Thursday, September 2, 2010

ஒலிம்பிக் சாம்பியனுக்கு ஹிட்லர் வழங்கிய ஓக் மர அன்பளிப்பு...!!!



1936ம் ஆண்டு 11வது ஒலிம்பிக் போட்டிகள் ஜேர்மனியின் பேர்லினில் நடைபெற்ற காலகட்டத்தில் ஜேர்மனியின் அதிபராக அடோல்ப் ஹிட்லர் ஆட்சி செய்தார். அந்த ஒலிம்பிக்கில் அதிதியாக அழைக்கப்பட்டவர் ஹிட்லர். அதிதியான ஹிட்லர், தங்கப்பதக்கம் வென்றவர்களுக்கு ஓக் மரக்கன்றுகளினை அன்பளிப்பாக வழங்கினார். அப்படி ஓக் மரக்கன்றினை பெற்றவர்களில் இங்கிலாந்தினைச் சேர்ந்த "ஹரோல்ட் விற்லொக்" அவர்களும் உள்ளடங்குகின்றார். ஹரோல்ட் விற்லொக், பேர்லின் ஒலிம்பிக்கில் 50 கிலோமீற்றர் நடைப்போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவராவார். விற்லொக், தனக்கு அன்பளிப்பாகக் கிடைத்த ஓக் மரக்கன்றினை வடக்கு லண்டனில் தான் கல்விகற்ற பழைய பாடசாலையில் நட்டார்.


ஹரோல்ட் விற்லொக்


இதன் காரணத்தினால் அந்த ஓக் மரத்துக்கு "ஹிட்லர் ஓக் மரம்"[“Hitler Oak”] என்ற செல்லப் பெயர் வழங்கப்பட்டு வந்தது. இது 70 ஆண்டுகளாக 50அடி நிலப்பரப்பில் வியாபித்திருந்தது. 2007ம் ஆண்டு இந்த மரத்தினை பங்கஸ் நோய் தாக்கியது, இதன் காரணமாக அங்கு கல்விபயில்கின்ற மாணவர்களுக்கு தீங்கு ஏற்படலாம் என்று கருதி இந்த ஓக் மரம் அங்கிருந்து வெட்டி அகற்றப்பட்டது. இந்த ஓக் மரமிருந்த இடத்தில் ஹரோல்ட் விற்லொக்கின் பேரன், ரோஸ் தனது வீட்டில் வளர்த்துவந்த ஒலிம்பிக் ஓக் மரத்திலிருந்து உருவாகிய மரக்கன்றுகளிலிருந்து ஒன்றை வழங்கினார். இப்பொழுது இந்த புதிய ஓக் மரத்தின் செல்லப் பெயர் "ஹிட்லர் ஓக் மரத்தின் மகன்" [“Son of Hitler Oak”] என்பதாக மாற்றமடைந்துவிட்டதாம்.

***

3 comments:

Sathish said...

நல்ல தகவல் லோகநாதன்

ஹிட்லரின் நாஜி படையினர் 2 -ம் உலகப்போரில் எடுத்த அரிய 200 படங்கள் ஒரே பதிவில் காண

http://eyesnotlies.blogspot.com/2010/09/in-world-war-2-rare-photos-taken-by.html

ஹிட்லரின் அரிய 400 படங்கள் ஒரே பதிவில் காண

http://eyesnotlies.blogspot.com/2010/07/400-hitlers-life-story-with-rare.html

சிங்கக்குட்டி said...

தகவல் பகிர்வுக்கு நன்றி!.

கே.கே.லோகநாதன் - KK Loganathan [B.Com] said...

நன்றிகள் நண்பர்களே .....

Blog Widget by LinkWithin