Sunday, August 12, 2012

ஒலிம்பிக் வரலாற்றில் அதிகூடிய பதக்கங்களை வெற்றிகொண்டவர்கள்...


லண்டனில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற 30வது ஒலிம்பிக் போட்டிகள் இன்றைய தினத்துடன்(12/08/2012) நிறைவடைய இருக்கின்றது.

இந்த 30வது ஒலிம்பிக் போட்டியில் பல உலக சாதனைகள் படைக்கப்பட்டன. அந்தவகையில் மிகமுக்கியமான சாதனைகளில் ஒன்றாக கருதப்படுகின்ற, ஒலிம்பிக் வரலாற்றில், தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் உள்ளடங்களாக அதிகூடிய மொத்தப் பதக்கங்களை வெற்றிகொண்டவர் என்கின்ற சாதனையினை ஐக்கிய அமெரிக்காவினைச் சேர்ந்த நீச்சல் வீரர் மைக்கல் பெல்ப்ஸ் தனதாக்கிக்கொண்டார். இதற்கு முன்னர் இந்தச்சாதனை சோவியத் ஒன்றியத்தினைச் சேர்ந்த ஜிம்னாஸ்டிக் வீராங்கனை லரிசா லற்னினா வசமிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஒலிம்பிக் வரலாற்றில் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் உள்ளடங்களாக அதிகூடிய மொத்தப் பதக்கங்களை வெற்றிகொண்டவர்கள் வருமாறு...

1)     மைக்கல் பெல்ப்ஸ்(ஐக்கிய அமெரிக்கா)
நீச்சல்(2004-2012 ஒலிம்பிக்)
தங்கம் 18; வெள்ளி 02; வெண்கலம் 02
மொத்தம் 22 பதக்கங்கள்



2) லரிசா லற்னினா(சோவியத் ஒன்றியம்)
ஜிம்னாஸ்டிக்(1956-1964 ஒலிம்பிக்)
தங்கம் 09; வெள்ளி 05; வெண்கலம் 04
மொத்தம் 18 பதக்கங்கள்



3) நிகோலி அன்ரினோவ்(சோவியத் ஒன்றியம்)
ஜிம்னாஸ்டிக்(1972-1980 ஒலிம்பிக்)
தங்கம் 07; வெள்ளி 05; வெண்கலம் 03
மொத்தம் 15 பதக்கங்கள்
                                             
4) பொரிஸ் ஷக்லின்(சோவியத் ஒன்றியம்)
ஜிம்னாஸ்டிக்(1956-1964 ஒலிம்பிக்)
தங்கம் 07; வெள்ளி 04; வெண்கலம் 02
மொத்தம் 13 பதக்கங்கள்

5) எடோர்டோ மங்கியாரொர்டி(இத்தாலி)
வாள் சண்டை(1936-1960 ஒலிம்பிக்)
தங்கம் 06; வெள்ளி 05; வெண்கலம் 02
மொத்தம் 13 பதக்கங்கள்

6) பாவோ நுர்மி(பின்லாந்து)
தடகளம்(1920-1928 ஒலிம்பிக்)
தங்கம் 09; வெள்ளி 03  
மொத்தம் 12 பதக்கங்கள்

7) ப்ஜோர்ன் டக்லிய்(நோர்வே)
பனிச்சறுக்கல்(1992-1998 குளிர்கால ஒலிம்பிக்)
தங்கம் 08; வெள்ளி 04
மொத்தம் 12 பதக்கங்கள்

8) பிர்கிட் பிஸ்செர்(ஜேர்மனி)
படகோட்டம்(1980-2004 ஒலிம்பிக்)
தங்கம் 08; வெள்ளி 04
மொத்தம் 12 பதக்கங்கள்

9) சாவோவ் காடோ(ஜப்பான்)
ஜிம்னாஸ்டிக்(1968-1976 ஒலிம்பிக்)
தங்கம் 08; வெள்ளி 03; வெண்கலம் 01
மொத்தம் 12 பதக்கங்கள்

10) ஜென்னி தொம்ப்சன்(ஐக்கிய அமெரிக்கா)
நீச்சல்(1992-2004 ஒலிம்பிக்)
தங்கம் 08; வெள்ளி 03; வெண்கலம் 01
மொத்தம் 12 பதக்கங்கள்

***

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லதொரு தொகுப்பு...
பதிவாக்கித் தந்தமைக்கு பாராட்டுக்கள்... நன்றி...

Radha N said...

​ஹ்ம்...... நாமெல்லாம் எப்போ இந்த லிஸ்டில் வரப்போறோமோ தெரியல.....

nagu
www.tngovernmentjobs.in

கே.கே.லோகநாதன் - KK Loganathan [B.Com] said...

நன்றிகள் நண்பர்களே........

Blog Widget by LinkWithin