Saturday, June 15, 2013

வானளாவிய கட்டிடங்களின் மையமாக மாறிவரும் டுபாய் நகரம்…!


உலகில் மிக உயரமான முறுக்கு கோபுரமானது(Twisted Tower) டுபாய் நகரத்தில் கடந்த ஜூன் மாதம் 13ம் திகதி திறந்துவைக்கப்பட்டது. 310 மீற்றர் (1017 அடி) உயரமானதும் 75 மாடிகளைக் கொண்டதுமான "கயன்" கோபுரமானது 272 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் நிர்மாணிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.


2006ம் ஆண்டு ஆரம்பித்த இந்த கோபுரத்தின் நிர்மாணப்பணிகள் பாரிய தொழில் நுட்ப பிரச்சினைகள் மற்றும் 2009ம் ஆண்டு கால உலக நிதி நெருக்கடி நிலைமைகள் காரணமாக சிறிது காலம் தாமதமானது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த கோபுரத்தின் பிரதான வடிவமைப்பாளர்கள் சிக்காக்கோவினை மையமாகக் கொண்ட  ஸ்கிட்மோ ஒவிங்ஸ் மற்றும் மெர்ரில் ஆகியோராவர். இவர்களே உலகின் மிக உயரமான கட்டிடமாகிய டுபாய் புர்ஜ் கலிபாவினையும் வடிவமைத்தவர்களாவர்.

டுபாய் நகரில் அமைந்துள்ள 828 மீற்றர் (2717அடி) உயரம், மற்றும் 163 மாடிகளைக் கொண்ட புர்ஜ் கலிபா 2010ம் ஆண்டு ஜனவரி மாதம் திறந்துவைக்கப்பட்டது.


2012ம் ஆண்டு மே மாதம் திறந்துவைக்கப்பட்ட, 413.4 மீற்றர் (1356அடி) உயரம் கொண்ட உலகில் மிக உயரமான வதிவாளர் குடியிருப்பு கட்டிடமாகிய பிரின்ஸ் கோபுரமானது டுபாய் நகரத்திலேயே அமைந்துள்ளது.


2012ம் ஆண்டு பிற்பகுதியில் திறந்துவைக்கப்பட்ட, 355 மீற்றர் (1165அடி) உயரம் கொண்ட உலகில் மிக உயரமான ஹோட்டலாகிய JW மர்ரொய்ட் மர்கிவ்ஸ் இரட்டைக் கோபுரமும் டுபாய் நகரத்திலேயே அமைந்துள்ளது.



 உங்களுக்குத் தெரியுமா?...
° நிர்மாணப்பணிகள் முடிவடைந்த மற்றும் முடிவடையும் தறுவாயில் உள்ள உலகில் மிக உயரமான முதல் 200 வானளாவிய கட்டிடங்களில் 33 கட்டிடங்கள் டுபாய் நகரத்திலே அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். குறிப்பாக முதல் 100 உயரமான கட்டிடங்களில்  22 கட்டிடங்கள் டுபாய் நகரத்திலே அமைந்துள்ளது.

உலகில் மிக உயரமான கட்டிடங்கள் (Top 10)…!

1) புர்ஜ் கலிபா டுபாய் 163 மாடிகள்  2717 அடி உயரம் 2010 ஆண்டு

2) மக்கா மணிக்கூட்டு ரோயல் கோபுரம் மக்கா 120 மாடிகள் 1972 அடி 2012

3) * புதிய உலக வர்த்தக மையம் நியூ யோர்க் 104 மாடிகள் 1776 அடி 2013

4) தைய்பெய் 101 தைய்பெய் 101 மாடிகள் 1671 அடி 2004

5) ஷங்காய் உலக நிதி மையம் ஷங்காய் 101 மாடிகள் 1614 அடி 2008

6) சர்வதேச வர்த்தக மையம் கொங்கொங் 118 மாடிகள் 1588 அடி 2010

7) பெட்ரோனஸ் கோபுரம் 1, 2  கோலாலம்பூர் 88 மாடிகள் 1483 அடி 1998

8) ஸிஃபெங் கோபுரம் நன்ஜிங் 66 மாடிகள் 1476 அடி 2010

9) வில்லிஸ் கோபுரம் சிக்காக்கோ 108 மாடிகள் 1451 அடி 1974

10) KK 100   ஷென்சென்  100 மாடிகள் 1451 அடி 2011

( Source - Emporis Standards committee (ESC) )


குறிப்பு :  * புதிய உலக வர்த்தக மையம் – நிர்மாணப்பணிகள் இன்னும்   நிறைவுறவில்லை.

***

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

உயர்ந்த தொகுப்பிற்கு நன்றி...

தொடர வாழ்த்துக்கள்...

கே.கே.லோகநாதன் - KK Loganathan [B.Com] said...

நன்றிகள் சகோ....

Blog Widget by LinkWithin