Saturday, July 7, 2012

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் எதிரணிக்கெதிராக மிக வேகமாக 2000 ஓட்டங்களைக் கடந்தவர்.....

இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் குமார் சங்கக்கார புதியதொரு சாதனையினை தன்வசப்படுத்திக் கொண்டார். ஆம்...... டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் எதிரணிக்கெதிராக குறைந்த இன்னிங்ஸ்களில் மிக வேகமாக 2000 ஓட்டங்களைக் கடந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

குமார் சங்கக்கார, பாகிஸ்தான் அணிக்கெதிராக 2000 ஓட்டங்களைக் கடக்க 26 இன்னிங்ஸ்களினை எடுத்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும். இதற்கு முன்னர் இந்தச் சாதனை இந்தியாவின் சுனில் கவாஸ்கர் மற்றும் மே.தீவுகளின் பிரைன் லாரா வசமிருந்தமை நினைவில் கொள்ளத்தக்கதாகும்.


டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் எதிரணிக்கெதிராக மிக வேகமாக 2000 ஓட்டங்களைக் கடந்தவர்கள் வருமாறு.....

Ø  குமார் சங்கக்கார(இலங்கை) 26 இன்னிங்ஸ்கள் பாகிஸ்தான் அணிக்கெதிராக

Ø  சுனில் கவாஸ்கர்(இந்தியா) 28 இன்னிங்ஸ்கள் மே.தீவுகள் அணிக்கெதிராக

Ø  பிரைன் லாரா(மே.தீவுகள்) 28 இன்னிங்ஸ்கள் இங்கிலாந்து அணிக்கெதிராக

Ø  டொன் பிரட்மன்(அவுஸ்திரேலியா) 29 இன்னிங்ஸ்கள் இங்கிலாந்து அணிக்கெதிராக

Ø  விவ்வியன் ரிச்சர்ட்ஸ்(மே.தீவுகள்) 30 இன்னிங்ஸ்கள் இங்கிலாந்து அணிக்கெதிராக

Ø  ஸ்ட்ச்லிபீ(இங்கிலாந்து) - 31 இன்னிங்ஸ்கள் அவுஸ்திரேலியா அணிக்கெதிராக

Ø  லென் ஹூட்டன்(இங்கிலாந்து) 34 இன்னிங்ஸ்கள் அவுஸ்திரேலியா அணிக்கெதிராக

Ø  ஹரி சோபர்ஸ்(மே.தீவுகள்) 34 இன்னிங்ஸ்கள் இங்கிலாந்து அணிக்கெதிராக

Ø  ஜாவிட் மியண்டாட்(பாகிஸ்தான்) - 35 இன்னிங்ஸ்கள் இந்தியா அணிக்கெதிராக

***

3 comments:

MARI The Great said...

பகிர்வுக்கு நன்றி நண்பா!

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லதொரு தொகுப்பு ! பகிர்வுக்கு நன்றி !

கே.கே.லோகநாதன் - KK Loganathan [B.Com] said...

நன்றிகள் சகோ.....
திண்டுக்கல் தனபாலன் அண்ணா உங்கள் நல்லெண்ணத்துக்கு நன்றிகள்.. தாங்கள் கூறியபடி Email Subscription Widget இணைத்துக்கொண்டேன்..

Blog Widget by LinkWithin