பந்துவீச்சில் திருப்பு முனையை ஏற்படுத்திய தென்னாபிரிக்க அணியின் வெர்னன் பிலண்டெர்(7-3-15-5)
அந்தவகையில் 2ம் நாளில் மொத்தமாக 294 ஓட்டங்களுக்கு 23 விக்கட்கள் வீழ்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே நாளில் அதிக விக்கட்கள் வீழ்த்தப்பட்ட 4வது சந்தர்ப்பமாக இது பதிவாகியுள்ளது.
என்னா ஒற்றுமை .....
11/11/11 ஆகிய இன்று 11மணி:11நிமிடம் தென்னாபிரிக்க அணி வெற்றி பெற தேவைப்படும் ஓட்டங்கள் 111
11/11/11 ஆகிய இன்று 11மணி:11நிமிடம் தென்னாபிரிக்க அணி வெற்றி பெற தேவைப்படும் ஓட்டங்கள் 111
3ம் நாளாகிய இன்று தென்னாபிரிக்க அணி 8 விக்கட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கின்றது.
குறிப்பு -
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், ஆஸி அணி 47 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்த சந்தர்ப்பமானது ஆஸி அணி இன்னிங்ஸ் ஒன்றில் பெற்ற 4வது மிகக்குறைந்த ஓட்டங்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே நாளில் அதிக விக்கட்கள் வீழ்த்தப்பட்ட சந்தர்ப்பங்கள்….
27 விக்கட்கள், 157 ஓட்டங்கள், நாள் 2 = இங்கிலாந்து v ஆஸி, லோர்ட்ஸ், யூலை1888.
25 விக்கட்கள், 221 ஓட்டங்கள், நாள் 1 = இங்கிலாந்து v ஆஸி, மெல்பேர்ன், ஜனவரி 1902.
24 விக்கட்கள், 255 ஓட்டங்கள், நாள் 2 = இங்கிலாந்து v ஆஸி, ஓவல், ஆகஸ்ட் 1896.
23 விக்கட்கள், 294 ஓட்டங்கள், நாள் 2 = ஆஸி v தென்னாபிரிக்கா, கேப் டவுன், நவம்பர் 10, 2011.
22 விக்கட்கள், 197 ஓட்டங்கள், நாள் 1 = இங்கிலாந்து v ஆஸி, ஓவல், ஆகஸ்ட் 1890.
22 விக்கட்கள், 207 ஓட்டங்கள், நாள் 1 = ஆஸி v மே.தீவுகள், அடிலெய்ட், டிசம்பர் 1951.
22 விக்கட்கள், 195 ஓட்டங்கள், நாள் 3 = இங்கிலாந்து v இந்தியா, மன்செஸ்டர், யூலை 1952.
22 விக்கட்கள், 229 ஓட்டங்கள், நாள் 3 = இங்கிலாந்து v இலங்கை, கொழும்பு, மார்ச் 2001.
22 விக்கட்கள், 279 ஓட்டங்கள், நாள் 3 = இந்தியா v நியூசிலாந்து, ஹமில்டன், டிசம்பர் 2002.
***