Sunday, January 6, 2013

உலகில் மிக உயரமான குதிரையேற்ற வீரன் சிற்பம்......!


உலகில் மிக உயரமான, மிகப்பெரிய குதிரையேற்ற வீரன் சிற்பமானது மொங்கோலிய நாட்டின் தலைநகர் உலான் பட்டோருக்கு அருகாமையில் அமைந்துள்ளது. 33 அடி உயரமுடைய அடித்தளத்தில், 131 அடி (40 மீற்றர்கள்) உயரமுடைய இந்தச் சிற்பமானது 250 தொன்கள் உருக்கினால் உருவாக்கப்பட்டதுடன், இதனை உருவாக்க ஏற்பட்ட மொத்தச் செலவு 4.1 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.



2009 ம் ஆண்டு இந்தச் சிற்பத்தின் கட்டுமாணப் பணிகள் நிறைவு பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

மொங்கோலிய பேரரசினை உருவாக்கி ஆட்சிசெய்து மொங்கோலிய பிராந்தியத்தினை ஒன்றிணைத்த பேரரசன் "கெங்கிஷ்கான்" அவர்களுக்கு கெளரவமளிக்க "The Genco Tour Bureau"  நிறுவனம் இந்தச் சிற்பத்தினை நிறுவியமை குறிப்பிடத்தக்கதாகும்.



சீனாவிலிருந்து, கிழக்கு ஐரோப்பாவரையும் தனது பேரரசினை விஸ்தரித்த பேரரசன் "கெங்கிஷ்கான்", மிகச்சிறந்த குதிரையேற்ற வீரராகவும் வரலாற்றில் மதிக்கப்படுகின்றார்.


--------------------------------------------------------------

ஜனவரி 6 யுத்தத்தினால் அனாதரவான குழந்தைகளுக்கான உலக தினம்




உலகளாவியரீதியில், 163 மில்லியன் அனாதரவுக் குழந்தைகள் உள்ளதாக அண்மைய ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் தமது தாயினை/தந்தையினை அல்லது இருவரினையும் இழந்தவர்களாவர்.

இந்தச் சிறார்கள், அடிப்படை வசதிகளின்றி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். வாழ்விட வசதிகள், உணவு வசதிகள், சுகாதார வசதிகள், கல்வி வசதிகள் மற்றும் ஏனைய அத்தியாவசிய சேவைகளின்றி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் என யுனிசெப் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெரும்பாலான சிறார்கள் எந்தவிதமான உதவியுமின்றி வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்றனர். இதன் காரணமாக இவர்கள் ஆட்கடத்தல்கள், பாலியல் துன்புறுத்தல்கள், அடிமைத்தனம் ஆகியவற்றின் அச்சுறுத்தல்களை எதிர்நோக்குகின்றனர். இது பெரும்பாலும் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளின் நிலைவரமாகும். மேலும் இந்தச் சிறார்களில் 40% இற்கும் அதிகமானோர் போசணைக் குறைபாட்டின் காரணமாகவும் பாதிக்கப்பட்டுள்ளனராம்.

அனாதரவுக் குழந்தைகளின் எண்ணிக்கை உலகில் அதிகரிப்பது, உள்நாட்டில் மனிதாபிமான மற்றும் சமூக பிரச்சினைகளை தோற்றுவிப்பதற்கு ஏதுவாக அமைகின்றது.

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் காரணமாக வடகிழக்கில் ஆயிரக்கணக்கான அனாதரவுக் குழந்தைகள் வாழ்வதும் நாமறிந்ததே. ஆதரவின்றி இருக்கும் குழந்தைகளின் சுபீட்சமான எதிர்காலத்திற்கு எம்மால் இயன்ற பங்களிப்பினை வழங்க நாம் அனைவரும் முன்வருவோமாக...!

***

2 comments:

இராஜராஜேஸ்வரி said...

ஆதரவின்றி இருக்கும் குழந்தைகளின் சுபீட்சமான எதிர்காலத்திற்கு எம்மால் இயன்ற பங்களிப்பினை வழங்க நாம் அனைவரும் முன்வருவோமாக...!


"உலகில் மிக உயரமான குதிரையேற்ற வீரன் சிற்பம்... வியக்கவைத்த பகிர்வு ..பாராட்டுக்கள்..

கே.கே.லோகநாதன் - KK Loganathan [B.Com] said...

நன்றிகள் அம்மா ....

Blog Widget by LinkWithin