Sunday, December 2, 2012

டிசம்பர் 02 ↔ அடிமைத்தனத்தை இல்லாதொழிப்பதற்கான சர்வதேச தினம்


அரசாங்கங்கள், சிவில் சமூகத்தினர், தனியார் துறையினர் ஆகியோர் ஒன்றிணைந்து உலகிலிருக்கின்ற எல்லா வகையிலான அடிமைத்தனத்தினையும் இல்லாதொழிப்பதற்கு முன்வரவேண்டும் என்பதனை வலியுறுத்தி ஐ.நா சபையினால் இத்தினமானது 1949ம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்டது.


உலகளாவியரீதியில் ஆட்கடத்தல்கள், பாலியல் சுரண்டல்கள், சிறுவர்களை வேலைக்கமர்த்தல், பலவந்த திருமணங்கள், ஆயுத மோதலுக்கு சிறுவர்களை படையில் சேர்த்தல் ஆகியன அடிமைத்தனத்தின் அம்சங்களாகும் என ஐ.நா தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலக தொழிலாளர் அமையத் தகவல்களின் பிரகாரம்(ILO), உலகில் இன்று 21 மில்லியன் பெண்கள், ஆண்கள், குழந்தைகள் ஆகியோர் அடிமைகளாக தொழில்களில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர்.

# உலகிலிருந்து அடிமைத்தனத்தினத்தினை இல்லாதொழிப்பதற்கான சர்வதேச வருடமாக 2004ம் ஆண்டினை ஐ. நா பொதுச்சபை பிரகடனம் செய்தது.

# உலகில், அடிமை வியாபாரம் இல்லாதொழிக்கப்பட்ட 200ம் ஆண்டு நிறைவு தினத்தினை கடந்த 2007ம் ஆண்டு மார்ச் மாதம் 25ம் திகதி ஐ.நா கொண்டாடியமை குறிப்பிடத்தக்கதாகும்.  



தந்தையின் வாழ்த்து...

அடிமைத்தனத்தை இல்லாதொழிப்பதற்காக பாடுபட்ட உலகத்தலைவர்களில் ஐக்கிய அமெரிக்காவின் ஜனாதிபதியாக விளங்கிய ஆபிரகாம் லிங்கன் வரலாற்றில் முக்கிய இடம் வகிக்கின்றார்.



ஆபிரகாம் லிங்கன் சிறுவனாக இருந்த சமயம் ஒரு அறிஞரின் வரலாற்றுக்கதையை ஒருநாள் படித்துக் கொண்டிருந்தார். அதில் ஒரு வாக்கியத்தை கண்டதும், அவர் மனம் அதில் நிலைத்துவிட்டது. "அடிமைத்தனம் என்ற ஒன்று இல்லையென்றால், உலகில் பாவச்செயல் என்ற ஒன்றுமே இல்லை". அந்த ஒப்பரிய வாக்கியத்தை ஒருகாகிதத்தில் எழுதி வைத்துக் கொண்டார். அதனை தனக்குக் கிடைத்த பெருஞ் செல்வம் என்று கருதினார். அதை ஒரு புத்தகத்தில் வைத்துப் பாதுகாத்து வந்தார். வறுமையின் காரணமாகச் சிறுவன் லிங்கனின் குடும்பம் வெளியூருக்குப் பிழைப்புத் தேடிச் சென்றது. வழியில் இரவு வந்துவிட்டதால் ஒரு இடத்தில் தங்கினர். இந்தப் பொன்மொழியை வைத்திருந்த புத்தகக் கட்டைச் சிறுவன் அருகில் வைத்துக் கொண்டு தூங்கினான். தலையணை இல்லாததால் அவனது தந்தைக்கு தூக்கம் வரவில்லை. அதனால் மகன் அருகில் இருந்த புத்தகக் கட்டை எடுத்துத் தலையணையாக வைத்துக் கொண்டு தூங்கிவிட்டார். சற்று நேரத்தில் விழித்த சிறுவன் புத்தகக் கட்டைக் காணாமல் பதறிப் போனான். சுற்றும் முற்றும் பார்த்தான். தந்தையின் தலைக்கடியில் தன் ஒப்பரிய செல்வம் இருப்பது கண்டு பதறிப் போனான். தந்தையின் தலையைத் தனது தொடையில் மாற்றி வைத்துக் கொண்டு புத்தகக் கட்டை உருவி எடுத்து விட்டான். அசதியாகத் தூங்கியதால் அதைத் தந்தை உணரவில்லை. காலையில் கண் விழித்த தந்தை மகனின் தொடை தன் தலையணை ஆகியிருப்பது கண்டு வியந்தார். சிறுவன் விபரம் கூறினான். தந்தையின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. மகனின் இலட்சிய உணர்வு கண்டு, "அடிமைத்தனம் என்ற பாவ்ச்செயலை ஒழிக்கும் பணியில் வெற்றி பெறுவாய்" என்று வாழ்த்தினார். அதன் படியே ஆபிரகாம் லிங்கன் அடிமைத்தனத்தை ஒழிக்கும் தனது இலட்சியத்தில் வெற்றி கண்டார்.

***

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல தகவல் + படைப்பு...

வாழ்த்துக்கள்...

கே.கே.லோகநாதன் - KK Loganathan [B.Com] said...

நன்றிகள் சகோ...

Blog Widget by LinkWithin