Thursday, September 9, 2010

உடற் பருமனைக் குறைக்க உதவும் "தண்ணீர்"




ஆராய்ச்சியாளர்களின் ஆய்வின் பிரகாரம், உடற் பருமனாவது உலகில் மிகப் பெரிய சுகாதார அச்சுறுத்தலாக நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இதய நோய்கள் மற்றும் ஏனைய சுகாதாரப் பிரச்சினைகளுடன் தொடர்புபடுவதாக வகைப்படுத்தியுள்ளனர்.

அந்தவகையில் உடற்பருமனை குறைப்பதற்கான மிக இலகுவாக அருமருந்தாக "தண்ணீர்" விளங்குகின்றது என அமெரிக்க விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

தமது ஆய்வின் பிரகாரம், சாப்பாட்டுக்கு முன்னர் 2 குவளை நீரினை குடிப்பதன் மூலம் தமது உடற்பருமனைக் குறைக்கமுடியும் என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.


அவர்கள் தமது ஆய்வுக்காக, 55-75 வயதிற்கிடைப்பட்ட 48 பேரினை இரண்டு குழுக்களாக வகைப்படுத்தி குறைந்த கலோரிகளினை உள்ளடக்கிய உணவுகளினையே சாப்பிடச் செய்து; ஒரு குழுவினரை சாப்பாட்டு வேளைக்கு முன்னர் 2 குவளை நீரினை அருந்தச் செய்தும், மறு குழுவினரை அவ்வாறு நீரினை அருந்தச் செய்யாமலும் தமது ஆய்வினை மேற்கொண்டனர். 12 வாரங்களின் பின் மீண்டும் மேற்கொண்ட ஆய்வின் முடிவில், சாப்பாட்டுக்கு முன் 2 குவளை நீரினை அருந்தியவர்கள் 15.5 பவுண்ட்கள்(7கிலோ) நிறை குறைவாக இருந்தனர். அதேவேளை, சாப்பாட்டுக்கு முன் 2 குவளை நீரினை அருந்தாதவர்கள் 11பவுண்ட்கள்(5கிலோ) மாத்திரமே நிறை குறைவாக இருந்தனர்.


சாப்பாட்டு வேளைக்கு முன்னர் குளிர்பானங்களை அருந்துபவர்கள் உடற்பருமனைக் குறைக்கமுடியும் என்று நினைத்தால் அது தப்பு. ஏனெனில் குளிர்பானங்களில் கலோரியினை அதிகப்படுத்தக்கூடிய சக்கரை, கொழுப்பு போன்றவை குளிர்பானங்களில் உள்ளடங்கியுள்ளதனலாகும். ஆனால் நீரில் இவைகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மூன்று வேளை சாப்பாட்டுக்கு முன்னர் நீரினை அருந்தியவர்கள் 5 பவுண்ட்கள்(2.25கிலோ) நிறை குறைவாக இருந்தனர், இவர்கள் தாம் உள்ளெடுக்கும் நீரினை அதிகரிக்காதவர்கள் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சாப்பாட்டுக்கு முன்னர் எவ்வளவு நீரினை உள்ளெடுக்கின்றீர்களோ அதற்கேற்றளவில் உங்கள் உடற்பருமனைக் குறைக்கமுடியுமென்கின்றார்கள் ஆய்வாளர்கள்.

அப்படியே செலவில்லாத இந்த மருத்துவ முறையினை பின்பற்ற தயாராகிவிட்டீர்கள்தானே? .......

உடற்பருமன் குறைப்பு தொடர்பான எனது முன்னைய பதிவு; உடற் பருமனிலிருந்து போராட உதவும் "செத்தல் மிளகாய்"

***

08.09.2010 ~ என் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்த நண்பர்களுக்கு நன்றிகள் ...

****

3 comments:

Unknown said...

தகவலுக்கு நன்றிகள்

கே.கே.லோகநாதன் - KK Loganathan [B.Com] said...

நன்றிகள் நண்பரே ....

Assouma Belhaj said...

gou one frnd

Blog Widget by LinkWithin