Saturday, July 21, 2012

"டைனோசர்" என்ற சொல் தோற்றம் பெற்றது எவ்வாறு தெரியுமா?.....



பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் வாழ்ந்த உயிரினங்களில் ஒன்றாக டைனோசரினை விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.

பல்வேறுபட்ட காலகட்டங்களில் பல்வேறுவிதமான "டைனோசர்" இனங்கள் வாழ்ந்ததாகவும் அவற்றில் சில இனங்கள் மிகப்பெரியனவையாகவும், சில இனங்கள் மிகச்சிறியனவையாகவும், சில இனங்கள் இரண்டு கால்களில் நடப்பவையாகவும், சில இனங்கள் நான்கு கால்களில் நடப்பவையாகவும், சில இனங்கள் மிக வேகமாக செல்பவையாகவும், சில இனங்கள் மிக மெதுவாக அசைந்தசைந்து செல்பவையாகவும், சில இனங்கள் ஊனுண்ணியாகவும், சில இனங்கள் தாவரவுண்ணியாகவும், சில இனங்கள் கவசம் போன்ற உடம்பினைக் கொண்டவையாகவும், சில இனங்கள் அடர்ந்த, சமதளமற்ற உடம்பினைக் கொண்டவையாகவும், சில இனங்கள் கொம்பினைக் கொண்டவையாகவும், சில இனங்கள் பறக்கும் ஆற்றலைக் கொண்டவையாகவும் விஞ்ஞானிகள் வகைப்படுத்தியுள்ளனர்.

இந்த உயிரினங்கள் பூமியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்புக்களால் அழிவடைந்ததாகவும், பூமியை தாக்கிய பிரமாண்டமான விண்கற்களினால் அழிவடைந்ததாகவும், இயற்கையில் ஏற்பட்ட மாறுதல்களால் அழிவடைந்ததாகவும் பல்வேறுபட்ட கருத்துக்கள் உள்ளன. 

 சேர் ரிச்சர்ட் ஓவன்

"டைனோசர்(Dinosaur)" என்கின்ற சொல்லானது "டைனோஸ்(Deinos)", மற்றும் "சரஸ்(Sauros)" ஆகிய இரண்டு கிரேக்கமொழி சொற்களிலிருந்தும் தோற்றம்பெற்றதாகும். "டைனோஸ்(Deinos)" என்பதற்கு பயங்கரமானது, சக்திவாய்ந்தது, ஆச்சரியமானது என்கின்ற அர்த்தங்களாகும்.
"சரஸ்(Sauros)" என்பதற்கு பல்லி என்றும் அர்த்தமாகும்.

"டைனோஸ்(Deinos)" மற்றும் "சரஸ்(Sauros)" ஆகிய இரண்டு சொற்களையும் கோர்த்து 1841ம் ஆண்டு "டைனோசரியா(Dinosauria)" என்கின்ற பதத்தினை உயிரியல் விஞ்ஞானி, புதைபடிவ ஆய்வாளராகிய "சேர் ரிச்சர்ட் ஓவன்" உருவாக்கிய பின்னரே இந்தப் பதமானது பிரபல்யம் அடைந்தது.


அறிந்துகொள்வோம்....
Ø  முதன்முதலில் டைனோசர் முட்டை எச்சங்கள் 1869ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

Ø  டைனோசர்கள் பற்றிக் குறிப்பிடுகின்ற "ஜூராசிக் பார்க்(Jurassic Park)" என்கின்ற திரைப்படத்தினை  1993ம் ஆண்டு அமெரிக்க நாட்டைச் சேர்ந்த இயக்குனர் ஸ்ரிவன் ஸ்பில்பேர்க் உருவாக்கினார். ஜூராசிக் பார்க் திரைப்படமானது 03 ஓஸ்கார் விருதுகளை 1994ம் ஆண்டு பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.


***

3 comments:

MARI The Great said...

நல்ல தகவல் நண்பா!

திண்டுக்கல் தனபாலன் said...

தகவலுக்கு நன்றி நண்பரே !

கே.கே.லோகநாதன் - KK Loganathan [B.Com] said...

நன்றிகள் நண்பர்களே.........

Blog Widget by LinkWithin