Saturday, October 13, 2012

வரலாற்றுப் புகழ்வாய்ந்த வெள்ளை மாளிகை…..




ஐக்கிய அமெரிக்கா ஜனாதிபதிகளின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமாகிய
வெள்ளை மாளிகைக்கு முதன்முதலில் அடிக்கல் நாட்டப்பட்டு இன்றுடன்(13 அக்டோபர் 2012) 220 ஆண்டுகள் பூர்த்தியாகின்றது. 

வெள்ளை மாளிகை தொடர்பான சுவாரஷ்சியமான தகவல்கள்...

Ø  அமெரிக்காவின் முதலாவது ஜனாதிபதியாக பதவிவகித்த ஜோர்ஜ் வோஷிங்டன் பதவிக்காலத்தில் அமெரிக்க ஜனாதிபதி வாசஸ்தல  நிர்மாணமானது 1792ம் ஆண்டு ஆரம்பித்தபோதிலும் ஜோர்ஜ் வோஷிங்டன் இம்மாளிகையில் வசிக்கவேயில்லை. ஏனெனில் இம்மாளிகையின் நிர்மாண வேலைகள் பூர்த்தியாகும் முன்னரே ஜோர்ஜ் வோஷிங்டன் 1799ம் ஆண்டு காலமாகிவிட்டார். வெள்ளை மாளிகை நிர்மாணப்பணிகள் 1800ம் ஆண்டளவில் நிறைவுற்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

Ø  அமெரிக்க ஜனாதிபதி மாளிகையில் முதன்முதலில் வசித்த முதல் அமெரிக்க ஜனாதிபதி ஜோன் அடம்ஸ்(அமெரிக்காவின் 2வது ஜனாதிபதி) ஆவார். 1800ம் ஆண்டு நவம்பர் 1ம் திகதி இந்த நிகழ்வு இடம்பெற்றது.

Ø  1812ம் ஆண்டு அமெரிக்காவினை ஆக்கிரமித்த பிரிட்டன் இராணுவ வீரர்கள் அமெரிக்காவின் கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு கட்டடங்களினை தீ வைத்து நாசப்படுத்தினர். இதன்போது வெள்ளை மாளிகையினையினையும் ஆகஸ்ட் 24, 1814ம் ஆண்டு தீ வைத்து சேதப்படுத்தினர்.  அமெரிக்காவின் 4வது ஜனாதிபதியாக பதவிவகித்த ஜேம்ஸ் மடிசன் 1815-1817ம் ஆண்டுவரை வெள்ளைமாளிகைக் கட்டிடத்தினை மீள நிர்மாணிக்க பாடுபட்டார்.

Ø  வெள்ளை மாளிகையினை வடிவமைத்த பிரதான கட்டிடக் கலைஞர் அயர்லாந்து நாட்டில் பிறந்த ஜேம்ஸ் ஹோவன்.

Ø  132 அறைகள், 35 குளியல் அறைகள், 6 அடுக்கு மாடி இருப்பிடங்களை வெள்ளை மாளிகை 55000 சதுர அடி பரப்பளவில் கொண்டுள்ளது. மேலும் 412 கதவுகள், 147 ஜன்னல்கள், 28 எரிப்புகள், 8 மாடி படிக்கட்டுத்தொகுதிகள், 3 மின்னகர்த்திகள்  ஆகியவற்றினையும் கொண்டுள்ளது.

Ø  வெள்ளை மாளிகைக்கு 1891ம் ஆண்டு மின்சார இணைப்பு வழங்கப்பட்டது.

Ø  வெள்ளை மாளிகை வெளிச்சுற்றுப்பரப்புக்கு தீந்தை பூசுவதற்கு 570 கலன்கள் வர்ணப்பூச்சுக்கள் தேவையாகும்.

Ø  1901ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி மாளிகைக்கு "வெள்ளை மாளிகை(White House)" என்று பெயர் சூட்டியவர் தியோடர் ரூஸ்வெல்ட். இவர் அமெரிக்காவின் 26வது ஜனாதிபதியாவார்.


Ø  வெள்ளை மாளிகையினைப் பார்வையிட பொதுமக்களுக்கு 1805ம் ஆண்டு சந்தர்ப்பத்தினைக் ஏற்படுத்திக்கொடுத்த முதல் அமெரிக்க ஜனாதிபதி தோமஸ் ஜெபர்சன். இவர் அமெரிக்காவின் 3வது ஜனாதிபதியாவார்.
                                                                                                                                                       9/11 தாக்குதல் சம்பவத்தினைத் தொடர்ந்து வெள்ளை மாளிகையினைப் பார்வையிட பல்வேறு கட்டுப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும். வெள்ளை மாளிகையினைப் பார்வையிட வருடாந்தம் 2மில்லியனுக்கும் அதிகமான விருந்தினர்கள் வருகை தருகின்றனராம்.

Ø  வெள்ளை மாளிகைக்கு மோட்டார் இயந்திர வாகனத்தில் பயணம் செய்த முதல் அமெரிக்க ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட்.

Ø  வெள்ளை மாளிகைக்கு ஆகாயவிமானத்தில் பயணம் செய்த முதல் அமெரிக்க ஜனாதிபதி பிராங்ளின் ரூஸ்வெல்ட். இவர் அமெரிக்காவின் 32வது ஜனாதிபதியாவார்.

Ø  வெள்ளை மாளிகைக்கு விஜயம் செய்த முதல் போப்பாண்டவர் 2ம் ஜோன் போல். இவர் 1979ம் ஆண்டு விஜயம் செய்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Ø  வெள்ளை மாளிகையில் மணமுடித்த முதல் அமெரிக்க ஜனாதிபதி ஜோன் ரைய்லர். இவர் அமெரிக்காவின் 10வது ஜனாதிபதியாவார்.

Ø  அமெரிக்க ஜனாதிபதிகளின் உறவினர்களின் இரண்டு திருமண நிகழ்வுகள் வெள்ளை மாளிகையில் நடைபெற்றுள்ளது; ரிச்சட் நிக்சனின் மகளின் திருமணம் மற்றும் பில் கிளிண்டனின் சகோதரரின் திருமணம்.

***

3 comments:

ஆத்மா said...

மிகவும் பயனுள்ள தகவல்கள்
தெரியாத பல விடயங்களைத் தெரிந்து கொண்டேன்
பகிர்வுக்கு நன்றி

திண்டுக்கல் தனபாலன் said...

தகவல்கள் அசர வைக்கிறது...

மிக்க நன்றி நண்பரே...

கே.கே.லோகநாதன் - KK Loganathan [B.Com] said...

நன்றிகள் சகோ...........

Blog Widget by LinkWithin