Thursday, November 4, 2010

உங்களுக்குத் தெரியுமா?............

நீரினை விடவும் சனிக்கிரகம் அடர்த்தி குறைந்ததாகும்.....
சனிக்கிரகத்தின் அடர்த்தியானது(0.687 g/cm3), நீரின் அடர்த்தியினை விடவும் குறைவாகும்(0.998 g/cm3). அதாவது நீரில் சனிக்கிரகத்தினை இட்டால் சனிக்கிரகமானது மிதக்கும் எனலாம். சனிக்கிரகத்தின் விட்டம் 120,536 km ஆகும்.



===============================================

வீதியின் குறுக்காக விமான ஓடுபாதைகள்
புகையிரதப்பாதைகளின் சந்திப்பு, அல்லது பஸ் பாதைகளின் சந்திப்பு அல்லது பாலங்களின் கீழே கப்பல் பாதைகளின் சந்திப்பு தொடர்பாகவே நாங்கள் கேள்விப்பட்டிருக்கின்றோம். அப்படியாயின் நீங்கள் விமானங்கள், வாகனப் போக்குவரத்துப்பாதையில் சந்திப்பது, குறுக்கிடுவது தொடர்பாக கேள்விப்பட்டதுண்டா?

ஆம்...... கீழே உள்ள படங்களில் வீதியின் குறுக்காக விமானம் தரித்திருப்பதன் காரணத்தினால் வாகனங்கள் காத்திருப்பதனை காண்கின்றீர்கள்.
ஆமாம்.........வீதியின் குறுக்கே காணப்படும் இந்த விமான ஓடுபாதைகள் ஜேர்மனி நாட்டில் காணப்படுகின்றதாம்.





===========================================

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியினை துவம்சம் செய்த இலங்கை அணி.......

நேற்று அவுஸ்திரேலியா, இலங்கை அணிகளுக்கிடையிலான Commonwealth Bank கிண்ணத்துக்கான ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி 01 விக்கட் வித்தியாசத்தில் மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானத்தில் வெற்றிபெற்று புதிய சாதனை படைத்தது.

340 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ஒரு கட்டத்தில் 8 விக்கட்களினை இழந்து 107 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தது. அந்தவகையில் 09 விக்கட்டில் அஞ்சலோ மத்தியூஸ்சுடன் ஜோடி சேர்ந்த வேகப் பந்துவீச்சாளர் லசித் மாலிங்க ஜோடி சாதனைமிகு 132 ஓட்டங்களினைப் பகிர்ந்து 27 ஆண்டுகால சாதனையினை முறியடித்தனர்.



இதற்குமுன்னர் இந்த சாதனையினை 1983ம் ஆண்டு 3வது உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுத்தொடரில் இந்திய அணியின் கபில்தேவ், மற்றும் சயீட் கிர்மானி ஆகியோர் வீழ்த்தப்படாத 126 ஓட்டங்களினை சிம்பாவே அணிக்கெதிராக மே.தீவுகளின் ரேன்பிரிட்ஜ் வெல்ஸ் மைதானத்தில் பெற்றமையே சாதனையாகப் பதிவாகியிருந்தது.

அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய லசித் மாலிங்க(56) , அஞ்சலோ மத்தியூஸ் (77*)ஆகியோர் அரைச்சதம் குவித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

வெற்றிக்குத் தேவையான ஓட்டத்தினை சாதனை நாயகன் முரளிதரன் பெற்றுக்கொண்டமை சிறப்பம்சமாகும்.

=========================================

தித்திக்கும் தீபத்திருநாள் வாழ்த்துக்கள்.......




தீபத்திருநாளாம் தீபாவளிப் பண்டிகையினை (05.11.2010) கொண்டாடும் அனைத்து நண்பர்களுக்கும் என் இனிய தீபத்திருநாள் வாழ்த்துக்கள்.....

***

7 comments:

Kandumany Veluppillai Rudra said...

தீபாவளி வாழ்த்துக்கள்! பதிவுகள் அருமை! தொடரட்டும் ....

அழகி said...

தீபாவளி வாழ்த்துக்கள்.

Ravi kumar Karunanithi said...

nalla padhivu.... wish u happy diwali....

எஸ்.கே said...

புதிய தகவல்கள்! நன்றி!
தங்களுக்கும் மற்றும் அனைவருக்கும் என் மனமார்ந்த தீபாவளி வாழ்த்துக்கள்...

Philosophy Prabhakaran said...

ம்ம்ம் சூப்பர்... இதை விடவும் ஆபத்தான ஓடுபாதைகள் உலகில் உள்ளன... அவை பற்றி நீங்கள் கூட மின்னஞ்சல் பெற்றுருப்பீர்கள் என்று நினைக்கிறேன்...

கே.கே.லோகநாதன் - KK Loganathan [B.Com] said...

நண்பர்களின் கருத்துரைகளுக்கும், தீபாவளி வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றிகள்.....

Ask said...

idu migavum vithiyaasamaana oodu pathaiyaaha ulladhu

Blog Widget by LinkWithin