Monday, August 26, 2013

ஆகஸ்ட் 26 ⇨ உலக நாய் தினம்


உலகில் மனிதர்களால் அதிகளவில் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படுகின்ற விலங்கினங்களில் பூனையினை அடுத்து நாய்களே இடம்பெறுகின்றன.  அந்தவகையில் நாய்கள் தொடர்பிலான சில சுவையான தகவல்கள் உங்களுக்காக…!

Yமனிதனுடன் பன்னெடுங்காலம் காலம் முதல் பல்வேறு யுகங்களைக் கடந்து வாழ்கின்ற ஒரே உயிரினம் நாய் ஆகும். இவை மனிதர்களுடன் 14,000  ஆண்டுகளாக வசித்துவருகின்றனவாம்.


Yஉலகில் எல்லா வகையான சீதோஷ்ண நிலைகளிலும் வசிக்ககூடிய ஒரே உயிரினம் நாய் மட்டுமேயாகும்.

Yஉலகம்முழுவதும் 700 இற்கும் மேற்பட்ட தூய நாய் இனங்கள் காணப்படுகின்றன.

Yநாய்க்குட்டிகள் பிறக்கின்றபோது கண்பார்வையற்றவையாகவும், காது 
கேளாதவையாகவும், பற்களற்றவையாகவும் இருக்கின்றன.


Yநாய்களின் இதயத்துடிப்பு நிமிடத்திற்கு அண்ணளவாக 70 – 120 தடவைகளாகும்.

Yநாய்களின் சாதாரண உடல் வெப்பநிலை 100.5 ºF – 102.5 ºF (38.06ºC – 39.17ºC)

Yவளர்ந்த நாய்கள் பொதுவாக 42 பற்களைக் கொண்டுள்ளன,  அத்துடன் குட்டிகளுக்கு 28 பற்கள் மட்டுமே உண்டு.

 Yநாய்கள் அண்ணளவாக 1700 சுவை அரும்புகளை மட்டுமே கொண்டுள்ளன, ஆனால் மனிதன் 9000 இற்கும் மேற்பட்ட சுவை அரும்புகளைக் கொண்டுள்ளான்.


Yமனிதனை விடவும் நாய்களின் கேட்கும் சக்தி 10 மடங்கு அதிகமாகும்.

Y மனிதனை விடவும் நாய்களின் வாசனை உணர்வு 1000 மடங்கு சிறப்பானதாகும். மனிதர்கள்  5 மில்லியன் வாசனையை உணர்கின்ற கலங்களைக் கொண்டுள்ள, அதேவேளை நாய்கள் 220 மில்லியன் வாசனையை உணர்கின்ற கலங்களைக் கொண்டுள்ளான். அதேபோல் வாசனை உணர்கின்ற மனித மூளையின் பாகத்தினை விடவும் நாயின் மூளையின் பங்கு 4 மடங்கு பெரியதாகும்.


Y உலகில் அதிக எண்ணிக்கையான நாய்கள் அமெரிக்காவிலேயே வாழ்கின்றனவாம்.

Y விண்வெளிக்கு முதல்முதலில் சென்ற உயிரினம் "லைக்கா" என்கின்ற பெண் நாய் ஆகும். 1957ம் ஆண்டு நவம்பர் 2ம் நாள் ஸ்புட்னிக் II விண்கலத்தில் ரஷ்யாவினால் விண்ணுக்கு அனுப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.


Y மனிதர்களைப் போலவே நாய்களும் கனவு காண்கின்றன என்கின்றனர் ஆய்வாளர்கள்.



நண்பர்களே, உங்களில் யார்யாரெல்லாம் நாயினை செல்லப்பிராணியாக வீட்டில் வளர்க்கின்றீர்கள்?...

 ***

No comments:

Blog Widget by LinkWithin