Friday, March 21, 2014

மார்ச் மாதம் 21ம் திகதி -> உலக வன நாள்


புவியின் "நுரையீரல்கள்" என அழைக்கப்படும் காடுகள், இன்று மனித செயற்பாட்டின் காரணமாக அழிவடைந்துவருகின்றன. இதன் காரணமாக புவியின் வெப்பநிலை அதிகரித்து பல்வேறு பாதிப்புக்களை எதிர்நோக்குகின்றோம்.


வனங்களை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தவும் மக்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்தவும் மார்ச் மாதம் 21ம் திகதி உலக வன நாளாக கொண்டாடப்படுகின்றது.

அந்தவகையில், உலக வன வளங்கள் தொடர்பிலான சுவையான தகவல்கள்…!

a உலகில் 4 பில்லியன் ஹெக்டேயர்கள் நிலப்பரப்பிற்கு காடுகள் காணப்படுகின்றன. அதாவது, புவி மேற்பரப்பில்  31% வகிபாகத்திற்கு காடுகள் சூழ்ந்துள்ளன.

a உலகில் அதிக பரப்பளவில் வன வளத்தைக் கொண்ட கண்டம் தென் அமெரிக்க கண்டம் ஆகும். தனது நிலப் பரப்பில் அரைவாசிக்கும் அதிகமான பங்கிற்கு இங்கே காடுகள் காணப்படுகின்றன.


a உலகில் குறைந்த பரப்பளவில் வன வளத்தைக் கொண்ட கண்டம் ஆசியாக் கண்டம் ஆகும். தனது நிலப் பரப்பில் 20% பங்கிற்கு இங்கே காடுகள் காணப்படுகின்றன.

a உலகில் அதிகளவில் வன வளங்களைக் கொண்ட நாடுகளாவன; ரஷ்யா, பிரேசில், கனடா, ஐக்கிய அமெரிக்கா, சீனா ஆகியனவாகும். உலகில் அரைவாசிக்கும் அதிகமான காடுகள் இந்த நாடுகளிலேயே காணப்படுகின்றன.

a உலக வனங்களில் 20% ஆனவை ரஷ்யாவிலேயே காணப்படுகின்றன.

a புவி மேற்பரப்பில்  6% ஆன வகிபாகத்திற்கே ஈரவலயக் காடுகள் சூழ்ந்துள்ளன. ஆனால், உலகிலுள்ள தாவர மற்றும் விலங்கினங்களில் அரைவாசிக்கும் அதிகமானவை  ஈரவலயக் காடுகளிலேயே காணப்படுகின்றன.


a அந்தாட்டிக்கா கண்டம் தவிர்ந்த ஏனைய அனைத்து கண்டங்களிலும்  ஈரவலயக் காடுகள் காணப்படுகின்றன.

a தென் அமெரிக்க ஈரவலயக் காடுகளில் 2,000 இற்கும் அதிகமான வண்ணத்துப்பூச்சி இனங்கள் காணப்படுகின்றனவாம்.

a மத்திய ஆபிரிக்க ஈரவலயக் காடுகளில் 8,000 இற்கும் அதிகமான தாவர இனங்கள் காணப்படுகின்றனவாம்.


a உலகில் ஒவ்வொரு செக்கனுக்கும், கால்பந்தாட்ட மைதானத்தின் அளவான ஈரவலயக் காடுகள் அழிக்கப்படுகின்றன.

a உலகில் வருடாந்தம் 36 மில்லியன் ஏக்கர் நிலப்பரப்பிலான இயற்கை காடுகள் அழிக்கப்படுகின்றன. இது இங்கிலாந்து நாட்டின் பரப்பளவினை விடவும் பெரிதாகும்.

a காகிதாதி உற்பத்திற்காக உலகில் 50% ஆன மரங்கள் அழிக்கப்படுகின்றன. (World Resource Institute)

a உலகில் 80% இற்கும் அதிகமான காட்டுத் தீ மனிதனாலேயே உருவாக்கப்படுகின்றன.


a உலகத்திற்கு தேவையான 20% ஆன ஒட்சிசன் அமேசன் ஈரவலயக் காடுகளிலேயே உற்பத்தி செய்யப்படுகின்றது.

a உலகில் 1.5 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் தமது வாழ்வாரத்திற்கு காடுகளிலேயே தங்கியுள்ளனர்.

a உலகில் 300 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் காடுகளிலே வாழ்கின்றனர்.

a உலக சனத்தொகையில் மூன்றிலொரு பங்கினர் தமது எரிபொருள் தேவையினை விறகுகள் மூலமே பூர்த்தி செய்துகொள்கின்றனர்.

***

Blog Widget by LinkWithin