Sunday, February 23, 2014

உலகில் ஆட்சியிலிருக்கும் வயது கூடிய ஜனாதிபதிகள் …!


1980ம் ஆண்டு பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்றதிலிருந்து சிம்பாப்வே நாட்டினை ஆட்சி செய்துவருகின்ற  றொபட் முகாபே, கடந்த பெப்ரவரி 21ம் திகதி தனது 90வது பிறந்தநாளைக் கொண்டாடினார். ஆபிரிக்காவின் மிக வயதான ஆட்சியாளராக றொபட் முகாபே விளங்குகின்றார்.

அந்தவகையில், தற்சமயம் உலகில் ஆட்சியிலிருக்கும் வயது கூடிய ஜனாதிபதிகள் வருமாறு;

aஷிமோன் பெரஸ் _ 90 வயது 06 மாதங்கள் _ இஸ்ரேல் நாட்டின் ஜனாதிபதியாக 2007ம் ஆண்டிலிருந்து பதவி வகிக்கின்றார்.


aறொபட் முகாபே _ 90 வயது _ சிம்பாப்வே நாட்டின் ஜனாதிபதியாக 1980ம் ஆண்டிலிருந்து பதவி வகிக்கின்றார்.


aஜோர்ஜியோ நபோலிரனோ _ 88 வயது _ இத்தாலி நாட்டின் ஜனாதிபதியாக 2006ம் ஆண்டிலிருந்து பதவி வகிக்கின்றார்.



aராவுல் காஸ்ட்ரோ _ 82 வயது _ கியூபா நாட்டின் ஜனாதிபதியாக 2008ம் ஆண்டிலிருந்து பதவி வகிக்கின்றார்.


aபெளல் பியா _ 81 வயது _ கமரூன் நாட்டின் ஜனாதிபதியாக 1982ம் ஆண்டிலிருந்து பதவி வகிக்கின்றார்.


aமம்நூன் ஹூசைன் _ 73 வயது _ பாகிஸ்தான் நாட்டின் ஜனாதிபதியாக 2013ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்து பதவி வகிக்கின்றார்.


aரியோடோரோ  ஒபியங்கோ மொபாசோகோ _ 71 வயது ஈகுவாடோரியல் கினியா  நாட்டின் ஜனாதிபதியாக 1979ம் ஆண்டிலிருந்து பதவி வகிக்கின்றார்.

ஆபிரிக்கா கண்டத்தில் மிக அதிக ஆண்டுகளாக ஆட்சி புரிகின்ற ஜனாதிபதி இவரேயாவார்.


உங்களுக்குத் தெரியுமா?...

தனது தந்தையார் 6ம் ஜோர்ஜ் மன்னரின் மறைவுக்குப் பின்னர் 1953ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிரித்தானியா மகாராணி 2ம் எலிசபெத் அவர்களுக்கு தற்போது 87 வயதாகின்றது.


1,000 ஆண்டுகால பிரித்தானிய முடியாட்சி வரலாற்றில் விக்டோரியா மகாராணிக்கு அடுத்து அதிக ஆண்டுகள் ஆட்சி செய்தவர் என்கின்ற பெருமை இவரையே சாரும். விக்டோரியா மகாராணி 63 ஆண்டுகள் ஆட்சி செய்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

2012ம் ஆண்டு பிரித்தானியா மகாராணி 2ம் எலிசபெத், தனது ஆட்சியின்  வைரவிழாவினை கொண்டாடியமை குறிப்பிடத்தக்கதாகும்.

***
Blog Widget by LinkWithin