Tuesday, October 9, 2012

"உலக தபால் தினம்" → ஒக்டோபர் மாதம் 9ம் திகதி



ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் மாதம் 9ம் திகதி "உலக தபால் தினம்" கொண்டாடப்படுகின்றது. உலக தபால் சங்கம் 1874ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 9ம் திகதி சுவிட்சர்லாந்து நாட்டின் பேர்ன் நகரில் அமைக்கப்பட்ட நிறைவினையொட்டி 1969ம் ஆண்டு ஜப்பான் நாட்டின் டோக்கியா நகரில் உலக தபால் சங்க சம்மேளனத்தில் ஒக்டோபர் மாதம் 9ம் திகதி "உலக தபால் தினம்" என பிரகடனம்செய்யப்பட்டது.
இன்று நவீன தொழில் நுட்ப முறைகளில் ஏற்பட்ட அபிவிருத்தியானது தொடர்பாடல் துறையில் பல்வேறுபட்ட மாறுதல்களை ஏற்படுத்தினாலும் தபால் துறையானது தனிச்சிறப்பிடத்தினை வகிக்கின்றன.

தபால் துறை தொடர்பான சில சுவையான தகவல்கள்....

Ø  தபால் விநியோகத்தினை இலகுபடுத்தும்வகையில் வீடுகளுக்கு இலக்கங்கள் வழங்கும் முறை முதன்முதலில் 1463/64ம் ஆண்டளவில் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் ஆரம்பமானது.

Ø  முதன்முதலில் தபால் குறியீட்டு எண்களை அறிமுகப்படுத்திய நாடு ஜேர்மனி ஆகும். இங்கே 1942ம் ஆண்டு இரண்டு இலக்க முறையானது அறிமுகமானது.

Ø  உலகில் அதிகளவு அஞ்சல் அலுவலகங்களினை கொண்ட நாடு இந்தியா ஆகும். அதனை தொடர்ந்து சீனா, ரஷ்யா, அமெரிக்கா, ஜப்பான், இந்தோனேசியா, பிரிட்டன், பிரான்ஸ், உக்ரெய்ன், இத்தாலி ஆகிய நாடுகள் ஆகும்.

Ø  உலகில் மிகப்பெரிய அஞ்சல் நிலையமும், மிகச்சிறிய அஞ்சல் நிலையமும் அமைந்துள்ள நாடு ஐக்கிய அமெரிக்கா ஆகும். மிகப்பெரிய அஞ்சல் நிலையம் இல்லியானோஸ் மாநிலத்தின் சிக்காக்கோவிலும், மிகச்சிறிய அஞ்சல் நிலையம் புளோரிடா மாநிலத்தின் ஒக்கோபீயிலும் அமைந்துள்ளது.

Ø  அரச குடும்பத்தினை சாராத ஒருவராக பிரிட்டன் தபால் முத்திரைகளில் இடம்பெற்ற முதல் நபர் வில்லியம் ஷேக்ஸ்பியர் ஆவார். 1964ம் ஆண்டு இம்முத்திரை வெளியிடப்பட்டது.

Ø  ஐக்கிய அமெரிக்க நாட்டின் அரச தலைவராக பதவிவகிக்காத ஒருவராக அந்த நாட்டின் தபால் முத்திரைகளில் இடம்பெற்ற முதல் நபர் பெஞ்சமின் பிராங்ளின் ஆவார். 1847ம் ஆண்டு, ஜூலை மாதம் இம்முத்திரை வெளியிடப்பட்டது. பெஞ்சமின் பிராங்ளின் ஐக்கிய அமெரிக்காவின் முதல் தபால்மா அதிபர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.



Ø  உலகுக்கு தபால் முத்திரைகளை அறிமுகப்படுத்திய நாடு பிரிட்டன் என்பது நாமறிந்த தகவலே... பிரிட்டனை தொடர்ந்து உலகில் முத்திரைகளை வெளியிட்ட இரண்டாவது நாடு பிரேசில் ஆகும். இந்த முத்திரைகள் "ஒக்ஸ் ஐய்ஸ்" என்றழைக்கப்பட்டன. 

***


***

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

எத்தனை எத்தனை சுவையான தகவல்கள்...

விளக்கமான பகிர்வுக்கு நன்றி...

kk said...

நல்ல தகவல் தொடருங்கள் வாழ்த்துக்கள்

கே.கே.லோகநாதன் - KK Loganathan [B.Com] said...

நன்றிகள் சகோ....

Blog Widget by LinkWithin