Friday, February 20, 2015

இங்கிலாந்து அணியை பந்தாடிய நியூசிலாந்து அணி…!

11வது உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் குழுவிற்கான இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டி இன்றைய தினம் (பெப்.20) நடைபெற்றது.

இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 33.2 ஓவர்களில் சகல விக்கட்களையும் இழந்து 123 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது. பந்துவீச்சில் நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரிம் செளதி 33 ஓட்டங்களுக்கு 7 விக்கட்களை வீழ்த்தினார்.


பதிலுக்கு 124 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 12.2 ஓவர்களில் வெற்றி இலக்கினை அடைந்தது. துடுப்பாட்டத்தில் நியூசிலாந்து அணித்தலைவர் 25 பந்துகளில் 77 ஓட்டங்களைப் பெற்றார்.

பல்வேறு சாதனைகளைப் புதுப்பித்த இப்போட்டி தொடர்பான சில சுவாரஷ்சியமான தகவல்கள்:

***18 பந்துகளில் அரைச்சதத்தினை பூர்த்திசெய்த நியூசிலாந்து அணியின் பிரண்டன் மெக்கலம், உலகக்கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக அரைச்சதம் பெற்ற வீரர் என்ற தனது சாதனையினை புதுப்பித்துக் கொண்டார். 2007ம் ஆண்டு கனடா அணிக்கெதிராக 20 பந்துகளில் பிரண்டன் மெக்கலம் அதிவேக அரைச்சத சாதனையினை நிகழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
       

                                                             
***அத்துடன், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக அரைச்சதம் பெற்ற 3வது வீரர் என்ற சாதனையினையும் பிரண்டன் மெக்கலம் படைத்தார்.
*** ஏபி டி வில்லியர்ஸ் - 16 பந்துகள், தென்னாபிரிக்கா எதிர் மே.தீவுகள், 2015
*** சனத் ஜயசூரிய - 17 பந்துகள், இலங்கை எதிர் பாகிஸ்தான், 1996
*** பிரண்டன் மெக்கலம் - 18 பந்துகள், நியூசிலாந்து எதிர் இங்கிலாந்து, 2015

***33 ஓட்டங்களுக்கு 7 விக்கட்களை வீழ்த்திய நியூசிலாந்து அணியின் ரிம் செளதி, உலகக்கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த பந்துவீச்சுப் பெறுதியினைப் பெற்ற 3வது வீரர் என்ற சாதனையினை படைத்தார்.
*** கிளென் மெக்ராத் - 7/15 - ஆஸி எதிர் நமீபியா - 2003
*** அன்டி பிச்சல் - 7/20 - ஆஸி எதிர் இங்கிலாந்து - 2003
*** ரிம் செளதி - 7/33 - நியூசிலாந்து எதிர் இங்கிலாந்து - 2015
*** வின்ஸ்டன் டேவிஸ் - 7/51 - இங்கிலாந்து எதிர் ஆஸி - 1983

***சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த பந்துவீச்சுப் பெறுதியினைப் பெற்ற நியூசிலாந்து வீரர் என்ற சாதனையினையும் ரிம் செளதி இன்றைய போட்டியில் படைத்தார். இதற்கு முன்னர் இச்சாதனையினை ஷேன் பொண்ட் நிகழ்ந்தியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
*** 6/23 எதிர் அவுஸ்திரேலியா - 2003 
*** 6/19 எதிர் இந்தியா - 2005

***226 பந்துகள் மீதமிருக்க நியூசிலாந்து அணி தனது வெற்றி இலக்கினை    இங்கிலாந்து அணிக்கெதிராக எட்டியது. இதன்மூலம் இங்கிலாந்து அணி பந்துகள் எண்ணிக்கையிலான தனது மிகமோசமான தோல்வியினை சமப்படுத்திக் கொண்டது. இதற்கு முன்னர், 2003ம் ஆண்டு சிட்னியில் ஆஸி அணிக்கெதிராக இங்கிலாந்து அணி 226 பந்துகள் மீதமிருக்க தோல்வியினை தழுவியமை குறிப்பிடத்தக்கதாகும்.


No comments:

Blog Widget by LinkWithin