Sunday, December 5, 2010

அமெரிக்காவின் ஒரேயொரு சமஷ்டி ஜனாதிபதி.......

உலகப் புகழ்பெற்றவர்கள் தொடர்பிலான சில சுவையான தகவல்கள் உங்களுக்காக.......

 1933ம் ஆண்டு "மிக்கி மவுஸ்" காட்டூன் கதாபாத்திரமானது, தனது விசிறிகளிடமிருந்து 800,000 கடிதங்களினைப் பெற்றுக்கொண்டது.




 மாவீரன் நெப்போலியன் தனது போர் திட்டங்களினை மணல் திட்டுக்களிலேயே மேற்கொள்வாராம்.

 கியூபாவில் சோசலிச ஆட்சியை நிறுவிய பெருமைக்குரிய புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோ ஆவார். இவர் 1944ம் ஆண்டு கியூபா நாட்டின் மிகச்சிறந்த பாடசாலை மெய்வல்லுன வீரராக தெரிவுசெய்யப்பட்டார்.


 மேரி ஸ்டூவட்(1542 – 1567), ஸ்கொட்லாந்து நாட்டின் இளவரசியாக முடிசூட்டப்பட்டபோது அவரின் வயது வெறும் 6 நாட்களேதான் ஆகும்.

 ஐக்கிய அமெரிக்க வரலாற்றில் சமஷ்டி கட்சியிலிருந்து ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட ஒரேயொருவர் ஜோன் அடம்ஸ்(1735-1826).... இவர் ஐ.அமெரிக்காவின் 2வது ஜனாதிபதியாவார்.

 விமானத்தினை உலகுக்கு அறிமுகப்படுத்திய ரைட் சகோதரர்களில் ஒருவராகிய ஓர்வில் ரைட், தன் வீட்டில் இருந்த கோழி இடும் முட்டைகளில் தொடர் இலக்கத்தினை எழுதுவாராம். பின்னர் கோழிகள் முட்டை இட்ட ஒழுங்கின்பிரகாரமே அவற்றினை உண்பாராம்.




 1558-1603ம் ஆண்டுவரை இங்கிலாந்து நாட்டின் மகாராணியாக விளங்கிய 1ம் எலிசபெத் ரோஜாப் பூக்கள் தொடர்பில் பயம் கொண்டவராம்.

***

2 comments:

வெற்றி நமதே said...

கேபிள் சங்கரின் போஸ்டர் திரை விமர்சனம்

கே.கே.லோகநாதன் - KK Loganathan [B.Com] said...

நன்றிகள் தமிழ் ரயில் ....

Blog Widget by LinkWithin