Sunday, August 21, 2011

உலக அரசியல் வரலாற்றில் அதிகளவான அரசாங்கங்கள் ஆட்சி செய்த நாடு

சுவாரஷ்சியமான தகவல்களை பல்சுவைத் தகவல்களை கொண்ட பதிவு உங்களுக்காக…………………

 உலக அரசியல் வரலாற்றில் அதிகளவான அரசாங்கங்கள் ஆட்சி செய்த நாடாக பொலிவியா விளங்குகின்றது. 1825ம், ஸ்பெய்ன் நாட்டிலிருந்து சுதந்திரம் பெற்ற பொலிவியா நாட்டில் 200 இற்கும் அதிகமான அரசாங்கங்கள் ஆட்சி செய்துள்ளன. அதேவேளை, 1945ம் ஆண்டிற்குப் பிற்பாடு அதிகளவான அரசாங்கங்கள் ஆட்சி செய்த நாடாக இத்தாலி விளங்குகின்றது. 50 இற்கும் அதிகமான அரசாங்கங்களும், 20 இற்கும் அதிகமான பிரதம மந்திரிகளையும் இத்தாலி நாடு 1945ம் ஆண்டிற்குப் பிற்பாடு கண்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

 இந்தியாவின் தேசிய விலங்கு புலி(Panthera Tigris) என்பது நாமறிந்ததே. ஆனால் 1972ம் ஆண்டுவரையும் இந்தியாவின் தேசிய விலங்காக சிங்கமே விளங்கியது



 உலகில் அதிக நிறை கொண்ட வீட்டுப் பூனையாக ' ஹிம்மி ~ Himmy விளங்கியதாம். இதன் நிறை 21.3 கிலோகிராம் ஆகும். ஹிம்மி 1984ம் ஆண்டு இறந்துவிட்டது.



 ஒவ்வொரு துளி கடல் நீரிலும் சராசரியாக 1 பில்லியன் தங்க அணுக்கள் உள்ளதாம்.

 எலிகள் மிக விரைவாக இனப் பெருக்கம் செய்யக்கூடியவையாகும். இரண்டு எலிகள் சேர்ந்து 18 மாதங்களில், 1 மில்லியனுக்கும் அதிகமான வாரிசுகளை உருவாக்க கூடியவையாகும்.

***

Tuesday, August 9, 2011

உலகினை வாட்டி வதைக்கும் வறுமையும், பஞ்சமும்

அண்மைய நாட்களில் உலக ஊடகங்களில் வெளிவருகின்ற செய்திகள், ஆபிரிக்க நாடுகளான சோமாலியா, கென்யா, எத்தியோப்பியா, மற்றும் ஆபிரிக்க குடியரசு போன்ற நாடுகளின் மக்கள் உணவுப் பற்றாக்குறையினால் மிகவும் துன்பப்படுகின்றனர். சோமாலியா நாட்டில் நிலவுகின்ற உள் நாட்டுக்குழப்பங்கள் மக்களினை வாட்டி வதைக்கின்றன. உணவின்றி சின்னஞ்சிறு குழந்தைகள் பசியினைப்போக்க மண்ணினை உட்கொள்கின்றர் என செய்திகள் தெரிவிக்கினறன. சோமாலியா தேசத்தில் கடந்தாண்டு மட்டும் விலைவாசி மட்டும் 270 சதவீதம் உயர்வடைந்துள்ளதுடன், அங்கு தொற்று நோயும் ஏற்பட்டுள்ளதுடன் , வரட்சியின் காரணமாக 90% மான கால்நடைகளும் உயிரிழந்துவிட்டன. இதுபோன்ற நிலையே ஏனைய ஆபிரிக்க நாடுகளிலும் காணப்படுகின்றன.



செல்வந்தர்களே ஒரு கணமாவது எங்களை மனதில் கொள்; ஒரு வேளை உணவையாவது எமக்களிக்க முன் வாருங்கள்பசியினால் பாதிக்கப்பட்டுள்ள அன்புக்குழந்தைகளின் சார்பில் ஓர் அன்புக்குரல்………..


 ஐ.நா உணவு விவசாய நிறுவனத்தின் தகவல்களின் பிரகாரம், உலகளாவியரீதியில் 110கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையினர் பசி,பட்டினியின் காரணமாக ஏழ்மையில் வாடுகின்றனர். குறிப்பாக ஆசியா, மற்றும் பசுபிக் பிராந்திய நாடுகளில் 65கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையினரும், ஆபிரிக்காவின் சகாரா பாலைவனத்திற்கு தெற்கேயுள்ள நாடுகளில் 28கோடி மக்கள் தொகையினரும் பசி, பட்டினியின் காரணமாக ஏழ்மையில் வாடுகின்றனர்.

 பசி,பட்டினியின் காரணமாக வருடாந்தம் 15மில்லியன் குழந்தைகள் மரணிக்கின்றன.

 பசி, பட்டினியால் வாழும் மக்கள் தொகையினர் உலக சனத்தொகையில் ஆறில் ஒரு பங்கிற்கும் அதிகமாகும்.

 உலக மக்களில் 12 பேரில் ஒருவர் போசணைக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 5வயதுக்குட்பட்ட 160மில்லியன் குழந்தைகளும் உள்ளடங்குகின்றன. [மூலம்~ ஐ.நா உணவு, விவசாய அமையம்]

 நாளொன்றுக்கு சராசரியாக 1800 கலோரியினைவிடவும் குறைவான கலோரியினை உண்பவர்களே போசாக்கின்மையால் பாதிக்கப்படுகின்றார்கள்..; போசணைக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ள 5வயதுக்குட்பட்ட குழந்தைகளில், அரைப்பங்கினர் தெற்காசியாவிலும், மூன்றிலொரு பங்கினர் உப-சகாரா நாடுகளிலும் வாழ்கின்றனர்.

 உலகில், 120 கோடி மக்கள் நாளாந்தம் 1800 கலோரியினைவிடவும் குறைவாகவே உட்கொள்கின்றனர்.

 உலகில் அண்ணளவாக 183மில்லியன் குழந்தைகள் தமது வயதிற்கேற்ற நிறையினைக் கொண்டிருக்கவில்லை.

 உலகில், ஒவ்வொரு 6 செக்கன்களுக்கும் பசி,பட்டினியின் காரணமாக ஒருவர் இறக்கின்றார்.

 உலகில் 3பில்லியனுக்கும் அதிகமானவர்கள் நாளாந்தம் 2 அமெரிக்க டொலரினையே உழைக்கின்றனராம்.

***
Blog Widget by LinkWithin