Sunday, September 4, 2011

100 டெஸ்ட் வெற்றிகளில் பங்குபற்றி பொன்டிங் உலக சாதனை



இலங்கை, ஆஸி அணிகளுக்கிடையிலான காலி டெஸ்ட் போட்டியில் ஆஸி அணி 125 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 1வது டெஸ்ட் போட்டியினை தனதாக்கிக் கொண்டது, இதன் மூலம், அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ரிக்கி பொன்டிங் 100 டெஸ்ட் வெற்றிகளில் பங்கேற்று புதிய சாதனை நிகழ்த்தியுள்ளார்.

1995ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகம் பெற்ற பொன்டிங் இதுவரையும் 153 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார், இதில் 100 டெஸ்ட் போட்டிகளை ஆஸி அணி வெற்றியீட்டிள்ளது.

இதேவேளை, அதிக டெஸ்ட் வெற்றிகளைப்(48) பெற்ற அணித்தலைவராக ரிக்கி பொன்டிங் விளங்குகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

அதிக டெஸ்ட் வெற்றிகளில் பங்குகொண்ட வீரர்கள் விபரம் வருமாறு;
 ரிக்கி பொன்டிங் * 100 டெஸ்ட் வெற்றி(153 டெஸ்ட்) 65.36%
 சேன் வோர்ன் * 92 வெற்றி(145 டெஸ்ட்) 63.45%
 ஸ்ரிவ் வோ * 86 வெற்றி(168 டெஸ்ட்) 51.19%
 கிளென் மெக்ராத் * 84 வெற்றி(124 டெஸ்ட்) 67.74%
 அடம் கில்கிரிஸ்ட் * 73 வெற்றி(96 டெஸ்ட்) 76.04%
 மார்க் வோ * 72 வெற்றி(128 டெஸ்ட்) 56.25%
 மத்தியூ ஹெய்டன் * 71 வெற்றி(103 டெஸ்ட்) 68.93%
 மார்க் பவுச்சர் * 70 வெற்றி(139 டெஸ்ட்) 50.36%
 ஜஸ்ரின் லாங்கர் * 70 வெற்றி(105 டெஸ்ட்) 66.67%
 ஜக்ஸ் கலிஸ் * 69 வெற்றி(145 டெஸ்ட்) 47.59%


இதேவேளை, ஏனைய நாடுகள் சார்பாக அதிக டெஸ்ட் வெற்றிகளில் பங்காற்றிய வீரர்கள் விபரம் வருமாறு;
 விவ் ரிச்சர்ட்ஸ்(மே.தீவுகள்) 63 டெஸ்ட்
 சச்சின் டெண்டுல்கர்(இந்தியா) 61 டெஸ்ட்
 முத்தையா முரளிதரன்(இலங்கை) 54 டெஸ்ட்
 இன்சமாம்-உல்-ஹக்(பாகிஸ்தான்) 49 டெஸ்ட்
 அன்ரூ ஸ்ட்ரோஸ்(இங்கிலாந்து) 44 டெஸ்ட்
 ஸ்ரிபன் ப்ளமிங்(நியூசிலாந்து) 33 டெஸ்ட்

***

1 comment:

Nirosh said...

அருமையான அலசல் வாழ்த்துக்கள்...!
http://skavithaikal.blogspot.com/

Blog Widget by LinkWithin