Tuesday, February 7, 2012

அமெரிக்க டொலருக்குரிய '$' குறியீடு உருவாகியது எவ்வாறு ?....

அமெரிக்க நாணயமான டொலருக்குரிய குறியீடாக '$' என்கின்ற அடையாளம் பயன்படுத்தப்படுவது நாமறிந்ததே... '$' என்கின்ற இந்த அடையாளம் எவ்வாறு தோற்றம் பெற்றது...!!!



கைகளால் எழுதப்பட்ட பழைய அமெரிக்க - ஸ்பானிஷ் புத்தகங்களில் "பேசோ(Peso)" என்பதற்கான சுருக்கமாக 'ps' என்றே எழுதப்பட்டு வந்தது. இதிலிருந்தே அமெரிக்க நாணயமான டொலருக்குரிய குறியீடாக '$' என்கின்ற அடையாளம் தோற்றம் பெற்றதாம்.

'$' என்கின்ற இந்த அடையாளமானது முதன்முதலில் ஸ்பானிஷ்-அமெரிக்களிடையே வணிகத் தொடர்புகள் தோற்றம் பெற்ற 1770களில் ஆங்கில - அமெரிக்க கையெழுத்து ஆவணங்களில் இடம் பெற்றன. 1800களின் பிற்பாடு '$' என்கின்ற அடையாளம் அச்சேறத் தொடங்கிவிட்டது.



”டொலர்” என்கின்ற சொல்லானது ப்ளெமிஷ் அல்லது Joachimstaler என்கிற ஜெர்மன் சொல்லின் daler (taler) என்கிற சொல்லிலிருந்து தோற்றம் பெற்றதாகும். அதாவது, ஜெர்மனிலுள்ள போஹெமியாவிலுள்ள(தற்போது இந்த இடம் செக் குடியரசில் உள்ள Jáchymov ஆகும்) ஜோசிம்ஸ்டல் வெள்ளி சுரங்கங்களிருந்து பெறப்படுகின்ற நாணயத்தைக் குறிப்பிடுவதாகும்.

ஸ்பானிஷ்-அமெரிக்க காலனிகளிலும், அமெரிக்க சுதந்திர போர் நடைபெற்ற பிரிட்டிஷ் வட அமெரிக்க காலனிகளிலும் பயன்படுத்தப்பட்ட நாணயத்திற்கு இந்த பதம் பின்னர் பயன்படுத்தப்பட்டது. 18ம் நூற்றாண்டுக்குப் பிற்பாடு அமெரிக்க நாணயம் இந்தப் பெயரினை உள்வாங்கிக் கொண்டது.

***

3 comments:

prabhadamu said...

Good Share. Thank you

ஒரு அழகிய விருதை தங்களுக்கு வழங்கியுள்ளது தொடர்பான இடுகைக்கு வருகை தாருங்கள்.

http://azhkadalkalangiyam.blogspot.com/2012_02_16_archive.html

Siraju said...

உங்கள் வலைப்பூவின் செய்திகள் எல்லாம் நன்று. அத்துடன் செய்தி எதன் மூலம் பெறப்பட்டது ,(Source அதையும் குறிப்பிட்டல் நலம்.

கே.கே.லோகநாதன் - KK Loganathan [B.Com] said...

என் வலைப்பூவுக்கு Liebster விருது வழங்கி கௌரவித்த ஆழ்கடல் களஞ்சியம் என்கின்ற வலைத்தள பதிவர் Prabhadamu அவர்களுக்கு என் நன்றிகள் உரித்தாகுக....


***********************************************
நன்றிகள் Siraju.

Blog Widget by LinkWithin