Tuesday, April 22, 2014

புவி நாள் - ஏப்ரல் 22

1969ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் யுனெஸ்கோ மாநாடு ஒன்று நிகழ்ந்தது. அக்கூட்டத்தில் கலந்துகொண்டவர்களுள் ஒருவர் உலக அமைதிக்காகக் குரல்கொடுத்த ஜோன் மெக்கானெல் (John McConnell).

மனிதரும் பிற உயிரினங்களும் வாழ்கின்ற பூமியின் அழகைச் சிறப்பிக்கவும், பூமியின் இயற்கைச் சூழலைக் குலைத்து மாசுபடுத்தாமல் காக்கவும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது தேவை என்று அவர் வலியுறுத்தினார். அத்தோடு, ஆண்டுதோறும் புவி நாள் என்றொரு நாளைக் கொண்டாடுவது பொருத்தம் என்றும் மெக்கானெல் கருத்துத் தெரிவித்தார். இவ்வாறு புவி நாள் என்னும் பெயரும் கருத்தும் எழுந்ததாகக் கருதப்படுகிறது.அதே சமயத்தில், ஐக்கிய அமெரிக்காவில் சுற்றுச்சூழலியல் நிபுணரும் செனட் உறுப்பினருமான கேலார்ட் நெல்சன் என்பவர் சுற்றுச்சூழல் பற்றிய அறிவைப் பரப்பத் தகுந்த நாளாக 1970 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 நடத்த அழைப்பு விடுத்தார். இந்த நாளின்போது புவியின் வடகோளப் பகுதி வசந்த காலமாகவும், தென்கோளப் பகுதி இலையுதிர் காலமாகவும் காணப்படுகிறது.

அவரது அழைப்பை ஏற்று 20 மில்லியன் மக்கள் இந்நிகழ்வில் பங்கெடுத்தார்கள். அன்றிலிருந்து ஆண்டு தோறும் இந்நாள் 175 நாடுகளில் புவி நாளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.அந்தவகையில், புவிக் கோள் தொடர்பிலான சில சுவையான தகவல்கள்…!

aஞாயிற்றுத் தொகுதியில் சூரியனிலிருந்து மூன்றாவது கோளாக 92,897,000 மைல்கள் தொலைவில் புவிக் கிரகமானது அமைந்துள்ளது.aஞாயிற்றுத் தொகுதியில் புவிக் கோளானது 5வது மிகப் பெரிய கோளாகும். அண்ணளவாக இதன் பரப்பளவு 197 மில்லியன் சதுர மைல்களாகும்.

aபுவியின் மேற்பரப்பில் 70.8% வகிபாகத்தினை நீர்வளங்கள் (139,668,500 மில்லியன் சதுர மைல்கள்) வகிக்கின்றன.  நீர்வளத்தில் 97.2% உவர் நீராகவும், 2.8% தூய நீராகவும் காணப்படுகின்றது.

aபுவியின் திணிவு : 5.9736×1024 or 5,973,700,000,000,000,000,000,000 kg

aபுவியின் வயது : அண்ணளவாக 4.5 பில்லியன் ஆண்டுகள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

aபுவியின் விட்டம் : அண்ணளவாக 8000 மைல்களாகும்.

aபுவியில் 10 மில்லியனுக்கும் மேற்பட்ட உயிரினங்கள் உயிர்வாழ்கின்றன.

aபுவியில் மிகக் குளிரான பிரதேசமாக அந்தாட்டிக்கா பதிவு செய்யப்பட்டுள்ளது. புவியில் எந்தவொரு நாட்டிற்கும் உரிமையில்லாத பிரதேசமும் இதுவேயாகும்.

aபுவியின் சுழற்சி வேகம் மணித்தியாலத்திற்கு 66,700 மைல்கள் ஆகும்.

aபுவி 24 நேர வலயங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

aபுவிக்கோளின் துணைக்கிரகம் சந்திரன் ஆகும். புவிக் கோளுக்கும் சந்திரனுக்கும் இடையிலான தூரம் சராசரியாக 238,857 மைல்களாகும்.

aபுவியின் சுழற்சி வேகம் 23 மணித்தியாலங்கள், 56  நிமிடங்கள், 4 செக்கன்கள். இதுவே புவியின் ஒரு நாளாக கணிக்கப்படுகின்றது.

aபுவியில் நாளாந்தம் 8.6 மில்லியன் மின்னல் தாக்கங்கள் ஏற்படுகின்றன.

aபுவியில் 90% ஆன எரிமலை வெடிப்புக்கள் சமுத்திரங்களிலேயே நிகழ்கின்றன.

aசூரியக்கதிர்கள் அண்டவெளியிலிருந்து புவியை வந்தடைய எடுக்கும் நேரம் 8 நிமிடங்கள், 3 செக்கன்கள் ஆகும்.

aபுவி மேற்பரப்பில் 11% நிலப்பரப்பு மாத்திரமே உணவுச் செய்கைக்காக பயன்படுத்தப்படுகின்றது.


***

3 comments:

நிகண்டு தமிழ் பதிவர் சமுக வலைத்தளம் said...

வணக்கம்,

நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

www.Nikandu.com
நிகண்டு.காம்

திண்டுக்கல் தனபாலன் said...

விளக்கமான தகவல்களுக்கு நன்றி தோழர்...

கே.கே.லோகநாதன் - KK Loganathan [B.Com] said...

நன்றிகள் சகோ…!

Blog Widget by LinkWithin