Wednesday, December 5, 2012

டிசம்பர் 5 ↔ உலக மண் தினம்


உலகின் இயற்கைச் சூழலில் மண்வளமானது மிக முக்கியமான கூறாக இருக்கின்றது.  சுற்றுச்சூழல் நிலைத்திருக்கவேண்டுமாயின் மண் வளம் பாதுகாக்கப்பட வேண்டும். இதனை மையமாகக் கொண்டு உலகளாவியரீதியில் மக்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்காக உலக மண் தினமானது கொண்டாடப்படுகின்றது.

"உலகில் உணவு பாதுகாப்பினை பேணுவதற்காக மண்ணின் ஆரோக்கியத்தினை பாதுகாப்போம்" என்ற தொனிப்பொருளில் 2002ம் ஆண்டு உலக மண் தினமானது கொண்டாடப்படுகின்றது. 




  • புவியின் மேற்பரப்பில் 29% ஆன வகிபாகத்திற்கு நிலப்பரப்பு சூழ்ந்துள்ளது.  உலகில் வாழ்கின்ற 7 பில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கும், மேலும் பிற உயிரினங்களுக்கும் தேவையான வாழ்வாதார வசதிகளினை நிலங்களே வழங்குகின்றன.   
·   மண், சூழலின் உயிரற்ற கூறாகக் கருதப்படுகின்ற போதிலும் அதிற் பல முக்கிய பகுதிகளான நுண்ணங்கிகளும் வேறு பல இன அங்கிகளும் உள்ளன. பாறைகள் அழிவடைந்தே மண் உண்டாகின்றது. எனவே குறிப்பிட்ட பகுதியிலுள்ள மண்ணின் இயல்பு அதன் தாய்ப்பாறையின் இயல்பிலும் அப்பாறை அழிவதற்கான காரணிகளிலும் காலநிலையின் இயல்பிகளிலும் தங்கியிருக்கும்.

·  மண்ணிற் பலவகை உண்டு. அவை பெளதிக, இரசாயன இயல்புகளில் வேறுபடுகின்றன. மண்ணின் இவ்வியல்புகள் யாவும் அவற்றில் வளரும் தாவரங்களினைப் பாதிக்கின்றன. எனவே, ஒரு பகுதியில் உள்ள மண்ணை எதற்காக உபயோகிக்கலாம் என்பதை அம்மண்ணின் இயல்புகளே தீர்மானிக்கின்றன.

·  மண் உருவாதல் என்பது ஒரு நீண்ட காலச் செயற்பாடாகும். ஒரு அங்குல தடிப்பமுடைய மேல்மண் படை உருவாகுவதற்கு சராசரியாக 500 ஆண்டுகள் ஆகின்றன.

· மண் மாதிரியொன்றில் சராசரியாக 45%  கனிப்பொருட்கள், 25% நீர், 25% வளி, 5% நுண்ணங்கிகள் உள்ளடங்கியுள்ளன.

·  ஒரு கிராம் மண்ணில் 5000 – 7000 வகையான பக்றீரியாக்கள் இருக்கின்றன. ஒரு ஏக்கர் மண்ணில் 5 – 10 தொன் வரையிலான உயிரிகள் வாழ்கின்றன.

·  புவியின் மேற்பரப்பில் எண்ணிக்கையற்ற மண் வகைகள் காணப்படுகின்றன. ஐக்கிய அமெரிக்காவில் அண்ணளவாக 70000 வகையான மண் மாதிரிகளையும், ஐரோப்பாவில் அண்ணளவாக 10000 வகையான மண் மாதிரிகளையும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.


·  சிவப்பு, மஞ்சள், வெள்ளை என பல்வேறு நிறங்களிலான வகையான மண் வகைகள் காணப்படுகின்றன. ஆனால் உலகில் அதிக எண்ணிக்கையான மண் வகைகள் கறுப்பு, பிறவுண், சாம்பல் நிறங்களிலேயே காணப்படுகின்றன. 



·  மண்ணின் வளத்திற்கு மண்புழுக்கள் அத்தியாவசியமானவையாகும். வருடாந்தம் ஒரு மண் புழுவானது ஏக்கரொன்றுக்கு 15 தொன்கள் உலர்மண்ணினை வெளியாக்குகின்றது. 

· ஒரு ஏக்கர் பயிர் நிலமொன்றில் அண்ணளவாக 1.4 மில்லியன் மண்புழுக்கள் காணப்படுகின்றன.


· மண்படைகளில் அதிக உற்பத்திக்கு காரணமானது மேல்மண் ஆகும்.

·   உலகில் பயன்படுத்துக்கூடிய நிலங்களில் 23% ஆனவை மண்ணரிப்பு போன்ற இன்ன பல காரணங்களினால் வீழ்ச்சியடைந்துள்ளது.

·  மண்ணரிப்பு, அளவுக்கதிகமான பயிர்ச்செய்கை, இரசாயன வளமாக்கிகள் மற்றும் பீடைகொல்லிகள் உபயோகித்தல், மண் அகழ்வு, நிலம் மாசடைதல், கால்நடைகளின் அளவுக்கதிகமான மேய்ச்சல் செயற்பாடுகள் போன்ற காரணிகளால் மண்ணின் வளமானது வீழ்ச்சியடைந்து செல்கின்றன.


· புவியின் நீர்வளத்தில் 0.01% பங்கினையே நிலம் கொண்டுள்ளது.

***

3 comments:

ஆத்மா said...

அறியாத தினமும் அறியாத தகவல்களும்
பகிர்வுக்கு நன்றி சகோ

Muruganandan M.K. said...

மண் பற்றிய விழிப்புணர்வு ஊட்டும் நல்ல பதிவு

கே.கே.லோகநாதன் - KK Loganathan [B.Com] said...

நன்றிகள் ஆத்மா & Dr ....

Blog Widget by LinkWithin