Wednesday, July 3, 2013

ஜூலை 3 – உலக இரட்டையர்கள் தினம்

ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதம் 3ம் திகதி உலக இரட்டையர் தினம் கொண்டாடப்படுகின்றது. 2007ம் ஆண்டிலிருந்து  உலக இரட்டையர் தினம் கொண்டாடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.



இரட்டையர்கள் தொடர்பிலான சுவாரஷ்சியமான தகவல்கள் சில…!

C250 குழந்தைப் பிறப்புகளில் ஒரு தடவையே இரட்டை குழந்தை பிறப்பு நிகழ வாய்ப்புண்டு.

Cஇரட்டையர்களில் 07 வகைகள் உண்டு.

Cஇரட்டையர்கள் என்பது ஒரே பிரசவத்தில் குழந்தை பிறப்பது மட்டுமன்று. ஏனெனில் முதல் குழந்தை பிரசவித்து 85 நாட்கள் இடைவேளையின் பின்னரும் குழந்தை பிறந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Cஉட்ரா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் 1800 – 1970 ஆம் ஆண்டுகளிடையே குழந்தை பிரசவித்த 59,000 இற்கும் மேற்பட்ட பெண்களிடையே மேற்கொண்ட ஆய்வின் பிரகாரம், இரட்டைக் குழந்தைகளை பிரசவித்த தாய்மார் ஏனைய தாய்மாரினை விடவும் நீண்ட ஆயுளைக் கொண்டவர்கள் என கண்டறிந்துள்ளனர்.

Cஇரட்டையர்கள் ஒத்த நிறமூர்த்த மாதிரியினைக் கொண்டவர்களாயினும் அவர்களின் கைரேகைகள் ஒத்தவையன்று.


Cஒரே பிரசவத்தில் இரட்டைக் குழந்தைகளினை அதிகமாக நைஜீரியா நாட்டுப் பெண்களே பிரசவிக்கின்றனராம்.

Cபிரசவத்தின் போது இரட்டைக் குழந்தை பிறப்பு குறைந்த நாடு சீனா ஆகும்.

C50% இற்கு மேற்பட்ட இரட்டைக் குழந்தைகள் 37 வாரங்களுக்கு முன்னரே பிறக்கின்றனர்.

Cஇரட்டையர்களில் 22% ஆனோர் இடது கை பழக்கம் கொண்டவர்களாவர். இரட்டையவர்கள் அல்லாத சனத்தொகையில் 10% இற்கும் கீழ்பட்டவர்களே இடது கை பழக்கம் கொண்டவர்களாவர்.

C200,000 குழந்தைப் பிறப்புகளில் ஒரு தடவையே இரட்டையர் ஒட்டிப் பிறப்பு நிகழ வாய்ப்புண்டு.

Cஇரட்டையர்கள் தொடர்பிலான விஞ்ஞானக் கற்கை Gemellology என்றழைக்கப்படுகின்றது.

Cஉலகில் தற்சமயம் உயிர்வாழ்கின்ற வயது கூடிய இரட்டையர்கள் ஐக்கிய இராச்சியத்தினைச் சேர்ந்த எனா புஹ் மற்றும் லிலி மில்வார்ட். இந்தப் பெண்மணிகள் கடந்த ஜனவரி 4ம் திகதி தமது 102வது பிறந்தநாளைக் கொண்டாடினர்.



# இந்தப் பதிவினை படிக்கின்ற வாய்ப்புக் கிடைக்கின்ற இரட்டை  சகோதர, சகோதரிகளுக்கு என் வாழ்த்துக்கள்…! 

***

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

வியக்க வைக்கும் தகவலுக்கு நன்றி... உங்களின் தேடலுக்கு (ஒவ்வொரு பகிர்வும்) வாழ்த்துக்கள் நண்பரே...

கே.கே.லோகநாதன் - KK Loganathan [B.Com] said...

நன்றிகள் சகோ….

Blog Widget by LinkWithin