Sunday, July 28, 2013

கிரிக்கெட் சாதனைகளைப் புதுப்பித்த விராட் கோஹ்லி…!

சுற்றுலா இந்திய அணிக்கும், சிம்பாப்வே அணிக்குமிடையிலான 1வது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் (24 ஜூலை) இந்திய அணியின் விராட் கோஹ்லியின் அதிரடிச் சதத்தின் உதவியுடன் இந்திய அணி 239 ஓட்ட இலக்கினை 6 விக்கட் வித்தியாசத்தில் வெற்றிகொண்டது.


தனது 109வது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் களமிறங்கிய விராட் கோஹ்லி பல்வேறு சாதனைகளினை படைத்தமை குறிப்பிடத்தக்கதாகும். அவையாவன;

QY சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த இன்னிங்ஸ்களில் வேகமாக 15 சதங்களைக் கடந்த சாதனை; இந்த வரிசையில் முன்னிலை வகிப்போர்…!
> விராட் கோஹ்லி ⊶ இந்தியா 106 இன்னிங்ஸ்
> சயீட் அன்வர் ⊶ பாகிஸ்தான் 143 இன்னிங்ஸ்
> சவ்ரவ் கங்குலி ⊶ இந்தியா 144 இன்னிங்ஸ்
> கிறிஸ் கெய்ல் ⊶ மே.தீவுகள் 147 இன்னிங்ஸ்
> ஹெர்சல் கிப்ஸ் ⊶ தென்னாபிரிக்கா 161 இன்னிங்ஸ்
> டெஸ்மன் கெய்ன்ஸ் ⊶ மே.தீவுகள் ⇨ 166 இன்னிங்ஸ்
> ரிக்கி பொண்டிங் ⊶ ஆஸி 180 இன்னிங்ஸ்

> சச்சின் டெண்டுல்கர் ⊶ இந்தியா ⇨ 182 இன்னிங்ஸ்

குறிப்பு தற்சமயம் இந்த சாதனையினை முறியடிக்ககூடிய வாய்ப்பு உள்ள வீரர் தென்னாபிரிக்காவின் ஹாசிம் அம்லா, இதுவரையும் 74 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 11 சதங்களை பூர்த்தி செய்துள்ளார்.


QY சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த வயதில் வேகமாக 15 சதங்களைக் கடந்த சாதனை; இந்த வரிசையில் முன்னிலை வகிப்போர்…!
° விராட் கோஹ்லி ⊶ இந்தியா 24 ஆண்டுகள் 261 நாட்கள்
° சச்சின் டெண்டுல்கர் ⊶ இந்தியா ⇨ 25 ஆண்டுகள்
° கிறிஸ் கெய்ல் ⊶ மே.தீவுகள் 27 ஆண்டுகள் 42 நாட்கள்
° சவ்ரவ் கங்குலி ⊶ இந்தியா 28 ஆண்டுகள் 99 நாட்கள்
° ரிக்கி பொண்டிங் ⊶ ஆஸி 28 ஆண்டுகள் 329 நாட்கள்
° சயீட் அன்வர் ⊶  பாகிஸ்தான் 29 ஆண்டுகள் 134 நாட்கள்

° ஹெர்சல் கிப்ஸ் ⊶ தென்னாபிரிக்கா 30 ஆண்டுகள் 354 நாட்கள்


QY சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் வேகமாக 15 சதங்களைக் கடக்க குறைந்த ஆண்டுகளை எடுத்துக்கொண்ட சாதனை; இந்த வரிசையில் முன்னிலை வகிப்போர்…!
è விராட் கோஹ்லி ⊶ இந்தியா 4 ஆண்டுகள் 340 நாட்கள்
è கிறிஸ் கெய்ல் ⊶ மே.தீவுகள் 7 ஆண்டுகள் 52 நாட்கள்
è சச்சின் டெண்டுல்கர் ⊶ இந்தியா ⇨ 8 ஆண்டுகள்127 நாட்கள்
è ஹெர்சல் கிப்ஸ் ⊶ தென்னாபிரிக்கா 8 ஆண்டுகள் 131 நாட்கள்
è ரிக்கி பொண்டிங் ⊶ ஆஸி ⇨ 8 ஆண்டுகள் 270 நாட்கள்
è சவ்ரவ் கங்குலி ⊶ இந்தியா 8 ஆண்டுகள் 278 நாட்கள்

è சயீட் அன்வர் ⊶ பாகிஸ்தான் 9 ஆண்டுகள் 17 நாட்கள்

***
Blog Widget by LinkWithin