Monday, December 26, 2011

25 கோடி ஆண்டுகளுக்கு முன்பு காஷ்மீரை தாக்கிய சுனாமி.....

இந்தியப் பெருங்கடல் தோன்றுவதற்கு முன்பு பல கடல்கள் ஒன்றாக இருந்த நேரத்தில் காஷ்மீர் பகுதியில் சுனாமி ஏற்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இத்தகவலை அமெரிக்க புவியியல் ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார்.



நில அமைப்புக்கள், புவியியல் மாற்றங்கள், சுனாமி ஆகியவை தொடர்பாக ஐக்கிய அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் பல்கலைக்கழக பேராசிரியர் மைக்கேல் ப்ரூக்ஃபீல்டு ஆராய்ச்சி செய்துவருகிறார். ஸ்ரீநகரில் உள்ள காஷ்மீர் பல்கலைக்கழகத்தின் புவியியல், புவி இயற்பியல், புவி தகவலியல் துறைகள் சார்பில் அவரது சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் அவர் தெரிவித்த தகவல்கள் வருமாறு:
பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு கண்டங்கள் தற்போது இருப்பதுபோல பல பிரிவுகளாக இல்லை. 20 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய "டிரயாசிக்" காலத்தின் போது "லாரேசியா", "கோண்டுவானா" என இரு பிரிவுகள் மட்டுமே இருந்தன. "டேதிஸ்" கடலால் அவை இரண்டாகப் பிரிக்கப்பட்டிருந்தன. 25 கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்த "டேதிஸ்" கடலில் இருந்து எழுந்த ஆழிப்பேரலை, "குரியுல்" கணவாய் பகுதியை பயங்கரமாகத் தாக்கியுள்ளது. இப்பகுதி தற்போது காஷ்மீரில் இருக்கின்றது. "டேதிஸ்" கடல்தான் பின்னர் பலவிதமாக உருமாறி இந்தியப் பெருங்கடலாக மாறியது.



காஷ்மீரின், "குரியுல்" பள்ளத்தாக்கு பகுதியில் இவை தொடர்பிலான பல்வேறு படிமங்கள் கிடைத்துள்ளன. உலகின் பல பகுதிகளைச் சேர்ந்த தொல்லியல் துறை ஆராய்ச்சியாளர்களும் இங்கு ஆய்வு நடத்தி வருகின்றனர். 25 கோடி ஆண்டுகளுக்கு முன்பு சுனாமி கடற்கோள் வந்ததற்கான படிம ஆதாரங்களும் கிடைத்திருக்கின்றன. இது தொடர்பாக மேலும் ஆய்வுகள் நடத்தப்படவேண்டுமென பேராசிரியர் ப்ரூக்ஃபீல்டு தெரிவித்தார்.

------------------------------------------------------------

உங்களுக்குத் தெரியுமா?.....

 உலகில் ஏற்பட்ட மிகவும் உயரமான சுனாமி அலை 1985ம் ஆண்டு லிதுயாபேயில் இடம்பெற்றது. அந்த சுனாமி அலையின் உயரம் 524மீற்றர்(1742அடி)

 இதுபோன்ற இரண்டாவது உயரமான சுனாமி அலை 1963ம் ஆண்டு வெஜோன்டாமில் இடம்பெற்றது. அந்த சுனாமி அலையின் உயரம் 250மீற்றர்(750அடி)

-------------------------------------------------------------

இன்றும் என் மனக்கண் முன்னால்........!!!



2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் நாள், இந்துசமுத்திரப் பிராந்திய நாடுகளினைத் தாக்கி பேரழிவை ஏற்படுத்திய சுனாமிப்பேரலையினை நம்மால் எளிதில் மறந்துவிடமுடியாது.

கடற்கரையோரங்களில் வீற்றிருந்த தென்னை மரங்களின் உயரத்திற்கும் மேலாக மேலெழுந்த ஆழிப்பேரலைகள் கரையோரங்களினைத் தாக்கிய துவம்சம் செய்தது, அந்த ஆழிப்பேரலையின் கோரத் தாண்டவத்தினை சில கிலோமீற்றர் தூரத்திலிருந்து நேரடியாகப் பார்த்தது இன்றும் என் நினைவுகளில் நிலைத்து நிற்கின்றது.


-----------------------------------------------------

புதியதொரு மைல்கல்லினை நோக்கி..........!!!



பதிவுலகில் மீண்டுமொரு மைல்கல்லினை கடக்க காத்திருக்கின்றேன். ஆம்..... எதிர்வருகின்ற பதிவு எனது 300வது பதிவாகும் என்கின்ற நற்செய்தியுடன்
பதிவுலக நண்பர்கள், வாசகர்கள், அன்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் உரித்தாகுக......


***

1 comment:

Admin said...

கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற வலைப்பதிவர்கள் மற்றும் எழுத்தாளர்களுக்குமிடையிலான சந்திப்பு விரைவில் மட்டக்களப்பில் இடம்பெற இருக்கின்றன. இச் சந்திப்பில் தொழில்நுட்பம் சார்ந்த பல விடயங்களும் எழுத்தாளர்கள் எவ்வாறு இணையத்தினைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது பற்றிய பல விடயங்கள் ஆராயப்பட இருக்கின்றன.

கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற வலைப்பதிவர்கள் எழுத்தாளர்கள் வலைப்பதிவு மற்றும் எழுத்துத் துறைக்கு வருவதற்கு ஆர்வமுள்ளவர்கள் கலைஞர்கள் தொடர்பு கொண்டு உங்கள் விபரங்களை பதிவு செய்து கொள்ளுங்கள்.

வெளிநாடுகளில் இருக்கின்ற கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பதிவர்கள் மற்றும் எழுத்தாளர்களும் தொடர்பு கொள்ளுங்கள்.

உங்கள் தொடர்புகளுக்கு
info@battinews.com
shanthruslbc@gmail.com

Blog Widget by LinkWithin