Friday, June 13, 2014

20வது உலகக்கிண்ண கால்பந்தாட்ட திருவிழா…!


20வது உலகக்கிண்ண  கால்பந்தாட்ட திருவிழா பிரேசில் நாட்டில் கோலாகலமாக ஆரம்பித்துவிட்டது. அந்தவகையில், உலகக்கிண்ண கால்பந்தாட்டம் தொடர்பிலான சில சுவாரஷ்சியமான தகவல்கள் இதோ…!

§  ஸ்பெய்ன் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கிடையிலான 2010ம் ஆண்டு பீபா உலகக்கிண்ண கால்பந்தாட்ட இறுதியாட்டத்தினை உலகளாவியரீதியில் 1 பில்லியனுக்கும் அதிக இரசிகர்கள் கண்டுகளித்த அதேவேளை, இத்தாலி மற்றும் பிரான்ஸ் அணிகளுக்கிடையிலான 2006ம் ஆண்டு பீபா உலகக்கிண்ண கால்பந்தாட்ட இறுதியாட்டத்தினை உலகளாவியரீதியில் 741 மில்லியனுக்கும் அதிகமான இரசிகர்கள் கண்டுகளித்தனர்.


§  இதுவரை நடைபெற்ற 19 உலகக்கிண்ண கால்பந்தாட்ட அத்தியாயங்களிலும் பெறப்பட்ட மொத்த கோல்களின் எண்ணிக்கை 2,208. இதில் அதிக கோல்கள் (171) அடிக்கப்பட்ட கால்பந்தாட்ட உலகக்கிண்ணத் தொடர் 1998ம் ஆண்டு பீபா உலகக்கிண்ணமாகும். மேலும், குறைந்த எண்ணிக்கையான கோல்கள் (70) அடிக்கப்பட்ட கால்பந்தாட்ட உலகக்கிண்ணத் தொடர்களாக 1930 மற்றும் 1934ம் ஆண்டு பீபா உலகக்கிண்ணங்களாகும்.


§  2014ம் ஆண்டு உலகக்கிண்ண கால்பந்தாட்ட அத்தியாயத்தில், பொஸ்னியா - ஹெர்ஸ்கோவினா நாடு முதல் தடவையாக பங்குபற்றுகின்றது. 1992ம் ஆண்டுவரை பொஸ்னியா- ஹெர்ஸ்கோவினா வீரர்கள் யூகோஸ்லாவியா தேசிய அணியின் ஒரு அங்கமாகவே விளையாடி வந்தார்கள். யூகோஸ்லாவியா தேசத்திலிருந்து பொஸ்னியா- ஹெர்ஸ்கோவினா நாடு பிரிவடையும் முன்னர் யூகோஸ்லாவியா 1930 தொடக்கம் 1990ம் ஆண்டுவரை 8 தடவைகள் உலகக்கிண்ண கால்பந்தாட்ட ஆட்டங்களில் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

§  மெக்ஸிக்கோ, இத்தாலி, பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய நாடுகளையடுத்து  உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டிகளை இரண்டு தடவைகள் நடாத்திய 5வது நாடாக பிரேசில் நாடு இணைந்துகொள்கின்றது.


§  உலகக்கிண்ண கால்பந்தாட்ட அத்தியாயத்தில், இதுவரை அதிககோல்களை பெற்ற அணியாக 201 கோல்களுடன் பிரேசில் முன்னிலை வகிக்கின்றது. இந்தவரிசையில் ஜேர்மனி (190 கோல்கள்), இத்தாலி (122 கோல்கள்), ஆர்ஜென்ரீனா (113 கோல்கள்) ஆகிய நாடுகள் அடுத்தடுத்த ஸ்தானங்களை வகிக்கின்றன.

§  இதுவரை நடைபெற்ற அனைத்து உலகக்கிண்ண கால்பந்தாட்ட தொடர்களிலும் பங்குபற்றிய ஒரே அணி பிரேசில் ஆகும். இந்தவரிசையில் இத்தாலி மற்றும் ஜேர்மனிஅணிகள் 17 உலகக்கிண்ண கால்பந்தாட்ட தொடர்களிலும், ஆர்ஜென்ரீனா 15 உலகக்கிண்ண கால்பந்தாட்டதொடர்களிலும் பங்குபற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


உலக்கிண்ண கால்பந்தாட்டம் தொடர்பிலான மேலதிக தகவல்களை அறிந்து கொள்வதற்கு…!

***

No comments:

Blog Widget by LinkWithin