Thursday, March 8, 2012

சாதனைப் பெண்மணிகள் பலரில் சிலர்..!!!


ஒவ்வொரு வருடமும் மார்ச் 8ம் திகதி சர்வதேச மகளிர் தினமாக அனுஷ்டிக்கப்படுகின்றது.

அந்தவகையில், சாதனைப் பெண்மணிகளாக விளங்கிய சிலரினை இன்றைய மகளிர் தினத்தில் பார்ப்போம்.


 இங்கிலாந்து மகாராணி 2ம் எலிசபெத் ஏப்ரல் 21ம் திகதி பிறந்தாலும் ஜூன் 11ம் திகதியே தனது பிறந்த உத்தியோகபூர்வமாக நாளைக் கொண்டாடுகின்றார்.




 இங்கிலாந்தினைச் சேர்ந்த அகதா கிறிஸ்ரி, துப்பறியும் நாவல் பலவற்றினைப் படைத்து உலகப் புகழ்பெற்ற பெண்மணியாவார். இவர் தனது ஆரம்ப ஆண்டுகளில் பாடசாலை செல்லாமல் தனது அம்மையாரிடமே கல்வி கற்றுக்கொண்டார். கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தின் பிரகாரம் எல்லாக் காலத்திலும் மிகச்சிறந்த விற்பனைக் கொண்ட நாவல்களைப் படைத்த ஒருவராகவும் இவர் திகழ்கின்றார். இவரின் 4 பில்லியனுக்கு மேற்பட்ட நாவல்கள் விற்பனையாகியுள்ளதுடன் 103மொழிகளில் இவரது நாவல்கள் மொழிபெயர்க்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும். இவர் தனது முதலாவது நாவலினை பிரசுரிக்க 5 ஆண்டுகளாகக் காத்திருந்தார். ஏனெனில் இவர் நாடிய 6 புத்தக வெளியீட்டாளர்கள் இவரது நாவலினை பிரசுரிக்க முன்வராமையிலானாகும். இவர் தனது 1வது புத்தகத்தினை தனது தங்கையுடன் மேற்கொண்ட சவாலின் விளைவாகவே எழுதியமை குறிப்பிடத்தக்கதாகும்.




 ரேடியத்தினைக் கண்டுபிடித்த மேரி கியூரி அம்மையார் இரண்டு தடவைகள் நோபல் பரிசினைக் பெற்றவர் என்பது நாமறிந்ததே. ஆனால் மதிப்புமிக்க பிரெஞ்சு கலைக்கழகத்தில் அங்கத்துவம் பெறுவது மறுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். ஏனெனில் பெண் என்ற காரணத்தினாலாகும். மேரி கியூரி அம்மையாரே நோபல்பரிசினைப் பெற்றுக்கொண்ட முதல் பெண் என்பதும் நினைவில் கொள்ளத்தக்கதாகும்.




 “ஃப்ளோ – ஜோ” என்ற செல்லப் பெயரில் அழைக்கப்பட்ட ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த அதிவேக ஓட்ட வீராங்கனை ஃப்ளொரென்ஸ் கிரிபித் ஜொய்னர் 1988ம் ஆண்டு சியோல் ஒலிம்பிக் போட்டியில் 200மீற்றர் ஓட்டப்போட்டியினை 21:34 வினாடிகளில் நிறைவு செய்து நிலை நாட்டிய உலக சாதனை இதுவரை முறியடிக்கப்படாமலேயே உள்ளது.




***

பெண்மணிகளுக்கு மகளிர்தின வாழ்த்துக்கள்……!!!

***

2 comments:

MARI The Great said...

புதிய தகவல்கள் .., பகிர்வுக்கு நன்றி நண்பா

கே.கே.லோகநாதன் - KK Loganathan [B.Com] said...

நன்றிகள் நண்பரே............

Blog Widget by LinkWithin