Tuesday, February 17, 2015

உலகக்கிண்ண கிரிக்கெட்டில் "அதிர்ச்சித் தோல்விகள்"


11வது உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் "B" குழுவிற்கான மே.தீவுகள் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது.


இந்தப் போட்டியில் அயர்லாந்து அணி அபாரமாக துடுப்பெடுத்தாடி 305 என்கின்ற ஓட்ட இலக்கினை 45.5 ஓவர்களில் அடைந்து சாதனை வெற்றியினை பதிவுசெய்து மே.தீவுகள் அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது.

அந்தவகையில், உலகக்கிண்ண கிரிக்கெட்  வரலாற்றில்  டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அணியினை, ஐசிசியின் அங்கத்துவ நாடொன்று வெற்றியீட்டி அதிர்ச்சி அளித்த போட்டி விபரங்கள் வருமாறு:

Yஇலங்கை 238/5 (60 ஓவர்கள்) எதிர் இந்தியா 191/10 (54.1 ஓவர்கள்) – 1979, இங்கிலாந்து
*** இலங்கை அணி 47 ஓட்டங்களால் வெற்றி

Yசிம்பாப்வே 239/6 (60 ஓவர்கள்) எதிர் அவுஸ்திரேலியா 226/7 (60 ஓவர்கள்) – 1983, இங்கிலாந்து
*** சிம்பாப்வே அணி 13 ஓட்டங்களால் வெற்றி

Yசிம்பாப்வே 134/10 (46.1 ஓவர்கள்) எதிர் இங்கிலாந்து 125/10 (49.1 ஓவர்கள்) – 1992, அவுஸ்திரேலியா
*** சிம்பாப்வே அணி 9 ஓட்டங்களால் வெற்றி

Yகென்யா 166/10 (49.3 ஓவர்கள்) எதிர் மே.தீவுகள் 93/10 (35.2 ஓவர்கள்) – 1996, இந்தியா
*** கென்ய அணி 73 ஓட்டங்களால் வெற்றி

Yபங்களாதேஷ் 223/9 (50 ஓவர்கள்) எதிர் பாகிஸ்தான் 161/10 (44.3 ஓவர்கள்) – 1999, இங்கிலாந்து
*** பங்களாதேஷ் அணி 62 ஓட்டங்களால் வெற்றி

Yகென்யா 210/9 (50 ஓவர்கள்) எதிர் இலங்கை 157/10 (45 ஓவர்கள்) – 2003, கென்யா
*** கென்ய அணி 53 ஓட்டங்களால் வெற்றி

Yகென்யா 217/7 (50 ஓவர்கள்) எதிர் பங்களாதேஷ் 185/10 (47.2 ஓவர்கள்) – 2003, தென்னாபிரிக்கா
*** கென்ய அணி 32 ஓட்டங்களால் வெற்றி

Yசிம்பாப்வே 133/10 (44.1 ஓவர்கள்) எதிர் கென்யா 135/3 (50 ஓவர்கள்) – 2003, தென்னாபிரிக்கா
*** கென்ய அணி 7 விக்கட்களால் வெற்றி

Yகனடா 180/10 (49.1 ஓவர்கள்) எதிர் பங்களாதேஷ் 120/10 (28 ஓவர்கள்) – 2003, தென்னாபிரிக்கா
*** கனடா அணி 60 ஓட்டங்களால் வெற்றி

Yபாகிஸ்தான் 132/10 (45.4 ஓவர்கள்) எதிர்  அயர்லாந்து 133/7 (41.4 ஓவர்கள்)– 2003, மே.தீவுகள்
*** அயர்லாந்து அணி 3 விக்கட்களால் வெற்றி

Yஅயர்லாந்து 243/7 (50 ஓவர்கள்) பங்களாதேஷ் எதிர் 169/10 (41.2 ஓவர்கள்) – 2003, மே.தீவுகள்
*** அயர்லாந்து அணி 74 ஓட்டங்களால் வெற்றி

Yஇங்கிலாந்து 327/8 (50 ஓவர்கள்) எதிர்  அயர்லாந்து 329/7 (49.1 ஓவர்கள்)– 2011,  இந்தியா
*** அயர்லாந்து அணி 3 விக்கட்களால் வெற்றி

Yமேதீவுகள் 304/7 (50 ஓவர்கள்) எதிர்  அயர்லாந்து 307/6 (45.5 ஓவர்கள்)– 2015,  நியூசிலாந்து
*** அயர்லாந்து அணி 4 விக்கட்களால் வெற்றி

(குறிப்பு இலங்கை அணி டெஸ்ட் அந்தஸ்து பெற்ற ஆண்டு 1982: சிம்பாப்வே அணி டெஸ்ட் அந்தஸ்து பெற்ற ஆண்டு 1992: பங்களாதேஷ் அணி டெஸ்ட் அந்தஸ்து பெற்ற ஆண்டு 2000)

***

1 comment:

Blog Widget by LinkWithin