Friday, October 21, 2011

லிபியாவின் தேசியக்கொடியினை மாற்றியமைத்த கடாபி……

லிபியாவில், அண்மைய மாதங்களில் வெடித்த மக்கள் புரட்சியின் உச்சக்கட்டமாக சர்வாதிகாரி முஅம்மர் கடாபி நேற்றைய தினம் கொலைசெய்யப்பட்டதனைக் குறிப்பிடலாம்.



1951ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24ம் திகதி காலனித்துவ ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்ற லிபியா தேசத்தின் மன்னர் இத்திரிஸ்சின் ஆட்சியினை 1969ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1ம் திகதி கேணல் முஅம்மர் கடாபி தலைமையிலான கனிஷ்ட இராணுவ அதிகாரிகளால் இரத்தம் சிந்தாத புரட்சி மூலம் மன்னராட்சி கவிழ்க்கப்பட்டு 27வயதில் கேணல் முஅம்மர் கடாபி லிபியா நாட்டின் ஆட்சித் தலைவனாக முடிசூடிக்கொண்டான்.

ஆட்சிப் பொறுப்பினை கையகப்படுத்திய கேணல் முஅம்மர் கடாபி தனது ஆட்சிக்காலத்தில் லிபிய நாட்டின் தேசியக் கொடியில் பல்வேறு மாறுதல்களை ஏற்படுத்தினான்.

லிபியா நாட்டின் தேசியக்கொடி மாற்றியமைக்கப்பட்ட சந்தர்ப்பங்கள்:



சுதந்திர லிபியா தேசமானது தமது முதலாவது தேசியக்கொடியினை 1951ம் உள்வாங்கிக்கொண்டது. இந்த தேசியக்கொடியானது 1969ம் ஆண்டுவரையும் நடைமுறையிலிருந்தது.



1969ம் ஆண்டு ஆட்சியினைக் கைப்பற்றிய சர்வாதிகாரி கடாபி, சுதந்திர லிபியா தேசத்தின் தேசியக் கொடியினை மாற்றியமைத்தான். இந்த தேசியக்கொடியானது 1972ம் ஆண்டுவரை நடைமுறையிலிருந்தது.


1972ம் ஆண்டு லிபியா அரபு குடியரசு ஒன்றியத்தில் இணைந்ததையடுத்து லிபிய தேசத்தின் தேசியக் கொடியினை சர்வாதிகாரி கடாபி மீண்டும் மாற்றியமைத்தான். இந்த தேசியக்கொடியானது 1977ம் ஆண்டுவரை நடைமுறையிலிருந்தது.



சர்வாதிகாரி கடாபி, லிபியா தேசத்தின் தேசியக் கொடியினை மீண்டும் 1977ம் ஆண்டு மாற்றியமைத்து புதியதொரு தேசியக்கொடியினை அறிமுகப்படுத்தினான். இந்த தேசியக்கொடியானது முழுமையாக பச்சை நிறத்தினை மாத்திரம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டது. இந்த தேசியக்கொடியின் சிறப்பியல்பு யாதெனில்; தனது நாட்டின் தேசியக்கொடியில் வடிவமைப்புக்கள், சின்னங்கள், அல்லது ஏனைய விபரங்களின்றி முழுமையாக ஒரே வர்ணத்திலான(பச்சை) தேசியக்கொடியினை கொண்ட ஒரே நாடு லிபியாவாகும்.
பச்சை நிறமானது இஸ்லாம் மதத்தின் அடையாளமாகும், நீண்ட பக்தி மற்றும் மக்கள் அவர்களின் மதம் மீது கொண்ட மரியாதையினை வலியுறுத்துகின்றது.
அத்துடன் பச்சை நிறமானது லிபியா நாட்டின் தேசிய நிறமுமாகும்.

இந்த தேசியக்கொடியிலுள்ள பச்சை நிறமானது கடாபியின் பசுமைப் புரட்சியினைக் குறிப்பிடுவதாகும்.

சர்வாதிகாரி கடாபியின் மறைவுடன் லிபிய நாட்டின் 1951ம் ஆண்டிலிருந்து 1969ம் ஆண்டுவரை நடைமுறையிலிருந்த தேசியக்கொடியானது லிபியாவின் புதிய தேசியக்கொடியாக மீண்டும் புத்துயிர் பெறுகின்றது.

***

கடாபியுடன் தொடர்புடைய எனது முன்னைய பதிவு: உலகில் நீண்டகாலம் பதவிவகித்த ஆட்சியாளர்கள்....


***

2 comments:

EKSAAR said...

கத்தாபியின் வாழ்க்கையில் எல்லா ஆட்சியாளர்களைப்போலவும் சர்வாதிகாரம் நிறைந்திருந்தாலும் நாம் சகல நாட்டு தலைவர்களுக்கும் கொடுக்கும் மரியாதையை கொடுக்கவேண்டும். புஷ், ஒபாமாவுக்கு பயன்படுத்தாத அன் விகுதியை இன்னொருவர் மீது திணிக்கலாகாது.

கே.கே.லோகநாதன் - KK Loganathan [B.Com] said...

நண்பர்களே நன்றிகள் ........

Blog Widget by LinkWithin