இதற்கு முன்னர், கென்யா (134) , சிம்பாப்வே (69) அணிகளுக்கிடையே 2006ம் ஆண்டு ஹராரேயில் நடைபெற்ற  ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பெறப்பட்ட 203 மொத்த ஓட்டங்களே பதிவாகியிருந்தது.

Ø  தனது அறிமுக சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 5 விக்கட்களை வீழ்த்திய 8வது பந்துவீச்சாளராகவும்,  பங்களாதேஷ் அணியின் முதல் வீரராகவும் தஸ்கின் அஹ்மெட் (5/28) சாதனை படைத்தார்.


Ø  தனது அறிமுக ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில், 19ஆண்டுகள் 75 நாட்கள் என்கின்ற மிக இளவயதில் 5 விக்கட்களை வீழ்த்திய பந்துவீச்சாளராக பங்களாதேஷ் அணியின் தஸ்கின் அஹ்மெட் (5/28) சாதனை படைத்தார். இதற்குமுன்னர், இலங்கை அணியின் சரித்த புத்திக 21ஆண்டுகள் 65 நாட்கள் என்கின்ற மிக இளவயதில் 2001ம் ஆண்டு சார்ஜாவில் சிம்பாப்வே அணிக்கெதிராக இந்த சாதனையினை நிகழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Ø  தனது அறிமுக ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில், இந்திய அணிக்கெதிராக 5 விக்கட்களை வீழ்த்திய 2வது பந்துவீச்சாளராக பங்களாதேஷ் அணியின் தஸ்கின் அஹ்மெட் (5/28) சாதனை படைத்தார். இதற்குமுன்னர், தென்னாபிரிக்கா அணியின் அலன் டொனால்ட் இந்த சாதனையினை நிகழ்த்தியிருந்தார்.

Ø  ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில், பங்களாதேஷ் அணிக்கெதிராக இந்திய அணி மிகக்குறைந்த ஓட்டங்களைப் பெற்ற சந்தர்ப்பம் இதுவேயாகும். இதற்குமுன்னர் 2007ம் ஆண்டு உலகக்கிண்ணப் போட்டியில் 191 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.

Ø  ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி வரலாற்றில், பங்களாதேஷ் அணிக்கெதிராக இந்திய அணி 10 விக்கட்களையும் இழந்த 4வது சந்தர்ப்பம் இதுவாகும்.

Ø  ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில், இந்திய அணியின் 5 துடுப்பாட்ட வீரர்கள் LBW முறையில் ஆட்டமிழந்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

Ø  ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில், பங்களாதேஷ் அணி மிகக்குறைந்த ஓட்டங்களுக்கு (58)ஆட்டமிழந்த சந்தர்ப்பம் இதுவாகும். இதற்குமுன்னர், 2011ம் ஆண்டு மே.தீவுகள் அணிகளுக்கெதிராக உலகக்கிண்ணப் போட்டியில் 58 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Ø  ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில், பங்களாதேஷ் அணி 100 இற்கும் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்த 14வது சந்தர்ப்பம் இதுவாகும்.

Ø  ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில், எதிரணியொன்று இந்திய அணிக்கெதிராக மிகக்குறைந்த ஓட்டங்களுக்கு (58) ஆட்டமிழந்த சந்தர்ப்பம் இதுவாகும். இதற்குமுன்னர், 2005ம் ஆண்டு ஹராரேயில் சிம்பாப்வே அணி 65 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தமை பதிவாகியிருந்தது.

Ø  ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில், மிகக்குறைந்த ஓட்டங்களைப் பெற்று எதிரணியை குறைந்த ஓட்டங்களுக்குள் ஆட்டமிழக்கச் செய்து வெற்றியினை தன்வசப்படுத்திய உலக சாதனையினை இந்திய அணி புதுப்பித்துக்கொண்டது. இதற்கு முன்னர், இந்திய அணி 1985ம் ஆண்டு பாகிஸ்தானுக்கெதிராக சார்ஜாவில் 125 ஓட்டங்களை பெற்று, பாகிஸ்தான் அணியினை 87 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்தி 38 ஓட்டங்களால் வெற்றிகொண்டதே சாதனையாக பதிவாகியிருந்தது.

     "லோகநாதனின் பகிர்வுகள்" பக்கத்தினை முகநூலில் தொடர…!
***

Blog Widget by LinkWithin