Tuesday, March 20, 2012

சிட்டுக்குருவிகளைப் பாதுகாப்போம்…!!!




சிறிய தானியம்போன்ற மூக்கு; சின்னக் கண்கள்; சின்னத் தலை; வெள்ளைக் கழுத்து; அழகிய மங்கல வெண்மை நிறமுடைய பட்டுப் போர்த்த வயிறு; கருமையும் வெண்மையும் கலந்த சாம்பல் நிறத்தாலாகியப் பட்டுப் போர்த்த முதுகு; சிறிய தோகை; துளித்துளிக் கால்கள்...... இத்தனையும் சேர்த்து ஒரு பச்சைக் குழந்தையின் கைப்பிடியிலே பிடித்து விடலாம்.’
என விந்தை அழகு கொஞ்சும் விதமாக சிட்டுக் குருவியினை வர்ணிக்கின்றார் மகாகவி சுப்பிரமணிய பாரதியார்.

அந்தவகையில்,2010ம் ஆண்டு தொடக்கம் ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 20ம் நாள் சர்வதேச சிட்டுக் குருவிகள் நாளாக உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படுகின்றது.



வீட்டு சிட்டுக் குருவிகளின் வீழ்ச்சி தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதுடன் அவைகளின் நாளாந்த வாழ்க்கை போராட்டத்தில் எதிர்நோக்கும் பிரச்சினைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுவதுமே இத்தினம் கொண்டாடப்படுவதன் நோக்கமாகும்.

கடந்த சில ஆண்டுகளாக சிட்டுக்குருவிகளின் நகர்ப்புற, மற்றும் கிராமப்புற இயற்கை வாழிடங்கள் மிக அதிகளவில் சரிவடைந்துவருகின்றன.

சிட்டுக்குருவிகளின் தொடர்ச்சியான வீழ்ச்சியானது எம்மை சூழவுள்ள சுற்றுச்சூழலில் ஏற்படுகின்ற மாறுதல்களை வெளிப்படுத்துகின்ற ஒரு குறிகாட்டியாக விளங்குகின்றது.

இது நமது சுகாதார மற்றும் நல்வாழ்வுக்கான சாத்தியமான தீங்கு விளைவுகலை வெளிப்படுத்துகின்ற எச்சரிக்கை மணியாகவும் விளங்குகின்றது. அதிகரித்த அளவிலான நுண்ணலை மாசு காரணமாக பாரியளவிலான சுகாதார பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றோம்.

இன்றைய நவீன யுகத்தில் மனிதனின் வாழ்விடங்கள் மாடி வீடுகளாகியதும், இயற்கை பாதுகாப்பரண்களாகிய மரங்கள் அழிக்கப்படுவதும் சிட்டுக்குருவிகள் அருகி வருவதற்கு காரணங்களாகும். இதற்கும் மேலாக செல்போன் கோபுரங்களிலிருந்து வெளியாகின்ற கதிர்வீச்சுக்கள் சிட்டுக் குருவிகளின் இனப்பெருக்கத்தினை பெருமளவு பாதிப்புக்குள்ளாகி அவற்றின் இருப்பினை கேள்விக்குறியாக்கி சிட்டுக்குருவிகளின் வீழ்ச்சியில் பிரதான பங்காற்றுகின்றது. மேலும் பயிர்களுக்குப் பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பதினால், அந்த தானியங்களை உண்ணுவதாலும் சிட்டுக் குருவிகள் மறைந்து வருகின்றன.

சிறிய பறவை இனங்கள் இயற்கையழிவுகளை முன்கூட்டியே உணர்ந்து மக்களுக்கு அறிவுறுத்துபவை மேலும் இயற்கையின் உணவுச்சங்கிலி அறுந்துவிடாமல் காப்பதிலும், வனங்களின் பரவலுக்கும் இந்தச் சிட்டுக்குருவிகள் உதவுகின்றன.

இத்தகைய சிறப்புக்களைக் கொண்ட இயற்கையின் படைப்பான சிட்டுக்குருவிகளினை அழிவிலிருந்து காப்பாற்ற முன் வருவோமாக……

***

4 comments:

கலாகுமரன் said...

"சிறிய பறவை இனங்கள் இயற்கையழிவுகளை முன்கூட்டியே உணர்ந்து மக்களுக்கு அறிவுறுத்துபவை மேலும் இயற்கையின் உணவுச்சங்கிலி அறுந்துவிடாமல் காப்பதிலும், வனங்களின் பரவலுக்கும் இந்தச் சிட்டுக்குருவிகள் உதவுகின்றன."

நல்ல வொரு சிறந்த பதிவாக்கம். நன்றி

கே.கே.லோகநாதன் - KK Loganathan [B.Com] said...

நன்றிகள் நண்பரே……

Unknown said...

நான் படித்த தமிழ் வலைபூக்களிலே மிக உபயோகமான வலை பூ உங்களுடையது மட்டுமே , வாழத்துக்கள்

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு. நன்றி.
எனது பக்கத்தில் பகிர்கிறேன்.

Blog Widget by LinkWithin