Tuesday, January 22, 2013

சுவாரஸ்சியமான அறிவியல் தகவல்கள்...!

►◄ 2ம் உலகப்போரில் ஐக்கிய அமெரிக்கா வெற்றி பெற்ற பின்னர் அதனை அமெரிக்கர்கள் ஐஸ்கிறீம் உடனே கொண்டாடினராம். 1946ம் ஆண்டு அமெரிக்கப் பிரஜை ஒருவரின் ஐஸ்கிறீம் கொள்வனவு 5 கலன்களாம்.



►◄ 1771ம் ஆண்டில் போலாந்து இராச்சியமானது, ஐரோப்பாவிலே ரஷ்சியாவினை அடுத்து மிகப் பெரிய நாடாக விளங்கியதுடன், சனத்தொகையில் பிரான்ஸ் நாட்டிற்கு அடுத்த ஸ்தானத்திலிருந்தது. ஆனால் 25 ஆண்டுகளில் போலாந்து இராச்சியமானது பல்வேறு பாகங்களாக பிரிவடைந்துவிட்டதாம்.

►◄ உலகில் சமாதான தருணங்களிலும், யுத்த தருணங்களிலும் வெவ்வேறு விதத்தில் தேசியக்கொடியினை பறக்கவிடும் ஒரே நாடு பிலிப்பைன்ஸ் ஆகும்.  பிலிப்பைன்ஸ்  நாட்டின் தேசியக்கொடியானது நீலம் மற்றும் சிவப்பு நிறங்களைக் கொண்டிருக்கின்றன.
சமாதான தருணங்களில் நீல நிறப்பாகமானது மேற்பாகத்திலிருக்குமாறு தேசியக்கொடி பறக்கவிடப்படும் அதேவேளை யுத்த தருணங்களில் சிவப்பு நிறப்பாகமானது மேற்பாகத்திலிருக்குமாறும் பிலிப்பைன்ஸ் நாட்டில் தேசியக்கொடி பறக்கவிடப்படும். 



►◄ ஒரு நாளில், பெண்ணொருவர் சராசரியாக 7000 சொற்களை பேசுகின்றாராம், ஆனால் ஆணொருவர் சராசரியாக 2000+ சொற்களையே பேசுகின்றாராம்.

►◄ உலகில் ஒரேயொரு புகையிரத நிலையத்தினைக் கொண்ட ஒரே நாடு சிங்கப்பூர் ஆகும்.

►◄ உலக நீர்ப்பரம்பலில் 46% வகிபாகத்தினை பசுபிக் சமுத்திரம் வகிக்கின்றது. மேலும், அத்திலாண்டிக் சமுத்திரம் 23.9%, இந்து சமுத்திரம் 20.3%, ஆர்ட்டிக் சமுத்திரம் 3.7% வகிபாகத்தினை வகிக்கின்றது.

►◄ பூமியின் மேற்பரப்பு 196,950,711 சதுர மைல்கள் (510,100,000 சதுர கிலோமீற்றர்கள்) ஆகும்.

►◄ சீனா நாட்டில் அண்ணளவாக 200 குடும்பப் பெயர்களே பயன்படுத்தப்படுகின்றதாம்.

►◄ கத்தரிக்கோலினைக் கண்டுபிடித்தவர் உலகப் புகழ்பெற்ற ஓவியர் லியனாடோ டாவின்சி ஆவார்.





==============================



முதல் 100 பணக்காரர்களின் ஆண்டு வருமானம் உலக வறுமையை ஒழிக்கப் போதுமானதாகும்.!


உலகின் முதல் 100 பணக்காரர்களின் கடந்த வருட வருமானம், உலகில் கடுமையான வறுமையில் இருக்கும் ஏழை மக்களின் மோசமான வறுமையை ஒழிக்கத் தேவையான பணத்தை விட நான்கு மடங்கு அதிகமாகும் என சர்வதேச தொண்டு நிறுவனமான ஒக்ஸ்பாம் கூறியுள்ளது.


கடந்த 2012ம் வருடத்தில், உலகின் முதல் 100  பணக்காரர்களின் மொத்த வருமானம் 240 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். அதற்கு மாறாக உலகில் மிகவும் மோசமான வறுமையில் இருக்கும் மக்கள் ஒரு நாளைக்கு ஒன்றேகால் டொலருக்கும் குறைவான பணத்திலேயே வாழ்கின்றனர்.

 ***
 


No comments:

Blog Widget by LinkWithin